பாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம், வீடு, டாக்சி, பஸ், ரெஸ்டாரன்ட், மஸ்ஜித்... என எங்கே போனாலும், அங்கே ஒரு உடைத்த டிஷ்யூ பாக்ஸ் வைத்து இருக்கிறார்கள். பொதுச்சேவை..! நாம் அதில் இருந்து டிஷ்யூக்களை வேண்டியமட்டும் உருவிக்கொள்ளலாம்..!
பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.
.
ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கிவிட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டார்கள்..?
மிகவும் ஆழ்ந்து ஒரு தனிப்பதிவில் சிந்தித்து அலச வேண்டிய விஷயம் இது..!
இது ஒருபுறம் இருக்க, இந்த டிஷ்யூ பற்றி சில விஷயங்கள் அறிவோம். டிஷ்யூக்களில், Facial tissues, Paper Towels,Toilet Tissues...என்று சில வகைகள் உள்ளன.
மேலே முதல் படத்தில் காட்டப்பட்டுள்ள முதல் வகையான Facial tissues மிக மிக மிருதுவாகவும், மிக மிக எளிதில் நீரை உறிஞ்சக்கூடியதாகவும் இருக்கும். அதனால், முகம் துடைக்க இது பயன்படுகிறது. இதனால், இதில் ஒருவித நறுமண வாசனைகளையும் சேர்த்து இருப்பார்கள். பொதுவாக இவ்வகை கைக்கு அடக்கமான ஒரு ஜான்-அரை ஜான் நீள-அகல அளவு கொண்ட பெட்டிகளில்தான் வருகிறது. ஓர் உருவலில் ஒரு சதுர ஜான் டிஷ்யூவாக மட்டுமின்றி, அதிலேயே இரண்டு அடுக்கு அல்லது மூன்று அடுக்கு என்றும் வருகிறது. மற்ற டிஷ்யூக்களை விட இது விலை சற்று கூட. இதில் மிருதுத்தன்மைக்கும், நறுமனத்துக்கும், வெண்மைக்கும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது. நீள-அகலம், டிஷ்யூ எண்ணிக்கை மற்றும் மிருது தன்மை இவற்றுக்கு ஏற்ப விலை இருக்கிறது. இதில் மிருதுத் தன்மைக்கும் நறுமணத்துக்கும் வெண்மைக்கும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது
மற்றொரு வகை Paper Towels. இதுவும் ரோல்களில் சுற்றப்பட்டுத்தான் வருகின்றது. Facial Tissue அளவுக்கு நீரை உறிஞ்சாது என்றாலும் இது ToiletTissueவைவிட சற்று அழுத்தமானது. எளிதில் கிழியாததும் கூட. இதனை "கிச்சன் டவல்" என்றும் கூறுகிறார்கள். கழுவிய பாத்திரங்களை சுத்தப்படுத்தி பளபளப்பாக வைக்க, சமைக்கும் போது அவ்வப்போது கைத்துடைக்க என்று, சமையலறையில் உபயோகப்படுத்த ஏற்ற 'டிஷ்யூ பேப்பர் டவல்'தான்..! இது Facial tissues-ஐவிட மலிவானது..! ஒரு ஜான் அளவு நீள ரோலில் வருகிறது..!
.
அடுத்த Toilet Tissues வகையில், இது ஓரளவுதான் வேகமாக நீரை உறிஞ்சக் கூடியதாக இருக்கும். Facial tissues இல் உள்ளது போல அந்தளவு மிருதுத்தன்மை, நறுமணம் எல்லாம் இருக்காது. பெரும்பாலும் மேலைநாட்டு கழிவறைகளில் தண்ணீருக்கு பதில்' உபயோகிக்கப்படுகிறது. இங்கே ஈரக்கையை துடைக்க பயன்படுகிறது.இவை ரோல்களில் சுற்றப்பட்டு வருகின்றன. அரை ஜான் நீள ரோலில் கிடைக்கிறது.இது மற்றதை விட மலிவானது.
.
இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பயன்பாட்டு அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. வலதுகையை சாப்பிடவும் பிறருடன் கைகுலுக்கவும் உபயோகித்த மனிதன் தன் இடது கையை கழிவுகளை கழுவ உபயோகித்துக் கொண்டான். ஆனால், நாளடைவில் இடது கையால் சாப்பிடுவதுதான் ஃபேஷன் என்றாகிவிட... பலர் இரண்டு கையாலும் சாப்பிட ஆரம்பிக்க... அந்த கைக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை டிஷ்யூ பேப்பருக்கு தந்துவிட்டான் போலும்..!
விளைவு, துடைத்த டிஷ்யூ பேப்பரை வேஸ்ட் பின்னில் போட முடியாது என்பதால்... ஃபிளஷ் அவுட்டில் தான் அந்த பேப்பரை தண்ணீரோடு அப்புறப்படுத்த இயலும் என்றாகிவிட்ட நிலையில், அது ஃபிளஷ் அவுட் கழிவு குழாயை அடைத்துக்கொண்டு விடாமல், உடனடியாக கரைந்து இலகுவாகி சிதைந்து பிய்ந்து விட வேண்டும். அதற்கு ஏற்பத்தான் அந்த டாய்லட் டிஷ்யூ தயாரிக்க படுகிறது..! இந்நிலையில், 'கழிவுக்கு அனுப்பக்கூடிய பேப்பருக்குப்போய்... நிழலும் மழையும் குளிர்ச்சியும் தரும் சிறப்பு மிக்க மரத்தை அழிப்பதா..?' என்ற எண்ணம் மெத்தப்படித்தோரிடம் மேலோங்க... மேல்நாட்டினர் ஓர் உறுதி பூண்டனர்..!
.
அது என்ன உறுதி என்றால்... "இனி, நேரடியாக மரத்தின் wood pulp இலிருந்து Facial tissues மட்டுமே தயாரிக்கப்படலாம். மற்றபடி, உபயோகப்படுத்தப்பட்ட பழைய வேஸ்ட் பேப்பரில் இருந்துதான் இனி டாய்லட் டிஷ்யூக்கள் (Toilet Tissues) தயாரிக்கப்பட வேண்டும். கழிவை துடைத்து ஃப்ளஷ் அவுட் பண்ண பயன்படும் பேப்பர் செய்யவெல்லாம்... cellulose wood pulp வேண்டி மரங்கள் வெட்டபப்பட்டு அழிக்கப்படுவதை இனி ஒப்புக்கொள்ள / ஏற்க முடியாது" என்று ஒரு மனதாக முடிவு செய்து விட்டனர்..!
இம்முடிவு... விலை மலிவாகவும், எளிதில் கரையக்கூடியதாகவும், மரத்தை பாதுகாக்கவும் டாய்லட் டிஷ்யு செய்ய பயன்படுவதால் உலகம் முழுக்க டாய்லட் டிஷ்யூ உற்பத்தியில் Waste Paper Recycling முறை பின்பற்றப் படுகிறது..!
இந்நிலையில், மரங்களை அழித்து, அதிலிருந்து நேரடி Wood Pulp பயன்படுத்தப் பட்டு தயாரிக்கப் படுவதால் "Virgin Tissue Paper" என்று "பெருமையோடு"(!)வேறு கூறிக்கொள்ளும்... முகம் தொடைக்க என்று ஒதுக்கப்பட்ட இந்த Facial tissues Box தீர்ந்து விட்டால், அல்லது... அது விலை அதிகம் என்று வாங்காமல்... விலை குறைந்த டாய்லட் டிஷ்யூக்களை (தொழுகைக்கு ஒழு செய்து) முகம் தொடைக்க அல்லது மூக்கு சிந்த என்று சிலர் "இதுதாங்க சுத்தமானது..!" என்று பயன் படுத்துவார்கள்..! ஆனால்... எந்த டிஷ்யூ ஆனாலும், 'அவை எப்படி தயாரிக்க படுகின்றன, மெய்யாலுமே "Virgin Tissue Paper" தானா...' என்று... துவைத்து கைக்குட்டை உபயோகிப்போரை தூய்மை அற்றவர்கள் போல நினைக்கும் இவர்கள் அறிவார்களா..? :-)))
அவர்களுக்காக.... சுத்தம் என்று சொல்லி, இந்த 'டாய்லட் டிஷ்யூ'விலா முகம் துடைக்கிறீர்கள்..? என்ற கேள்வியுடன் சைனா வில் உள்ள ஒரு டாய்லட் டிஷ்யூ ஃபேக்டரி... photo gallery..!
பொதுவாகவே... வியர்வை துடைக்க, முகம்-கை கழுவி (மஸ்ஜிதுகளில் ஒழு செய்து) விட்டு துடைக்க அப்புறம் முக்கியமாக சளி பிடித்து தும்மல் போட்டுக்கொண்டு இருக்கும்போது சுகாதாரமாகவும், சுத்தமாகவும், அசூசை இல்லாமலும்... 'துடைத்டோமா.. வீசிநோமா.. சென்றோமா..' என்று மிகவும் 'டீசண்டான மேட்டராக' மக்களுக்கு உபயோகப்படுவது... கைக்குட்டையை விட எல்லா விதத்திலும் டிஷ்யூ பேப்பர்தான்.
ஏற்கனவே, 'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க... "கைக்குட்டை" என்ற ஒன்றை இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டிய நிலையை வேண்டுமென்றே உண்டாக்கிவிட்டு, ஏன் இப்படி ஒரேயடியாக மக்கள் தங்கள் தவறான புரிதலால் டிஷ்யூ பேப்பர் பக்கம் சாய்ந்து விட்டார்கள்..?
- படுவேகமாக பரவிவரும் இந்த "டிஷ்யூ பேப்பர் கலாச்சாரம்" எதிர்கால மனித நன்மைக்கு ஏற்றதா..?
- பேப்பர் செய்ய மரங்கள் வெட்டப்பட்டால் காடுகள் அழிவதால் மழை வருமா..?
- Deforestation ஆல் உலக வெப்பமயமாதல் உண்டாகுமே..?
- கைக்குட்டை என்ற ஒன்று இருக்க, டிஷ்யூ உபயோகிப்பது வீண் வெட்டி ஆடம்பர செலவு இல்லையா..?
- கழிப்பறை சென்று விட்டு தண்ணீர் விட்டு கழுவாமல் ஜஸ்ட் பேப்பரால் துடைப்பதுதான் நாகரீகமா..?
- அவசரத்தில் கழுவாமல் அப்படி துடைத்து விட்டு ஓடுவது சுகாதாரக் கேடல்லவா..?
- இப்படி ஊரெங்கும் பேப்பர் குப்பைகளை அதிகப்படுத்தும் இந்த டிஷ்யூவால் நேரடி & மறைமுக பாதிப்புகள் என்னவெல்லாம் உள்ளன..?
மிகவும் ஆழ்ந்து ஒரு தனிப்பதிவில் சிந்தித்து அலச வேண்டிய விஷயம் இது..!
இது ஒருபுறம் இருக்க, இந்த டிஷ்யூ பற்றி சில விஷயங்கள் அறிவோம். டிஷ்யூக்களில், Facial tissues, Paper Towels,Toilet Tissues...என்று சில வகைகள் உள்ளன.
மற்றொரு வகை Paper Towels. இதுவும் ரோல்களில் சுற்றப்பட்டுத்தான் வருகின்றது. Facial Tissue அளவுக்கு நீரை உறிஞ்சாது என்றாலும் இது ToiletTissueவைவிட சற்று அழுத்தமானது. எளிதில் கிழியாததும் கூட. இதனை "கிச்சன் டவல்" என்றும் கூறுகிறார்கள். கழுவிய பாத்திரங்களை சுத்தப்படுத்தி பளபளப்பாக வைக்க, சமைக்கும் போது அவ்வப்போது கைத்துடைக்க என்று, சமையலறையில் உபயோகப்படுத்த ஏற்ற 'டிஷ்யூ பேப்பர் டவல்'தான்..! இது Facial tissues-ஐவிட மலிவானது..! ஒரு ஜான் அளவு நீள ரோலில் வருகிறது..!
.
.
விளைவு, துடைத்த டிஷ்யூ பேப்பரை வேஸ்ட் பின்னில் போட முடியாது என்பதால்... ஃபிளஷ் அவுட்டில் தான் அந்த பேப்பரை தண்ணீரோடு அப்புறப்படுத்த இயலும் என்றாகிவிட்ட நிலையில், அது ஃபிளஷ் அவுட் கழிவு குழாயை அடைத்துக்கொண்டு விடாமல், உடனடியாக கரைந்து இலகுவாகி சிதைந்து பிய்ந்து விட வேண்டும். அதற்கு ஏற்பத்தான் அந்த டாய்லட் டிஷ்யூ தயாரிக்க படுகிறது..! இந்நிலையில், 'கழிவுக்கு அனுப்பக்கூடிய பேப்பருக்குப்போய்... நிழலும் மழையும் குளிர்ச்சியும் தரும் சிறப்பு மிக்க மரத்தை அழிப்பதா..?' என்ற எண்ணம் மெத்தப்படித்தோரிடம் மேலோங்க... மேல்நாட்டினர் ஓர் உறுதி பூண்டனர்..!
.
அது என்ன உறுதி என்றால்... "இனி, நேரடியாக மரத்தின் wood pulp இலிருந்து Facial tissues மட்டுமே தயாரிக்கப்படலாம். மற்றபடி, உபயோகப்படுத்தப்பட்ட பழைய வேஸ்ட் பேப்பரில் இருந்துதான் இனி டாய்லட் டிஷ்யூக்கள் (Toilet Tissues) தயாரிக்கப்பட வேண்டும். கழிவை துடைத்து ஃப்ளஷ் அவுட் பண்ண பயன்படும் பேப்பர் செய்யவெல்லாம்... cellulose wood pulp வேண்டி மரங்கள் வெட்டபப்பட்டு அழிக்கப்படுவதை இனி ஒப்புக்கொள்ள / ஏற்க முடியாது" என்று ஒரு மனதாக முடிவு செய்து விட்டனர்..!
இம்முடிவு... விலை மலிவாகவும், எளிதில் கரையக்கூடியதாகவும், மரத்தை பாதுகாக்கவும் டாய்லட் டிஷ்யு செய்ய பயன்படுவதால் உலகம் முழுக்க டாய்லட் டிஷ்யூ உற்பத்தியில் Waste Paper Recycling முறை பின்பற்றப் படுகிறது..!
இந்நிலையில், மரங்களை அழித்து, அதிலிருந்து நேரடி Wood Pulp பயன்படுத்தப் பட்டு தயாரிக்கப் படுவதால் "Virgin Tissue Paper" என்று "பெருமையோடு"(!)வேறு கூறிக்கொள்ளும்... முகம் தொடைக்க என்று ஒதுக்கப்பட்ட இந்த Facial tissues Box தீர்ந்து விட்டால், அல்லது... அது விலை அதிகம் என்று வாங்காமல்... விலை குறைந்த டாய்லட் டிஷ்யூக்களை (தொழுகைக்கு ஒழு செய்து) முகம் தொடைக்க அல்லது மூக்கு சிந்த என்று சிலர் "இதுதாங்க சுத்தமானது..!" என்று பயன் படுத்துவார்கள்..! ஆனால்... எந்த டிஷ்யூ ஆனாலும், 'அவை எப்படி தயாரிக்க படுகின்றன, மெய்யாலுமே "Virgin Tissue Paper" தானா...' என்று... துவைத்து கைக்குட்டை உபயோகிப்போரை தூய்மை அற்றவர்கள் போல நினைக்கும் இவர்கள் அறிவார்களா..? :-)))
அவர்களுக்காக.... சுத்தம் என்று சொல்லி, இந்த 'டாய்லட் டிஷ்யூ'விலா முகம் துடைக்கிறீர்கள்..? என்ற கேள்வியுடன் சைனா வில் உள்ள ஒரு டாய்லட் டிஷ்யூ ஃபேக்டரி... photo gallery..!
Thanks for these References:-
57 ...பின்னூட்டங்கள்..:
கதை கந்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... இனி எதைதான் நம்புவதோ...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)))
நல்ல பதிவு.. அப்படியே பக்கத்தில் இருக்கும் சீனித் தொழிற்சாலை, அரிசி ஆலை மற்றும் உப்பலங்களைப் பார்த்துவிட்டு வந்து கொஞ்சம் சொல்லுங்களே..:)
வெளிநாட்டிலிருக்கும் சகோக்கள் இங்கே ஊர் பக்கம் வரும்போது வாங்கி வரும் பொருட்களில் இப்பல்லாம் பிரதானமாக இருப்பது இந்த டிஷ்யூ பேப்பர்கள்தான். விளைவு.. இங்கேயும் டிஷ்யூ கலாச்சாரம் வேகமா பரவிக்கிட்டு இருக்கு!
யோசிக்க வைக்கும் நல்ல பதிவுக்கு நன்றி சகோ.!
யாரும் யோசிக்காத மிக மிக பயனுள்ள பதிவு சகோ...நாம இதெல்லாம் பயன்படுத்தறது இல்லைனாலும் விழிப்புணர்வு பதிவு.
விழிப்பூட்டும் பதிவு.
ஸலாமுன் அலைக்கும்
வித்தியாசமான செய்தி
இதை அறியாமல் எத்தனை நபர்கள் உபயோகிக்கிறார்கள் ஹிஹிஹி
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான தகவல் நன்றி
சலாம் சகோ ஆஷிக்!
விழிப்புணர்வூட்டும் பதிவு. நான் இதுவரையில் டிஸ்ஸூ பேப்பருக்காக ஒரு ரியால் செலவு செய்தது இல்லை. இன்றும் கைக்குட்டைதான். 5 கைக்குட்டைகளை வைத்துக் கொண்டு தினமும் ஒவ்வொன்றாக துவைத்து வைத்து விடுவேன். இதுதான் சுகாதாரமும் கூட.
அருமையான தகவல்...எனக்குத்தெரிந்த சீன நண்பரிடம் கேட்ட போது...சீனாவில் 'கழுவுகிறவர்கள்' எல்லாம் ஏழைகளாம்.அவர்களை கேவலமா பார்ப்பார்களாம்.ஆனால் டிஷ்யு யுஸ் பண்ணீட்டு கையைக்கூட கழுவாமல் வரும் ஜென்மங்கள் இது...ஆத்து நெறைய தண்ணி போனாலும் நாய் நக்கிதான் குடிக்கும் னு சொல்வாங்கள..அது போல..
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
//'பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே' என்ற உலக மக்களின் கவலையில் நாம் ஐக்கியமாகி இருக்க...//
யோசிக்க வேண்டிய விஷயம்...
விழிப்புணர்வூட்டும் பதிவுக்கும், போட்டோ கேலரி பகிர்வுக்கும் நன்றி சகோ
விளக்கத்துடன் பதிவுக்கு நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
டிஷ்யூ பேப்பரின் வெண்மைக்கு பின்னால் இப்படி ஒரு அழுக்கா? குமட்டல்தான் வருகிறது.
இதை எச்சரிகை என்பதா? விழிப்புணர்வு என்பதா?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
மீண்டும் ஒரு முகம் சுழிக்க வைக்கும் பதிவு!
தப்பா நினைக்காதீங்க, இனி டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தும் போதெல்லாம் இந்த பதிவு நினைவுக்கு வந்து "இதையா நாம் பயன்படுத்த வேண்டும்?" என்று முகம் சுழிக்க வைக்கும் பதிவு என்று சொல்ல வந்தேன்.
//துடைத்த டிஷ்யூ பேப்பரை வேஸ்ட் பின்னில் போட முடியாது என்பதால்... ஃபிளஷ் அவுட்டில் தான் அந்த பேப்பரை தண்ணீரோடு அப்புறப்படுத்த இயலும் என்றாகிவிட்ட நிலையில், அது ஃபிளஷ் அவுட் கழிவு குழாயை அடைத்துக்கொண்டு விடாமல், உடனடியாக கரைந்து இலகுவாகி சிதைந்து பிய்ந்து விட வேண்டும். அதற்கு ஏற்பத்தான் அந்த டாய்லட் டிஷ்யூ தயாரிக்க படுகிறது..!//
என்னமா யோசிக்கிறாய்ங்க..?
டிஷ்யூ பேப்பர் என்றில்லை, சகோ. jiff0777 சொன்னது போல பல பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளை பார்த்தால் நாம் அதிகமான பொருட்களை பயன்படுத்த முடியாது.
அருமையான மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு . நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சமூக நலனில் அக்கறைக்கொண்ட மற்றுமொரு பதிவு. நானும் அதிகமாக டிஸ்யூ பேப்பர்களை (டாய்லெட்டில் அல்ல) பயன்படுத்த கூடியவன் தான்.
சிந்திக்கிறேன் இனி....
ஸ்பெஷல் தாங்கள் பார் போட்டோ கேலரி
சிறப்பானதொரு பகிர்விற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
அலசல் பதிவு. அருமையாக அனைத்து தகவல்கள், புகைப்படங்களுடன் கூடிய பதிவு. நன்றி சகோ!
மரத்தை வளர்ப்போம் மானுடம் காப்போம், காகிதம் தவிர்ப்போம் கழிவுகளை குறைப்போம்.
மாஷா அல்லாஹ் இந்த செய்தி நிறைய மக்களை சென்று அடைந்துள்ளது செம ஹிட்
@ஜெய்லானி///இனி எதைதான் நம்புவதோ...!!///---டாய்லட் டிஷ்யூவில் ஆசை ஆசையாய் (?!) முகம் துடைத்த, பேதை நெஞ்சத்தின் புலம்பல்...? ஹா...ஹா...ஹா...
@jiff0777//நல்ல பதிவு..//--நன்றி சகோ.ஜிஃப்.
//சீனித் தொழிற்சாலை, அரிசி ஆலை மற்றும் உப்பலங்கள்//--- இவை இங்கே ஒப்பு நோக்கப்படுவதுக்கு... 'தொழிற்சாலை தூய்மை குறித்தான பதிவு' இது அல்லவே சகோ.ஜிஃப். தூய்மையான தொழிற்சாலையில் நடந்தாலும் கழிவு காகித மறுசுழற்சி முறையே இப்படித்தானே சகோ இருக்கும்..?
@jiff0777இப்பதிவின் முதன்மை நோக்கம்:-
===>முதலில் facial tissue க்காக காடுகள் அழிப்பதை எதிர்ப்போம்.
அடுத்து,
===>கழிவுக்காகிதம் ரீசைக்கிள் பண்ணி செய்யப்படும் toilet tissue... துவைத்த கைக்குட்டையை விட எவ்விதத்தில் தூய்மையானது என்று, "அதுதான் சுத்தமானது" என்று நம்பும் மக்களிடம் கேள்விக்கு உட்படுத்துவோம்.
பிறகு,
===>டாய்லட்டில் 'துடைப்பதை' விட தண்ணீரால் கழுவதுதான் சுத்தமானதும் சுகாதாரமானதும் என்று மேலை நாட்டு கலாச்சார மக்களிடம் சொல்வோம்.
அப்புறம்,
===>கிச்சனில் paper towel டிஷ்யூக்கு பதில் சுத்தமான துணி டவல்... உபயோகபடுத்துவதை ஊக்குவிப்போம்.
இந்த வரிசையில்... ===>டிஷ்யூவுக்கென்று ஒரு சில இடங்களில் துணிக்கு அவசிய மாற்றாக மிகக்குறைந்தஅவசியங்கள் கண்டிப்பாக உள்ளன. அதற்காக மட்டும் டிஷ்யுக்களை அனுமதிப்போம்.
இறுதியாக,
===>இந்த வகை அவசிய டிஷ்யு தயாரிக்கப்படும் டிஷ்யூ ஃபேக்டரியில் தூய்மை பற்றி பிரஸ்தாபிப்போம் சகோ.ஜிஃப்0777..! :-)))
@தமிழ் மீரான்///இங்கேயும் டிஷ்யூ கலாச்சாரம் வேகமா பரவிக்கிட்டு இருக்கு! ///
---முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும் சகோ.தமிழ் மீரான். வளர விட்டுவிட்டால் ஒழிப்பது ரொம்ப கஷ்டம்..!
@சதீஷ் செல்லதுரை///யாரும் யோசிக்காத... ...விழிப்புணர்வு பதிவு///---நன்றி சகோ.சதீஷ்..!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
வீட்ல இருக்கும் டிஸ்யூ பாக்ஸ பார்க்கும் போது அருவெறுப்பா இருக்கு இப்போ... :( :(
அருமையான பதிவுக்கு நன்றி சகோ
சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.. நல்ல பகிர்வு
டிஸ்யூ பேப்பர் தரமற்றதாக இருக்கும் வேளையில் முகத்தில் தோல் நோய்கள் வரலாம்...!கைக்குட்டை சிறந்தது....விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!
unmaiyaana pathivu.........
மிக அருமையான விழிப்புணர்வுப்பதிவு சகோ..
இனி பழயபடி கர்சீஃபை பேண்ட் பாக்கெட்டில் சொருவிக்க்கொண்டுதான் திரியனுமா? என்ன செய்ய சுகதாரமா இருக்கனும்னா செஞ்சுதானே ஆகணும். :)
SALAM,
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி, அறியாத பல விசயங்களை இதன்மூலம் அறிந்துகொண்டேன்.....நடைமுறையில் செயல்படுத்த இன்ஷா அல்லாஹ் முயற்சிக்குறேன்
புதிய வரவுகள்:
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!,
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
சிந்திக்க வைக்கும் பதிவு ! படங்கள் அருமை ! நன்றி சார் !
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்),
அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான பயண்யுள்ள பதிவு சகோதரே. நன்றி
@NIZAMUDEEN//விழிப்பூட்டும் பதிவு.//---நன்றி சகோ.NIZAMUDEEN
@Rabbaniவ அலைக்கும் சலாம் சகோ.ரப்பானி.
அறிந்த பின்னும் உபயோகிப்பவர்கள் இருக்கிறார்களே... அவர்களை என்ன சொல்ல..!
@Mohamedali kollapuramவ அலைக்கும் சலாம்
//அருமையான தகவல்//---நன்றி சகோ.Mohamedali.
@சுவனப் பிரியன்வ அலைக்கும் சலாம்
//நான் இதுவரையில் டிஸ்ஸூ பேப்பருக்காக ஒரு ரியால் செலவு செய்தது இல்லை. இன்றும் கைக்குட்டைதான்.//---உலகுக்கு சேவை செய்து கொண்டு உள்ளீர்கள் சகோ..! இறைவன் அருள் கிட்டட்டுமாக..!
@Manimaran//அருமையான தகவல்...//---நன்றி சகோ.Manimaran.
@ஆமினாவ அலைக்கும் சலாம்
//யோசிக்க வேண்டிய விஷயம்...//---யோசிக்க வைப்பதே நம் நோக்கம் சகோ.ஆமினா..!
@விக்கியுலகம்//விளக்கத்துடன் பதிவு//---நன்றி சகோ.விக்கி.
@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் சலாம் வரஹ்...
சகோ.மு.ஜபருல்லாஹ்...//இதை எச்சரிகை என்பதா? விழிப்புணர்வு என்பதா?//---மரம் அழித்து முகம் துடைக்கும் டிஷ்யூ -எச்சரிக்கை..! கழிவு காகிதங்கள் சுழன்று வரும் டாய்லட் டிஷ்யூ - விழிப்புணர்வு..! :-)
@Abdul Basithவ அலைக்கும் சலாம் வரஹ்...
//இனி டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தும் போதெல்லாம் //---இன்னும் இந்த எண்ணம் வேறு இருக்கா சகோ.அப்துல் பாஸித்..? சொன்னதை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கலாமோ..?
//பல பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளை பார்த்தால் நாம் அதிகமான பொருட்களை பயன்படுத்த முடியாது.//--- 'தொழிற்சாலை தூய்மை குறித்தான பதிவு' இது அல்ல சகோ.அப்துல் பாஸித்.
மரங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதும்..... 'சுத்தம் எதில்' என்ற சரியான புரிதலும்...... தான் இந்த பதிவு சகோ..!
@Gnanam Sekar//அருமையான மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு//---நன்றி சகோ.Gnanam Sekar.
@G u l a mவ அலைக்கும் சலாம் வரஹ்...
//சிந்திக்கிறேன் இனி....//---ஜஸாகல்லாஹ் க்ஹைரன் சகோ.G u l a m.
@Atchaya//அருமையாக அனைத்து தகவல்கள், புகைப்படங்களுடன் கூடிய பதிவு.//---நன்றி சகோ.Atchaya..!
@Abdul Guthoose/guthosah//மரத்தை வளர்ப்போம் மானுடம் காப்போம், காகிதம் தவிர்ப்போம் கழிவுகளை குறைப்போம்.//---மிக அருமையான சுலோகன் சொன்னதுக்கு மிகவும் நன்றி சகோ.Abdul Guthoose.
@Rabbani//இந்த செய்தி நிறைய மக்களை சென்று அடைந்துள்ளது//---அல்ஹம்துலில்லாஹ்..! சென்றடைந்த இடத்தில் எல்லாம் மனமாற்றம் வந்தால் மிக்க மகிழ்ச்சி சகோ.Rabbani..!
@ஷர்மிளா ஹமீத்வ அலைக்கும் சலாம் வரஹ்...
//அருமையான பதிவு//--- நன்றி சகோ.ஷர்மிளா ஹமீத்.
@சிநேகிதி//சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.. நல்ல பகிர்வு//---நன்றி சகோ.சிநேகிதி.
@வீடு சுரேஸ்குமார்//டிஸ்யூ பேப்பர் தரமற்றதாக இருக்கும் வேளையில் முகத்தில் தோல் நோய்கள் வரலாம்...!//---நிச்சயமாக சரியான பாயின்ட்..!
இதற்கு தீர்வாக... மருத்துவ ரீதியாக, டிஷ்யூவை ஏதும் ஸ்டெரிலைஸ் பண்ணுகிறார்களா என்று தெரியவில்லை சகோ.சுரேஸ்குமார்...! எத்தனை பேர்கள் பண்ணுவார்களோ..? இதற்கான தரக்கட்டுப்பாடு என்ன..? ஏதும், சொல்லப்படுவது இல்லை..!
//கைக்குட்டை சிறந்தது....விழிப்புணர்வு பதிவு//---நன்றி சகோ.சுரேஸ்குமார்
@கவிதை நாடன்//unmaiyaana pathivu.........//---நன்றி சகோ.கவிதை நாடன்.
@Syed Ibramsha//இனி பழயபடி கர்சீஃபை பேண்ட் பாக்கெட்டில் சொருவிக்க்கொண்டுதான் திரியனுமா? என்ன செய்ய சுகதாரமா இருக்கனும்னா செஞ்சுதானே ஆகணும். :)//---சுகாதாரம் மட்டுமல்ல சகோ. இப்ராம்ஷா நம் இலக்கு..! எவரும் உபயோகிக்காவிட்டால்... அவ்வளவு மரம் காக்கப்படுகிறது சகோ..!
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்வ அலைக்கும் சலாம்
//நடைமுறையில் செயல்படுத்த இன்ஷா அல்லாஹ் முயற்சிக்குறேன்//---நன்மையை நாடும் தங்களுக்கு இறையருள் என்றென்றும் கிட்ட பிரார்த்திக்கிறேன்... சகோ.திரு.முஸ்லிம்.
@திண்டுக்கல் தனபாலன்//சிந்திக்க வைக்கும் பதிவு ! படங்கள் அருமை ! நன்றி சார் !//---நன்றி சகோ.தனபாலன்.
@Nizamவ அலைக்கும் சலாம்
//அருமையான பயண்யுள்ள பதிவு//---நன்றி சகோ.Nizam
தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் பின் ஊட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்...!
Adhaane
என் கைலியே எனக்கு இருக்க 'இந்த' டிஷ்யூ' எதற்கு!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!