'Bollywood' என்றழைக்கப்படும் ஹிந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் என்பவர், 'சத்யமேவ ஜெயதே' எனும் பெயரில் 'ரியாலிட்டி ஷோ' என்ற வகைப்படும்... சமூக விழிப்புணர்வை தூண்டும் ஒரு நிகழ்ச்சியை ஸ்டார் தொலைக்காட்சியில் நடத்தி வருவது... பொதுவாக தற்போது பல தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி... ஏதோ நல்ல நிகழ்ச்சிதான்..! ஆனால்.... அதை நடத்துபவர்..?!?!?
வெகுஜன ஊடகங்களில் தொலைக்காட்சியின் தாக்கம் முக்கியமானது. பெரும்பாலும் இது ஒரு நல்ல சமூக வாழ்வியலுக்கு வழிகாட்டாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் ஆதரிக்கும் என்றாலும், இதன் மூலமாகவும் சிலநேரம் ஒரு சில நல்ல நிகழ்ச்சிகளை நடத்திக்காட்ட முடியும் என்பதற்கு மேலும் ஓர் உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
கடந்த மாதம் முதல்... வாராவாரம் நடந்து வரும் இந்த தொடர் நிகழ்ச்சியில்... வாரம் ஒரு சமூக தீமையை எடுத்துக்கொண்டு, அது பற்றி அலசுகிறார் அமீர்கான். "பெண் சிசுக்கொலை", "சிறுவர் பாலியல் பலாத்காரம்", "இந்தியாவில் உள்ள வரதட்சணை முறை", "மருத்துவ துறையின் கள்ளத்தனம்"... இப்படியாக தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது..!
இந்நிகழ்ச்சியில்... மேற்படி சமூக தீமையால் பாதிக்கப்பட்டவர், பொறுப்பில் இருந்து அத்தீமையை நிவர்த்தி செய்து இருக்கக்கூடியவர், பிரச்சினையை பற்றி அறிந்தவர்... தெரிந்தவர்... என சகலரும் வந்து அவர்களின் கருத்தை அமீர்கானின் கேள்விக்கு பதிலாக சொல்கிறார்கள்..! ஆக ஒரு நல்ல விஷயத்தைத்தான் முன்னெடுத்து செய்கிறார் அமீர்கான். ஓகே..!
நல்லதோ கெட்டதோ பணத்துக்காக எதையும் செய்யும் சினிமா நடிகர்தான் அமீர்கான் என்றாலும், ஓரளவுக்கு சமூக அக்கறை உள்ளவர் போல இப்போது நடந்து கொள்கிறார்..! இந்த டிவி நிகழ்ச்சியே கூட டி.ஆர்.பி ரேட்... அப்புறம், அதன் மூலம் வரும் வியாம்பர வருவாய்... ஆகிய இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தந்து... சம்பந்தப்பட்ட அமீர்கான் மற்றும் டீவி ஆகியோர் இலாபம் கொழிக்கும் வரைதான் இந்த 'சமூக அக்கறை' டிவியில் ஓடும் என்றாலும், அதுவரையில் இதனூடே இவர்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்துக்கு அவசியமான நல்ல சிந்தனையை & நல்ல படிப்பினையை & நல்ல கருத்தை ஊட்டினால்... நமக்கு மிகவும் மகிழ்ச்சிதான்..!
முதல் மூன்று வாரம் சாதாரணமாக சென்று கொண்டிருந்த இந்த தொடரானது... மருத்துவ துறையையும் அதில் நடைபெறும் கள்ளத்தனங்களையும் ஆதார-சாட்சியோடு தொட்டவுடன் கன்னாபின்னா வென்று சூடு பிடித்து... செய்தி ஊடகங்களில் எல்லாம் வந்து... எனக்கும் தெரியவந்து(!)... விளைவு... தொலைகாட்சி டிஆர்பி ரேட்டில் எகிறி விட்டது இந்த நிகழ்ச்சி..!
அந்த குறிப்பிட்ட மருத்துவ கள்ளத்தன எபிசோடில்... சிறு பிரச்னைகளுடன் வரும் நோயாளிகளிடம் பல்வேறு இல்லாத வியாதிகளை சொல்லி பணம் கறக்கும் பணவெறி மருத்துவர்களை பற்றியும், மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனம் குறித்தும் அந்த சத்திய மேவ ஜெயதே எபிசோடில் அமீர்கான் காட்டியிருந்தார். இதுகண்டு இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், 'மருத்துவதுறையை அமீர்கான் கேவலப்படுத்துவதாகவும் உடன் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரித்தது.
இது குறித்து விளக்கமளித்த ஆமிர்கான், மருத்துவ துறையின் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் நல்ல மருத்துவர்களை தாம் கேவலப்படுத்தவில்லை என்றும் தாம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் வழக்கை சந்திக்க தயார் என்றும் அமீர்கான் கூறியுள்ளார். உண்மையில் இத்தகைய முறைகேடான மருத்துவர்கள் தாம் மருத்துவதுறையை கேவலப்படுத்துவதாகவும் ஆமிர்கான் தெரிவித்தார்.
மேற்படி அமீர்கானின் இந்த வாதம் சரியானதுதான்..! ஆனால், அதை அமீர்கான் சொல்லலாமா..? அதற்கு தகுதி உள்ளதா..?
"ஒரு துறையில் உள்ள ஒருவர் பிறிதொரு துறையினரை பற்றி குற்றம் சொல்வதற்கு முன்னர், தான் இருக்கும் துறை சுத்தமானதா..? குற்றம் அற்றதா..? நேர்மையானதா..? ஒழுக்கமானதா..? தனது துறையால் சமூகத்துக்கு நன்மை விளைகிறதா..? அதில் இருக்கும் தான் சரியாகத்தான் வாழ்ந்து வருகிறோமா..? ---என்று, இதை எல்லாம் சிந்திக்க வேண்டாமா..?
இவற்றுக்கு எல்லாம் பதில் 'இல்லை'... 'இல்லை'... 'இல்லை'... என்றே வருமாயின்... முதலில் தானும் தன்னை சரி செய்து கொண்டு... தான் சார்ந்த துறையை சுத்தப்படுத்தி விட்டு... (அவ்ளோ எல்லாம் முடியாது எனில் அட்லீஸ்ட்...) தனது துறையின் தவறுகளை- குற்றங்களை- ஒழுக்கக்கேடுகளை- கள்ளத்தனத்தனங்களை- போலித்தனத்தை-எல்லாம் சிறிதாவது ஏதோ ஒரு வாரம் சத்தியமேவ ஜெயதே -வில் விமர்ச்சித்து விட்டு, அதற்கு அப்புறம் எங்களை சொல்"
---என்று இதுவரை விமர்சிக்கப்பட்டவர்கள் இவரிடம் கேட்டால் என்ன பதில் உள்ளது அமீர்கானிடம்..?
அதுமட்டுமல்ல... "இவ்வளவு சமூக அக்கறை உள்ளவர், நடிகையின் ஆடை குறைப்பு ஆபாசம், பெண்கள் மீதான பாலியல் வக்கிரம், அடிதடி வெட்டு குத்து இரத்தம் சொட்டும் வன்முறை, அசிங்கமான உடல் அசைவுகள் கொண்ட சினிமாபாடல் டான்ஸ் ஒழுங்கீனம், இரட்டை அர்த்த கெட்டவார்த்தை வசனங்கள், அவ்வப்போது சிகரட்/தண்ணி/சூதாட்டம் போன்ற கெட்ட செயல்கள் புரிதல் ஆகியன நீக்கமற எங்கும் நிறைந்து காணப்படும் தற்கால சினிமாவில் அல்லவா உள்ளது இவரின் முதலீடு..? இன்னும் இதில் மட்டும் நடிப்பது எங்ஙனம் தகும்..? எப்படி நேர்மையாகும்..?" என்று யாராவது... இல்லை... நானே கேட்டால் என்ன பதில் உள்ளது அமீர்கானிடம்..?
'அப்படித்தான் சினிமா இருக்கும்; அப்படித்தான் நடிப்பார்' எனில், இப்படியான நிகழ்ச்சி நடத்த அவருக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை எனலாம்..!
'அப்படித்தான் சினிமா இருக்கும்; அப்படித்தான் நடிப்பார்' எனில், இப்படியான நிகழ்ச்சி நடத்த அவருக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை எனலாம்..!
இதுபோன்ற சினிமாவான சமூக தீமையை ஒருபுறம் ஆதரித்துக்கொண்டு... மறுபுறம் சமூக தீமையை எதிர்த்து 'சத்தியமேவ ஜெயதே' என்று கூறிக்கொண்டு இருந்தால் அது அப்பட்டமான போலித்தனம் இல்லையா...? சினிமாவுக்கு வெளியேயும் எதற்கு இந்த இரட்டைவேஷம்..?
மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து- மது விலக்கு குறித்து- விஜய் மல்லையா மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால்... நாம் என்ன சொல்வோம்..? "முதலில் நீ உனது பிராந்தி-விஸ்கி-ரம்-பீர் ஃபேக்டரியை மூடு; அப்புறமா வந்து எங்களுக்கு அறிவுரை சொல்லு.." என சொல்ல மாட்டோமா..?
அதேதானே... இங்கே..!? திரைத்துறையில் இல்லாத சிறார்/பெண்கள் பாலியல் வக்கிரமா மற்ற இடத்தில் உள்ளது..? அங்கே இல்லாத 'கள்ளத்தனமா'..? நடிகர்களிடம் இல்லாத வரதட்சணையா..? இதை எல்லாம் பற்றி இதுவரை ஏதாவது சொன்னாரா அமீர்கான்..? இப்படி இரண்டு வேடங்களில் நடிக்கிறாரே... இவர்..? ஆக, அமீர்கான் செய்வது சரியா..?
ஒரு தீமையை - ஒரு விஷச்செடியை ஒழிக்க வேண்டும் என்றால்... முதலில் அந்த செடியின் ஆணிவேரை அல்லவா பிடுங்கி எறிய வேண்டும்..? நுனிப்புல் ட்ரிம் பண்ணுவது என்ன பலனை தரும்..? டி ஆர் பி ரேட்டிங் வருவாய் தவிர..?
"வரதட்சணைக்கு எதிரான சட்டம் கொண்டுவந்த மந்திரியும் அதை வைத்து தீர்ப்பளித்து விட்ட நீதிபதியும் தன் பிள்ளைகளுக்கு சம்பந்தம் பேசும்போது வரதட்சணை வாங்குகிறார்களே..! இதுவா சட்ட அமலாக்கம்..? இப்படியா வரதட்சணையை ஒழிப்பது..? சட்டம் வெறும் வார்த்தையாக அல்லவா உள்ளது..? மக்கள் உள்ளத்தில் இல்லையே..! தீமைக்கு ஆணிவேரான 'வரதட்சணை தவறில்லை' என்ற புரிதலை ஒழிக்காமல் அதை கேட்டு வாங்குவோரை சாடுவதால் மட்டும் தீமை ஒழியுமா..?"
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
.
"பெண் குழந்தை பிறந்தால்... காதுகுத்து- பூப்புனித நீராட்டு விழா சடங்கு- நிச்சயம்- பரிசம்- கல்யாணம்- சீதனம்- வரதட்சணை- நகை- விருந்து- வளைகாப்பு- தலைப்பிரசவம்- பெயர் வைப்பு- பண்டிகை சீதனம்- இத்யாதி... இத்யாதி... என இவ்வளவு செலவுகளை பெண்ணை பெற்றவர் தலையில் கலாச்சாரம் என்று சுமத்திவிட்டு... இதையெல்லாம் அரசும் சமூகமும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு... தீமைக்கு ஆணிவேரான இதையெல்லாம் ஒழிக்காமல்... 'ஸ்கேனில் பெண் குழநதை என்றால் கலைக்காதே... பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் தராதே' தண்டனை உண்டு என்றால் இது... அரசே... சமூகமே... நியாயமா..? பெண்ணின் பெற்றோரை மட்டும் சாடுவதால் மட்டும் தீமை ஒழியுமா..?"
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
மருத்துவத்தில் கள்ளத்தனம் உண்டாகியுள்ளது என்றால்... அதற்கு காரணமான மருத்துவ படிப்புக்கான அநியாய கட்டணம், கல்லூரிகளின் அராஜக டொனேஷன், மருத்துவ கல்வி மற்றும் அதன் வேலைக்கான லஞ்சம், மருந்துகளில் ஊழல், மருத்துவமனை கட்ட-நடத்த-லஞ்சம், வருமானவரியில் நீக்கு போக்கு, அதற்கு லஞ்சம், இதற்கு எல்லாம் பின்புலமாக இருக்கும் அரசியல்... அரசியல்வாதிகள்... தனியார் மருத்துவமனை உயிர்பெற... அரசு மருத்துவமனையை கோமாவில் கிடத்துவது... இதற்கும் லஞ்சம்... என்று எவ்வளவோ உள்ளதே..!? தீமைக்கு ஆணிவேரான இதையெல்லாம் ஒழிக்காமல் மருத்துவர்களை மட்டும் சாடுவதால் தீமை ஒழியுமா..?"
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
-----என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அமீர்கான்..!?
"பெண் சிசுக்கொலை", "பாலியல் பலாத்காரம்", "வரதட்சணை", "(மருத்துவ துறை எனும்) வியாபாரத்தில் கள்ளத்தனம்" ஆகிய இவற்றுக்கு உடனடி தீர்வாக... ஏக இறைவனை நம்பி, இறைகட்டளைகளுக்கு மாறு செய்தால் ஏற்படும் மறுமை தண்டனை உண்டு என்று பயந்தால்... இவற்றை தடுக்க புதிய தடைச்சட்டம் ஏதும் போடாமலேயே இவற்றை ஒழிக்கலாமே..?
'இதெல்லாம் இறையச்சம் கொண்ட இஸ்லாமிய வாழ்வியலில் மட்டுமே உடனடி சாத்தியம்' என்று ஒரு 'முஸ்லிம்' ஆன அமீர்கானுக்கு தெரியாமல் போய் விட்டதே..!
இது ஏன் அமீர்கானுக்கு தெரியவில்லை..?
எப்படி தெரியும்..?
மனைவி அல்லாத அந்நிய பெண்களை இச்சையோடு பார்ப்பது, ஆபாசமாக காதல்-காம வசனம் பேசுவது, உடலின் எல்லா இடத்திலும் தொடுவது, முத்தமிட்டு கட்டிபிடித்து டான்ஸ் ஆடுவது, இதை ஏதோ தம் சாதனை போல(!?) சொந்த காசில் வேறு சினிமாஸ்கோப்பில் படம் பிடித்து உலக மக்களுக்கும் வெள்ளித்திரையில் போட்டுக்காண்பிப்பது, அதன் மூலம் கோடிகளில் இலாபம் பெறுவது, அந்த காசில் உண்டு உயிர்வாழ்வது... ஆகிய... இதெல்லாம் 'ஹராம்' - 'முஸ்லிமான தனக்கு இறைவனால் தடை செய்யப்பட்டது' என்ற அடிப்படையைக்கூட அறியாதவர் அல்லவா ஆமிர்கான்..!? ஆகவே... அவருக்கு 'தெரியாது' என்றே நம்புவோம்..!
சரி... இந்நிலையில் இந்த டிவி நிகழ்ச்சி... நல்ல
எண்ணம் கொண்ட நேர்மையான சிந்தனை கொண்ட பொதுமக்களிடம் இனி சீரியஸாக எடுபடுமா..?
ஒன்று.... அமீர்கான் இனி மேற்சொன்ன அசிங்கங்கள் உள்ள சினிமாவில் ஒருக்காலும் பணியாற்றக்கூடாது..! 'இல்லை, அப்படித்தான் அந்த சினிமா இருக்கும்' எனில் அத்துறையை விட்டு மனம் திருந்தியவராக இதுவரை செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டவராக இன்றே வெளியேறி விட வேண்டும்...! செய்வாரா ஆமிர்கான்..?
சரி, இதுவரை எப்படியோ போய்த்தொலையட்டும்...! 'சமூக தீமையை எதிர்க்கும் மனிதன்' & 'முஸ்லிம்' என்று இரண்டிலும் தன்னளவில் நேர்மையில்லாத அமீர்கான், இனியாவது திருந்துவாரா..?
.
ஒன்று.... அமீர்கான் இனி மேற்சொன்ன அசிங்கங்கள் உள்ள சினிமாவில் ஒருக்காலும் பணியாற்றக்கூடாது..! 'இல்லை, அப்படித்தான் அந்த சினிமா இருக்கும்' எனில் அத்துறையை விட்டு மனம் திருந்தியவராக இதுவரை செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டவராக இன்றே வெளியேறி விட வேண்டும்...! செய்வாரா ஆமிர்கான்..?
சரி, இதுவரை எப்படியோ போய்த்தொலையட்டும்...! 'சமூக தீமையை எதிர்க்கும் மனிதன்' & 'முஸ்லிம்' என்று இரண்டிலும் தன்னளவில் நேர்மையில்லாத அமீர்கான், இனியாவது திருந்துவாரா..?
.
'வாய்மையே வெல்லட்டும்...!'
'Let Truth Alone Prevail..!'
'Let Truth Alone Prevail..!'
35 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ஆஷிக்!
ஒருவர் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மக்கள் முன் கொண்டு வருவதற்கு முதலில் அவர் சார்ந்த துறையில் யோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால் மக்கள் முன் பிரசாரத்துக்கு எவருமே தேற மாட்டார்கள். அந்த சினிமா துறையை நியாயப்படுத்தியிருந்தால் அவரை கேள்வி கேட்கலாம். அதுவரை அவர் குறிப்பிடும் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகள் சீர் செய்து கொள்வதே நல்லது.
மற்றபடி பதிவு வழக்கம்போல் அருமை!
சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
/* தீமைக்கு ஆணிவேரான இதையெல்லாம் ஒழிக்காமல் மருத்துவர்களை மட்டும் சாடுவதால் தீமை ஒழியுமா..?" */
ரொம்ப சரியா சொன்னீங்க... அடிப்படையை சரி செய்ய இங்கு யாரும் தயார் இல்லை... உடைந்த சாலைக்கு ஒட்டு போடும் வேலையை தான் அனைவரும் செய்கிறார்கள். ஒருக்காலும் சாலை சரி ஆகாது.
நல்ல அலசல் !
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
ஒரு இஸ்லாமியனாக கருத்து வைத்திருப்பது
வரவேற்க தக்கது ஆனால் மத சார்பற்ற நாட்டில்
ஒரு ஊடகம் எப்படி செயல் படும் என்பது உங்களுக்கு
தெரியும் ..சினிமா டிவி எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான்
பத்திரிக்கைகளில் கதையும் வரும் செய்தியும் வரும் கட்டுரையும்
வரும் அதுவே காணொளியாக படுவதுதான் டிவி சினிமா ..எனவே
அமீர்கானின் துறை ஒன்றுதான் அவரை இயக்க படும் விதம் தான் வேறு
சலாம் !
நன்மை பயக்கும் விசயங்களை மட்டுமே தந்து இஸ்லாமியத்திருக்கு எடுத்துகாட்டாக வாழும் ?! ( பீ ஜெ -ஜவாஹிருல்லாஹ் etc ) நமது சகோதரர்களுக்குள் சலாம் கூட சொல்லிகொல்லாமல் வாழ்கிறார்கள் அல்லவா, காரணம் ., இறையச்சம் இல்லாமா? இல்லவே இல்லை , அவர்கள் மனிதர்கள்., ஆகவே பலகீனமானவர்கள் அல்லது இன்சா அல்லாஹ் திருந்தி வந்துவிடுவார்கள்.. கடவுள் நம்பிக்கை இருக்கிறது அல்லவா அது போதும்!
குண்டூசி காணாமல் போனத்ரக்கும் , பீரங்கியே காணமல் போனதற்கு ஒரே உதாரணமா என்று கேட்டுவிடுங்கள் , நான் வாய்மூடி கொள்ள அந்த பதில் உதவும்
எல்லாம் அவன் செயல் !
குற்றம் எனப்பார்த்தால் பத்திரிக்கைத்துறையிலும் நிறையவே நடக்கிறது .மருத்துவத்துறையில் பகல் கொள்ளையாகவே மாறிவிட்டது .பிரச்சினையை முன்வைப்பதுதான் முக்கியமே தவிர யார் வைப்பது ?அவரின் தகுதியென்ன என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே ..
குற்றம் எனப்பார்த்தால் பத்திரிக்கைத்துறையிலும் நிறையவே நடக்கிறது .மருத்துவத்துறையில் பகல் கொள்ளையாகவே மாறிவிட்டது .பிரச்சினையை முன்வைப்பதுதான் முக்கியமே தவிர யார் வைப்பது ?அவரின் தகுதியென்ன என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே ..
////Shaheed Bin Abdul
அஸ்ஸலாமு அலைக்கும் , சகோதரர் ஆஷிக் .. உங்களது முந்திய பதிவுகளிலிருந்து வேறுபட்டதாய் உள்ளது , அவசரத்தனமாய் எழுதியது போல் உள்ளது,
சமூக பிரச்சினைகளை அலசுவதற்க்கு ஒரு நல்ல தளம் அமைக்கப்பட்டுள்ளது அதுவும் பிரச்சினைகளை அதிகமாக பரப்பும் ஒரு மீடியத்திலேயே , அதில் பிரச்சினை என்னவென்று பார்க்க வேண்டுமே தவிர அதை யார் பேசுகிறார்கள் , எதில் பேசுகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பது கொஞ்சம் பிற்போக்குதனமாய் தோன்றுகிறது ,
அப்படியென்றால் காலையில் காதல் ,காமங்களை ஒலிபரப்பும் அதே தொலைக்காட்சி சேனலில்தான் நாம் இரவில் தாவா செய்துகொண்டிருக்கிறோம் ,
ஒருவேலை அமீர்கானை முஸ்லிமாக பார்ப்பதால் தான் இப்படி எதிர்மறையான கட்டுரை என்றால் , நிச்சயம் அதுவும் தவறு அவர் தன்னை ஒரு முஸ்லிமாக எங்கும் வெளிப்படுத்தியதில்லை , இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சினிமா என்னும் கார்போரேட் உலகில் அதை சமூக மாற்றத்திற்க்காக பயன்படுத்துபவராக அமீர்கான் மட்டுமே இருக்கிறார்( தாரே ஜமீன் பர் படம் நல்ல உதாரனம் ) ......
உங்களது தளத்தில் பின்னூட்டம் இட முடியாததற்க்கு பொறுத்துக்கொள்ளுங்கள் :) ......
2 hours ago · Like
அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் வரஹ்...
அருமையான ஆக்கம் சகோ. சில விதங்களில் இந்த கட்டுரை *இது சிட்டிசன் தான் எழுதினாரா?* என சில நிமிடம் யோசிக்க வைத்தது! விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு விஷயம் எப்படி இவர் கண்ணுக்கு மட்டும் அபத்தமாக தெரிகிறது என குழம்பி போயிருந்தேன். ஆனால் உங்கள் கான்சப்ட் "இவரை சுற்றியிருக்கும் விஷயத்தை எதிர்க்காத இவருக்கு மற்ற சமூக விஷயத்தை எதிர்க்க என்ன தகுதி இருக்கு" என்பதில் நான் முழுதாக உடன்படுகிறேன். நான் என் பிழைப்புக்காக சாராயம் காய்ச்சுவேன். ஆனால் புகையிலைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என சொன்னால் யாரும் விமர்சிக்கவே செய்வார்கள். சினிமாவில் உள்ள அபத்தங்களை எதிர்த்து ஒரு முறையேனும் அமிர்கான் குரல் கொடுக்காத வரை சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி கேட்க அவருக்கு தகுதி இல்லை மனதில் எண்ணம் இயல்பாக வரவே செய்யும். அந்த வகையில் அமீர்கானின் இரட்டை நிலைப்பாடு பற்றிய உங்கள் விமர்சனத்தை ஏற்கிறேன்.
சரி நுனிப்புல் விஷயத்துக்கு வரேன்.
தீர்வு சொல்லப்படாத எந்த பிரச்சனைகளை பற்றி அலசுவதும் வீணான ஒன்றே! நாங்க குறைகளை பற்றி மட்டும் தான் பேசுவோம் என சொல்லிக்கொண்டு திரிவதில் பயனே இல்லை! இவ்வளவு செலவு செய்து, ஆதாரம் திரட்டி மக்கள் முன் அம்பலப்படுத்தும் இதே வேலையோடு வேலையாக குறைந்தபட்சம் அந்த சமூககொடுமையை நீக்க ஏதேனும் வழி செய்திருக்கலாம். அத விட்டுட்டு பிரச்சனை பத்தி மட்டும் தான் பேசுவோம்னா நான் கூட டீவி ஷோ பண்ணலாமே ;-) இத அமீர் வந்து சொன்னா தான் மாற்றம் வருமா என்ன? அமிர்கான் சொன்னா டி ஆர் பி ரேசில் முந்தலாம் அவ்வளவே !
ஏசி ரூம்மில் அமர்ந்து வெட்டி பேச்சு பேசுவதில் என்ன ப்ரோஜனத்தை இவர்கள் கண்டுவிட்டார்கள் என தெரியவில்லை! இப்படி பேசுவதால் இனி அக்குற்றம் நிகழாமல் போய்விடுமா என்ன? ஆனால் அதை நீக்க ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டால் நிச்சயம் அதன் தாக்கம் பரவி குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்!
இதை செய்யாத வரை...
புல்லின் ஆணிவேரை பிடுங்கி எறியாமல் நுனிப்புல்லை மட்டும் வெட்டிவிட்டு போகும் வரை...
இந்த சத்தியமேவ ஜெயதே-யும் பத்தோட பதினொன்னு தான்! நத்திங் ஸ்பெஷல்!
salam bro!
nice article
டீவீ பார்ப்பது ஹராம். உங்களுக்கு சுவனத்தில் நித்திய கன்னிகைகள் வேணாமா ஆஸிக்.
என் கமெண்ட் வருமா இல்ல அல்லா குறுக்கால வந்துருவாரா.
@வால்பையன்//என் கமெண்ட் வருமா இல்ல அல்லா குறுக்கால வந்துருவாரா.//---ம்ம்ம்....அப்ப்ப்ப்ப்ப்பாடா..!
'எங்கே, நம்ம பதிவு சரியான பொருளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லையோ' என்று நினைத்து குழம்பிப்போய் இருந்தேன்..!
இப்போதுதான் எனக்கு நிம்மதியா இருக்கு..! :-))
உங்களை இப்பதிவு பிடித்து உலுக்கி உசுப்பேத்தி இருப்பதிலேயே எனக்கு புரிந்து விட்டது..! அது சரியான ரூட்டில்தான் போய் சேர்ந்து இருக்கிறது..! இப்பதிவு சக்சஸ்..!
இறைவனுக்கே புகழனைத்தும்..!
@வால்பையன்//டீவீ பார்ப்பது ஹராம்.//---தவறான புரிதல்(என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்)..!
நம் சொந்த காசில் வாங்கிய நம் டிவியில் நாம் என்ன பார்க்கிறோம் என்பதை வைத்துத்தான் அந்த செயல் ஹராம்... ஹலால்... என்று இதெல்லாம் பிரிக்கப்படும்(என்று நீங்கள் அறியாததல்ல)..!
இந்நிகழ்ச்சியில்,
"பார்க்ககூடாது" என்று இஸ்லாம் தடுத்த ஆடைக்குறைப்பு ஆபாசக்காட்சிகள் ஏதும் இல்லை எனில், இதை பார்ப்பதை ஹராம் என்று நாம் சொல்ல முடியாது(என்பதையும் நீங்கள் சந்தேகமற அறிந்திருப்பீர்கள்)..!
இருந்தாலும் தவறான புரிதலுக்கு மறுப்புரை எழுதி வைப்பது நம் கடமை..! அதனால்.. இந்த பின்னூட்டம்..! :-))) ஹி..ஹி..ஹி..
ஓ. ஹராம் என்றால் ஆடை குறைப்பு மட்டும் தானா.
நல்ல இஸ்லாமியரய்யா நீர்.
no one is perfect என்பதை நான் அறிவேன்.
@வால்பையன்//ஓ. ஹராம் என்றால் ஆடை குறைப்பு மட்டும் தானா.//
---///...டிவி பார்ப்பது ஹராம்///---என்று 'பார்ப்பது' குறித்த கிண்டலுக்கு...
ஏன் பதிலில்...////"பார்க்ககூடாது" என்று இஸ்லாம் தடுத்த ஆடைக்குறைப்பு ஆபாசக்காட்சிகள்////---இதில், ஆடைக்குறைப்புக்கு அடுத்ததா நான் சொன்ன "ஆபாசக்காட்சிகள்" உங்கள் கண்ணில் படாமல் போனதில் ஆச்சர்யம் இல்லைதான்..!
//no one is perfect என்பதை நான் அறிவேன்.//---தோடா... உலக மக்கள் அனைவரின் உள்ளத்தையும் நீங்கள் அறிபவரோ..?!
மீண்டும் தவறான புரிதல்..!
//ஒன்று.... அமீர்கான் இனி மேற்சொன்ன அசிங்கங்கள் உள்ள சினிமாவில் ஒருக்காலும் பணியாற்றக்கூடாது..! //
என்ன அஷிக் பாய் காமெடி கீமெடி பண்ணலியே, அது பொன் முட்டையிடும் வாத்து அதை போய் அறுப்பாரா?. கேட்டால், மக்கள் ரசிக்கிறார்கள் எனவே நான் செய்வது கலைச்சேவை (?!) என்று காரணம் கூறுவார். சினிமா உலகில் நிறையபேர் சொல்லும் காரணம்தான் இது. இங்கு குற்றம் யார் மீது?
அமீர்கான் திருந்துராரோ இல்லையோ, அவர் அலசும் சமூக கொடுமைகளை செய்வோர் இந்நிகழ்ச்சி மூலம் திருந்துவார்களா?,
ஏன் கேட்கிறேன் என்றால் அரைமணி நேர (விழிப்புணர்வு ?!) நிகழ்ச்சியை பார்த்துவிட்டு உச்சு கொட்டி விட்டு செல்வதினால் இந்த சமூக கொடுமைகள் தீரும் என்று நம்பமுடியவில்லை. சரி, அப்படியே இந்நிகழ்ச்சியின் மூலம் இக் கொடுமைகளை நிகழ்த்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வாங்கிக்கொடுக்க முடியுமா?, முடியாது ஏனெனில் மனிதநேயம் என்ற பெயரில் கடுமையான தண்டனையை ஆட்சேபித்து, அவர்களின் கொடுமைகளுக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் வரும்.
யாரைப்போய் நொந்து கொள்வது?...
வழக்கம்போலவே நியாயமான அலசல்!.
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
உங்கள் கருத்தை கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சகோ..!
//ஒருவர் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மக்கள் முன் கொண்டு வருவதற்கு முதலில் அவர் சார்ந்த துறையில் யோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால் மக்கள் முன் பிரசாரத்துக்கு எவருமே தேற மாட்டார்கள்.//
நீங்கள் சொன்ன இதே அடிப்படை விதியை உங்களால் பதிவுகளில் எதிர்க்கப்பட்ட (என்ன காரணத்தினால்..???) நித்யானந்தாவுக்கும் பொருத்தி பார்ப்பீர்களா சகோ.சுவனப்பிரியன்..?
இனி, உங்களின் இதே விதியை, "மத நல்லிணக்கத்துக்காக(?) உண்ணாவிரதம்" இருந்த நரேந்திர மோடிக்கும் பொருத்தி பார்ப்பீர்களா சகோ.சுவனப்பிரியன்..?
"விஜய் மல்லையா-மதுவின் தீமை குறித்த விழிப்புணர்வு" என்று உதாரணம் ஒன்று தந்து, நான் பதிவில் தெளிவாகவே இதை சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.
நாம் எந்த சமூக தீமையை எதிர்க்கிறோமோ...
அதை நம்மளவில் நாம் செய்யாதவராக,
அதே தீமையை ஆதரிக்காதவராக,
நம் அதிகாரத்துக்கு உட்பட்டோர் அந்த தீமையை செய்தால் அதை எதிர்ப்போராகவும் இருக்க வேண்டாமா சகோ..?
நம் வாழ்வியல் வழிகாட்டி நபி(ஸல்) அவர்கள் அப்படித்தானே நடந்தார்கள்..?
அப்படி ஒருவர் நடந்து கொள்ளவில்லை எனில், 'திருந்துங்கள்' என்று ஒருவரை நாம் சொன்னால் அது தவறா சகோ.சுவனப்பிரியன்..?
உங்களின் சமீபத்திய 'தர்ஹா தரைமட்டம்' பதிவில் கூட, இனி நித்யானந்தா... "கதவை திறந்தேன் போலிஸ் வந்தது" என்ற... தொடரை எழுதட்டும்' என்பதுபோலத்தானே சொல்லி இருக்கிறீர்கள்..?! 'அதே... பழைய ஆன்மீக தொடரை அவரால் எழுத முடியாது' என்ற உங்கள் புரிதலுக்கான காரணம் என்ன..? காரணம் சொன்னால்.... நீங்கள் என் பக்கம் வந்து விடுவீர்கள் சகோ.சுவன்னபிரியன்..! :-)))
//அந்த சினிமா துறையை நியாயப்படுத்தியிருந்தால் அவரை கேள்வி கேட்கலாம்.//
---அமீர்கான் இன்னும் வியாபார பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்காக அனைத்து ஆடல் பாடல் மசாலாக்களுடன் படம் எடுக்கிறாரே..! இச்செயல் நியாயப்படுத்துதலில் வராதா சகோ..?
//அவர் குறிப்பிடும் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகள் சீர் செய்து கொள்வதே நல்லது.//---:-))) சீர் செய்து கொள்ள... அவர் என்ன... சரியான ஆணிவேர் தீர்வா சொன்னார்..? நுனிப்புல் அல்லவா மேய்ந்தார்..? அதை வைத்து எப்படி சீர் செய்வது..?
இன்னும் சொல்வதானால்... நீங்கள் சொன்ன கருத்தை இன்று நம் சகோதரர்களே பலர் கொண்டு இருப்பதால்தான்... இன்று உலகில் நம்முன்னே இத்தனை சீரழிவுகள்...!
இல்லையேல்... நபி(ஸல்) அவர்கள் காலத்தைய சஹாபாக்கள் வாழ்க்கை போல, சீராக வாழ்ந்து கொண்டு இருந்திருப்போம் சகோ.சுவனப்பிரியன்..!
@சிராஜ்அலைக்கும் ஸலாம்
//அடிப்படையை சரி செய்ய இங்கு யாரும் தயார் இல்லை...//---தயார் ஆகியே தீர வேண்டும் சகோ.சிராஜ்..! //ரொம்ப சரியா சொன்னீங்க... //---வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி சகோ.சிராஜ்.
@திண்டுக்கல் தனபாலன்//நல்ல அலசல் !//---தங்கள் முதல் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி சகோ.தனபாலன்.
@அதிரை சித்திக்நீங்கள் சொன்னதை இபப்டி எடுத்துக்கொள்கிறேன் சகோ.சித்திக்...
//அமீர்கானின் (நடிக்கும்) துறை ஒன்றுதான் அவரை இயக்க படும் விதம் தான் வேறு//
//ஒரு இஸ்லாமியனாக கருத்து வைத்திருப்பது வரவேற்க தக்கது//---இதே பதிவை ஒரு முஸ்லிம் அல்லாதவர் எழுதி இருந்தால் அது இன்னும் மிக சிறப்பாக இருந்திருக்கும் சகோ..!
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி சகோ.
@ஷர்புதீன்அலைக்கும் சலாம்
//குண்டூசி காணாமல் போனத்ரக்கும் , பீரங்கியே காணமல் போனதற்கு ஒரே உதாரணமா//..?
:-)))
@முஹம்மது ஜலீல்//பிரச்சினையை முன்வைப்பதுதான் முக்கியமே தவிர யார் வைப்பது ?அவரின் தகுதியென்ன என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே..//---ம்ம்ம்..!
ஆனால்,
எந்த பிரச்சினையை ஒருவர் முன் வைக்கிறாரோ அதே பிரச்சினை அவரிடமும் இருந்தால்..?!?
"அடுத்தவருக்கு அறிவுரை சொல்லுகிறீர்களே... நீங்களும் கொஞ்சம் உங்கள் தவறிலிருந்து திருந்துங்களேன்... சகோ.ஆமிர்கான்..!"
---இதுதான் சகோ பதிவின் சாரம்..!
ஆக,
நானும் ஒரு பிரச்சினையை இங்கே முன் வைத்து இருக்கிறேன்..!
அவர்,
மற்றவர்கள் திருந்துவதை எதிர்பார்ப்பது போல...
நான்,
அவர் திருந்துவதை எதிரபார்ப்பது தவறா சகோ.ஜலீல்..???
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அவர் தன்னை ஒரு முஸ்லிமாக எங்கும் வெளிப்படுத்தியதில்லை//
---தவறு சகோ.ஷஹீத்..!
இங்கே அவர் தன்னை முஸ்லிம் என்று, 'அனைத்து முஸ்லிம்களின் பிரதிநிதியாக'(?) குரல் கொடுக்கிறார்.
http://www.youtube.com/watch?v=HSXRk4W0Zqo
இன்னும் இங்கே...
http://www.santabanta.com/cinema.asp?pid=39457
தான் ஒரு இந்துவை திருமணம் செய்து இருந்தாலும்...
//I have always reposed my total faith in 'Allah' the only supreme power guiding and ruling this universe. I pray to him in my mind with every breath of mine.//--என்கிறார்..!
//...my kids will always follow only Islamic religion.//--என்றும் சொல்றார்..!
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~//அவசரத்தனமாய் எழுதியது//----இல்லை சகோ ஒருவாரம் யோசிச்சுத்தான்... எழுதினேன்..!
இதுவரை, சினிமாவை- சினிமா நடிகர்களை வெறுத்தோர் எல்லாம் இந்நிகழ்ச்சியின் தாக்கம் காரணமாக சினிமாக்காரன் சொல்வதை எல்லாம் 'சரி' என ஆதரிக்க ஆரம்பித்து உள்ளதை கண்டேன்..!
இன்னும் ஒரு படி மேலே சென்று அமீர்கானின் ரசிகர்கள் போற்றும் அளவுக்கு முஸ்லிம்கள் சென்றதையும் கண்டேன்..!
'இவர் செய்றது உண்மையிலேயே தீமையை தடுக்கக்கூடியதுதானா..' என்று சிந்திக்க ஆரம்பித்தேன்..! அதன் விளைவே இப்பதிவு..!
குர்ஆனும் நபிவழியும் நம்மை திருத்த நம்மிடம் இருக்க... இப்பதிவின் முகநூல் சுட்டியில் ஒரு முஸ்லிம் சகோ.ஒருவரின் கமென்ட்.... //இவர் திருந்திட்டா இனி இந்தியாவை திருத்தறது யாரு?// --என்று..!
அல்லாஹ்தான் நம்மை இந்த வகை சிந்தனையில் இருந்து காப்பாற்றவேண்டும்..!
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~///அப்படியென்றால் காலையில் காதல் ,காமங்களை ஒலிபரப்பும் அதே தொலைக்காட்சி சேனலில்தான் நாம் இரவில் தாவா செய்துகொண்டிருக்கிறோம்///
----சகோ.ஷஹீத், இது மிக மிக தவறான புரிதல் கொண்ட வெத்து வாதம்..!
அந்த தொலைக்காட்சி சேனல் தாவா செய்வோரின் ஆளுமையின் கீழ் இல்லை. ஆனால் சினிமாவில் இருப்பதும், அங்கே நடக்கும் தீமைகளை எதிர்க்காமல் இருப்பதும்... அப்படியல்ல, அது முழுக்க முழுக்க ஆமீர்கான் ஆளுகையின் கீழ் வரக்கூடிய ஒன்று.
ஆக நாம் தாவாவுக்காக அரை மணிநேரம் வாடகை தந்து பயன்படுத்தும் ஊடகமும், நமது கட்டுப்பாட்டில் உள்ள நமது சொந்த தொழிலும் அடிப்படையில் ஒரே விதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் சகோ.ஷஹீத்.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~சகோ.ஷஹீத்,//அதில் பிரச்சினை என்னவென்று பார்க்க வேண்டுமே தவிர அதை யார் பேசுகிறார்கள் , எதில் பேசுகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பது கொஞ்சம் பிற்போக்குதனமாய் தோன்றுகிறது ,//---நன்றாக குழம்பி விட்டீகள் சகோ.ஷஹீத்.
இந்நிகழ்ச்சியில், இன்னும் சமூக தீமைக்கான ஆணிவேரை அழிப்பது பற்றி சொல்ல வேண்டும் என்கிறேன் அவ்ளோதான்..! நிகழ்ச்சியை எதிர்க்கவில்லை..! அதேநேரம், அதை நடத்தும் ஆளிடம் தீமையை அழிப்பதற்கான நேர்மை இல்லை என்கிறேன்..!
//'சமூக தீமையை எதிர்க்கும் மனிதன்' & 'முஸ்லிம்' என்று இரண்டிலும் தன்னளவில் நேர்மையில்லாத அமீர்கான், இனியாவது திருந்துவாரா..?//--என்றே கேட்டிருக்கிறேன்..!!! ஆமீர்கான் என்ற மனிதரை..! நிகழ்ச்சியை அல்ல..! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..!
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்.....
//"இவரை சுற்றியிருக்கும் விஷயத்தை எதிர்க்காத இவருக்கு மற்ற சமூக விஷயத்தை எதிர்க்க என்ன தகுதி இருக்கு" என்பதில் நான் முழுதாக உடன்படுகிறேன்.//
ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.ஆமினா..!
//புல்லின் ஆணிவேரை பிடுங்கி எறியாமல் நுனிப்புல்லை மட்டும் வெட்டிவிட்டு போகும் வரை...
இந்த சத்தியமேவ ஜெயதே-யும் பத்தோட பதினொன்னு தான்! நத்திங் ஸ்பெஷல்!//
ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.ஆமினா..!
தங்கள் வருகைக்கும் மிகச்சிறப்பான புரிதலுக்கும் மிக்க நன்றி சகோ.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம்
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃபர் கான்..!
@Syed Ibramsha//அது பொன் முட்டையிடும் வாத்து அதை போய் அறுப்பாரா?//---இதையே டாக்டர்கள் மருந்துகம்பெனி&கடைகாரர்கள், மருத்துவமனைகாரர்கள், மணமகன் வீட்டார், குழந்தைகளை சீரழிப்போர், பென்சிசுக்கொலையில் ஈடுபடுவோர்... ஆமிர்கானிடம் சொன்னால்... ஆமீர்கான் ஏற்பாரா...! அவ்வ்வ்வ்வ்வ்...
//அப்படியே இந்நிகழ்ச்சியின் மூலம் இக் கொடுமைகளை நிகழ்த்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வாங்கிக்கொடுக்க முடியுமா?//
---எனக்குத்தெரிந்து ஒரு புகார், ஒரு FIR, ஒரு நஷ்டஈடு... இப்படிக்கூட ஏதும் இல்லை..! தண்டனையா..?
TRP மட்டும் எகிறியது..! அதுதானே நோக்கம்..! இதுதான் சகோ.. இனி 'பொன் முட்டை'..!
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி சகோ.இப்றாம்ஷா.
பிறருக்கு அறிவுரை கூறும் அமீர்கான் முதலில் தன்னை அதற்கு தகுதியானவராக ஆக்கிக்கொள்ள வேண்டும்... என்ற இப்பதிவின் மையக்கருத்துக்கு எதிர்க்கருத்து கொண்டிருக்கும் சிலருக்காக...... நான் சொன்னவை... தர்க்க அடிப்படையில் மட்டுமின்றி.... இஸ்லாமிய அடிப்படையிலும் சரி என்பதற்காக இதை பகிர்கிறேன்..!
குர்ஆன் கூறும் இறைவசனங்கள்...!
61:2
நம்பிக்கை கொண்டோரே..! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
61:3
நீங்கள் செய்யாததைச்சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
2:44
இறைவேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா..?
பிறருக்கு அறிவுரை கூறும் அமீர்கான் முதலில் தன்னை அதற்கு தகுதியானவராக ஆக்கிக்கொள்ள வேண்டும்... என்ற இப்பதிவின் மையக்கருத்துக்கு எதிர்க்கருத்து கொண்டிருக்கும் சிலருக்காக...... நான் சொன்னவை... தர்க்க அடிப்படையில் மட்டுமின்றி.... இஸ்லாமிய அடிப்படையிலும் சரி என்பதற்காக இதை பகிர்கிறேன்..!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச்சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார்.
அப்போது நரகவாசிகள் அவரைச்சுற்றி ஒன்று கூடி, "இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக்கட்டளையிட்டு, தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்பார்கள்.
அதற்கு அவர், "நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று உஸாமா பின் ஸைத் (ர-) அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி 3267
முகநூலில் இவற்றை எனக்கு தந்து உதவிய சகோதரர்கள் அசீர் சித்திக் மற்றும் ஏகத்துவ அழைப்பாளன் ஹுசைன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!
எனக்கும் சில (மாற்றுக்) கருத்துக்கள் இருந்தன, பலர் சொல்லியிருப்பது போல். அனைத்திற்கும் பதிலும் வந்துவிட்டது உங்களிடமிருந்து. ஆனால் இது போல் நிகழ்ச்சிகள் வேண்டும் என நான் நினைப்பதால் இந்த பின்னூட்டம்.
நீங்கள் சொல்வதுபோல்,
1.a திரைத்துறை = 2.a மருத்துவத்துறை
1.b நல்ல கருத்துள்ள, குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படங்கள் = 2.b சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்கள்
1.c ஆபாசமான,வன்முறை நிறைந்த படங்கள் =2.c பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள்
திரைத்துறையின் மூலம் புகழ்பெற்றவர் என்ற முறையிலும் சில நல்ல படங்களைத் தந்தவர் என்ற முறையிலும் அவர் இந்த சமூகக்கொடுமைகளை சொல்ல முன்வந்திருக்கலாம். அவரைத் தைரியமாக மற்ற துறைகளைப் பற்றி பேச வைத்தது, என்னை பொறுத்தவரை, 1.c எனபதை நம் மக்கள் தவிர்க்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதே. நமக்கு பிடிக்கவில்லையென்றால் நாம் 1.c போன்ற படங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் 2.c அப்படியில்லையே. இறைவனுக்கு அடுத்தபடியாக நாடிச் செல்லும் மருத்துவர்கள் நமக்கு துரோகம் செய்தால், அதுவும் நம்பவைத்து அநீதி இழைத்தால், தட்டிக் கேட்கலாம், கேட்கணும்.இவர் சொல்லக்கூடாது, அவர் சொல்லக்கூடாதுன்னு பார்த்தா அப்ப யார்தான் சொல்றது? அதுக்காக, நித்தியானந்தாவையெல்லாம் இழுக்கக்காதீங்க... எனக்கு பதில் சொல்ல தெரியாது ;)What I come to say is, Amir khan is better than others...
இந்த மருத்துவர் ஏமாற்றிவிட்டார் என எத்தனையோ வழக்குகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த சினிமாவைப் பார்த்ததால் எனக்கு நஷ்டமாகிவிட்டது என யாராவது சொல்வார்களா? ஏனெனில் சினிமா பார்த்தது நம் தவறு. அதற்கு வேறு யாரிடமும் நீதி கிடைக்காது.
அந்த கிராமத்தில் இழைக்கப்பட்ட அநீதியைப் பார்த்தபின், சேவை மனப்பான்மையுடன் வேறு மருத்துவர் அங்கு போய் கிளினிக் வைக்கக்கூடும். அட்லீஸ்ட், மற்ற துறைகளும் இந்த ஷோவைப் பார்த்து சற்றாவது மிரளலாம். தன் தவறுகளைச் சரிபடுத்த மற்ற துறைகள் தன் விதிமுறைகளை சரியாக பின்பற்றலாம். பின்னூட்டமிட கொஞ்சம் லேட்டாகிவிட்டதால், இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நான் சொல்றது புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.
//1a...1b...1c...2a...2b...2c...// --ஒப்பீடுகள் அருமை... துல்லியம்... அபாரம்..! மிக்க நன்றி சகோ.enrenrum16.
//ஆனால் இது போல் நிகழ்ச்சிகள் வேண்டும் என நான் நினைப்பதால் இந்த பின்னூட்டம்.//---நான் 'இது போல் நிகழ்ச்சிகள் வேண்டாம்' என்று சொல்லவில்லையே சகோ..!
====>>>பொதுவாக தற்போது பல தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி... ஏதோ நல்ல நிகழ்ச்சிதான்..!
நல்ல நிகழ்ச்சிகளை நடத்திக்காட்ட முடியும் என்பதற்கு மேலும் ஓர் உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
ஆக ஒரு நல்ல விஷயத்தைத்தான் முன்னெடுத்து செய்கிறார் அமீர்கான். ஓகே..!<<<====இப்படித்தானே பதிவில் சொல்லி இருக்கிறேன் சகோ..?
//இவர் சொல்லக்கூடாது, அவர் சொல்லக்கூடாதுன்னு//---ம் நான் சொல்லவில்லையே சகோ..?
//அப்ப யார்தான் சொல்றது?//---அவரே சொல்லலாம்... அப்படி சொல்லும்போது அவரும் அதே தவறை செய்யக்கூடியவரா இல்லாமல் 'திருந்த வேண்டும்' என்று தானே சொல்கிறேன்..?
//சில நல்ல படங்களைத் தந்தவர் என்ற முறையிலும் அவர் இந்த சமூகக்கொடுமைகளை சொல்ல முன்வந்திருக்கலாம்.//---பல தீய படங்களைத் தந்தவர் என்ற முறையிலும் அவர் இந்த சமூகக்கொடுமைகளை சொல்ல முன்வந்திருக்கும்போது... இனியாவது சற்று திருந்தலாம் என்கிறேன்..!
//1.c எனபதை நம் மக்கள் தவிர்க்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதே. நமக்கு பிடிக்கவில்லையென்றால் நாம் 1.c போன்ற படங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.//---தவிர்க்க மட்டும்தான் வேண்டுமா..? ஏனுங்க சகோ எதிர்க்க கூடாது..? என்ன காரணம்..?
//இந்த சினிமாவைப் பார்த்ததால் எனக்கு நஷ்டமாகிவிட்டது என யாராவது சொல்வார்களா?//---ஹிந்தி சினிமாவை பார்த்துவிட்டு சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் நம் தமிழக மாணவனை கேளுங்கள்... சொல்வான் சரியான பதில்..!
//ஏனெனில் சினிமா பார்த்தது நம் தவறு. அதற்கு வேறு யாரிடமும் நீதி கிடைக்காது.//---ஆமாம்...சகோ. அவனுடைய தவறுக்கு அந்த ஆசிரியை குடும்பத்துக்கு என்ன நீதி கிடைத்தது..?
//அந்த கிராமத்தில் இழைக்கப்பட்ட அநீதியைப் பார்த்தபின், சேவை மனப்பான்மையுடன் வேறு மருத்துவர் அங்கு போய் கிளினிக் வைக்கக்கூடும்.//---இப்போதுதான் இது மாதிரி கிராமம் இருப்பதே... 'சேவை மனப்பான்மை' உள்ளோருக்கு தெரியவருவது காலத்தின் கொடுமை..! எனினும், நான் இந்த நிகழ்ச்சிக்கு எதிரி இல்லையே..? நல்ல விஷயம் நடந்தால் வரவேற்போம்..!
//மற்ற துறைகளும் இந்த ஷோவைப் பார்த்து சற்றாவது மிரளலாம்.//---அமீர்கானின் சினிமா துறை மிரலுமா..? :-))
//நான் சொல்றது புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.//---நான் சொன்னது சரியா புரியலைன்னு நினைக்கிறேன் சகோ..! :-))
'அமீர்கான் சொல்லி பலர் திருந்தட்டும்' என்று ஆசைப்படும் உங்களுக்கு அவர் திருந்துவது மட்டும் எதற்கு பிடிக்கவில்லையோ..? உங்கள் இந்த கருத்து போல மேலே சிலரின் கருத்தும் செமை குழப்பமா இருக்கு சகோ.enrenrum16..!
வருகைக்கும் மாற்று கருத்துக்கும் நன்றி சகோ..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!