முன்குறிப்பு :- இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு..!
.
.
என் பள்ளி காலங்களிலும் சரி... கல்லூரி காலங்களிலும் சரி... எங்கள் வீடு ர்ர்ர்ரொம்பவே ஸ்ட்ரிக்ட்..! பகலில் சட்டையை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தால் போதும்..... "வேகாத வெயிலில் வெளியே போகாதே...?"(---மை மதர்) "வெயிலை வீணாக்காமல் விளையாட்டு வேண்டி கிடக்கா...?" (---மை ஃபாதர்) ...என்ற கட்டளைகள் தூள்பறக்கும்..! விடுமுறை நாள் ஆனாலும் கூட... மாலை நான்கு மணிக்கு அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே போகலாம், விளையாட..! இப்படியாக வெயில் படாமல் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள்..!
பின்னாளில்... வேலைக்கு வந்தால்... வாரத்துக்கு ஆறுநாள் தொடர்ந்து வெயிலில்தான் வேலை..! நிழலின் அருமை அப்போது புரிந்தது..! அது... கோடைகாலம்..! சூடு & ஈரம்... (hot & humid climate) உள்ள நேரம்..! காற்றில் ஈரப்பதம் (humidity) அதிகம் இருப்பதால் அது வியர்வையை ஆவியாகவே விடாது..! அந்நேரம் வெயிலில் அலைந்தால்... தலையில் இருந்து அருவியாய் வழிய ஆரம்பித்த வியர்வை... உடல் முழுக்க ஓடி எல்லா வியர்வையுடனும் கூட்டு சேர்ந்து இறுதியில் ஸாக்ஸ் வழியாக ஷூ என்ற கடலில் வந்து கலக்கும்..!
காலை... முதல் மாலை வரை இதுபோல ஈரமாகவே உடை மற்றும் உள்ளாடை இருப்பதால்... ஒரு புதிய பிரச்சினை வந்தது..! Fungal attack..! உடலின் எந்த இடத்தில் உடலுடன் ஒட்டியவாறுள்ள உடை அதிகமா ஈரமாக உள்ளதோ... அந்த இடத்தின் தோல் மெல்லிதானது என்றால்... ஏக சந்தோசம் இந்த நுண்ணுயிரிகளுக்கு..! இந்த அடிப்படையில் இவைகள் நம் உடலில் தேர்ந்தெடுக்கும் முதலிடம்...நமது கால்களுக்கு இடையே உள்ள இருபக்க groin region தான்..! இதுகளுக்கு ரொம்ப சவுகரியமான பிடித்த இடம்..! இவைகள் இங்கே வந்து குடியேறி வாழ ஆரம்பித்து விட்டால்... உடனே அரிப்பு ஆரம்பித்து விடும்..! ஏனெனில்... fungi are decomposers..! இதுதான் Fungal Infection..!
இந்த காளான்களில் பல வகைகள் இருந்தாலும்... முக்கிய மூன்று மட்டும் அதிகம் பொதுவானவை..! Groin region -இல் தோலில் நீளவாக்கில் வெடிப்பு போல ஏற்படுத்தும் ஒருவகை..! இன்னொன்று... தோலை தீக்காயம் பட்டது போல அரித்து விடும்..! மூன்றாவது வகை.. வியர்க்குரு போல பெரிது பெரிதாக உடையாத வலிக்கும் கட்டி கிளம்பும்..!
இதனால்...கால்களை நேராக வைத்து நடக்கவே முடியாது. அகட்டி அகட்டி நடக்க வேண்டி வரும்..! வலி உயிர் போகும்..! சும்மா இருந்தாலும் அரிக்கும். வெயிலில் அஞ்சு நாள் டெஸ்ட் கிரிக்கெட் மாட்சில் long batting innings ஆடும் சச்சின் போன்றவர்கள் அடிக்கடி Abdomen Guard ஐ சரி செய்வதும்... 'பந்தை பளபளப்பாக்குகிறேன் பேர்வழி' என்று பவுலர்கள் பேண்டில் தேய்ப்பதும்... இதனால்தானோ... என்ற எனது ரூம் மேட்டின் டவுட்டிலும் பாயின்ட் இல்லாமல் இல்லை..!
முகத்துக்கு போடும் பாண்ட்ஸ் பவுடர் இல் ஆரம்பித்து... லைப்பாய்.. டெட்டால் சோப்...என்று போட்டு குளித்து... டிவி விளம்பரத்தில் வரும் itch guard இல் இறங்கி... "மாப்ள. எனக்கும் இந்த பிரச்சினை உண்டுடா.." என்ற நண்பர்கள் அவர்களின் டாக்டர்கள் சொன்ன பிரிஸ்கிரிப்ஷனில் உள்ள எல்லா வைத்தியமும் ஓசியில் செய்து முடித்துவிட்டு... நண்பன் ஐடியாவான... "விக்ஸ் வேபரப் பிளஸ் போட்டு பாரேன்" கூட போட்டுப்பார்த்து... அப்புறம், பக்கத்து வீட்டு தாத்தா சொன்ன பாட்டி வைத்தியம் உட்பட... ம்ஹூம்.. ஒண்ணும் வேலைக்காகவில்லை..!
பிறகு டாக்டர் கிட்டே போனால்... அவர் நாம் ஏற்கனவே உபயோகித்த "அதே நண்பன் ப்ரிஸ்க்ரிப்ஷன்"-ஐ கொடுக்க அலுப்பாகிவிடும்..! இப்படியே... யாராவது ஒரு டாக்டர் தீர்வு சொல்ல மாட்டார்களா... என்று அலைந்தால்... ம்ஹூம்..! இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது..! குளிர்காலத்தில் பிரச்சினை சற்று குறைந்தது. மீண்டும் அடுத்த வருடம் கோடை ஆரம்பிக்கும் முன்னரே பிரச்சினை சூடுபிடிக்க... பல மாதமாக எல்லா டாக்டரிடமும் அலைந்து கடைசியில் ஊரில் ஒரே ஒரு டாக்டர் மிச்சம் இருந்தார்..!
இவரிடம் யாரும் வைத்தியம் பார்த்துக்கொள்ள செல்வதில்லை. sick leave -க்கான மெடிக்கல் சர்டிஃபிகேட், ஃபிட்னஸ் சர்டிஃபிகேட், அட்டஸ்டேஷன் இவற்றுக்கு மட்டுமே மிகவும் பிரபலமான டாக்டர் இவர்..! சரி.. இவரிடமும் சென்றுதான் வருவோமே.. என்று போனேன்..!
உள்ளே சென்றால்.. "ம்ம்ம் எங்கே.. சைன் போடணும்..?" என்று பேனாவை கழட்டி வைத்துக்கொண்டு தயாரானார்..!
(ஐயோ பாவம்.... இப்படியான ஆளிடமா வந்து மாட்டிக்கொண்டேன்...? - என்று நான் நொந்து போக... அட... நம்மிடமும் ஒரு 'சோதனைச்சாலை எலி' வந்து சிக்கி விட்டதே... என்ற மாதிரி அவர் பார்வை என்மீது இருக்க...)
யோசனையில் பேனாவை மூடி பாக்கெட்டில் வைத்துவிட்டு... "ம்ம் சொல்லுங்க... உடம்புக்கு என்ன பிரச்சினை..?" என்றார்..! (கடைசியா இப்படி எப்போ யாருகிட்டே எந்த வருஷம் கேட்டாரோ...)
மேலே பல பாராவில் சொன்னதை சுருக்கமாக ஒரு பாரா அளவுக்கு என் பிரச்சினையை சொன்னேன்..! எத்தனை பேரிடம்தான் இதையே சொல்வது..? ஆனால், அவர் அடுத்து கேட்டாரே ஒரு கேள்வி..!
"என்ன ஜட்டி யூஸ் பண்றீங்க..?" என்றார்..!
(இந்த கேள்வி என்னத்துக்கு..?) "வைக்கிங்" என்றேன்...!
"ஹி ..ஹி.. நான் கம்பெனி பிராண்டை கேட்கலை... மாடல் கேட்டேன்."
எனக்கு புரியலை. ஏனெனில் இந்த கேள்வி எனக்கு புதிது. திரு திரு என முழிக்க...
"Ok... unbuckle & loose your pant up to thighs... let me see..."
( ம்ம்ம்... இது வழக்கமான ஒன்றுதானே...! :-) எழுந்து நின்று.. பேண்டை சற்று இறக்கினால்... இவர் என் கிட்டேயே வரவில்லை... இடத்தை விட்டு அவர் எழக்கூட இல்லை..! அடுத்த நொடி... )
"ம்ம்ம்.. போட்டுக்கங்க..." என்று சொல்லிவிட்டார்..!
அப்புறமா சொன்னதுதான்... எனக்கு முற்றிலும் புதிது..!
"நீங்க V- டைப் கட் மாடல்... ஜட்டி யூஸ் பண்றீங்க. அதனால.. உடலில் வழியும் வியர்வையால் அண்டர்வேர் நனைந்து... அது groin region -ஐ ஒட்டி எலாஸ்டிக் வைத்து கவ்விப்பிடித்து இருப்பதால்... அங்கே எப்போதும்.. வியர்வையால் ஈரமாகவே இருக்கும்..! இதுதான் காளான்களுக்கு அவசியம். எனவே.. அந்த இடத்தில் ஈரம் சேர அனுமதிக்க கூடாது. இதுதான் நமது லட்சியம்..!"
(அப்படீன்னா அண்டேர்வேர் போடக்கூடாதுன்னு சொல்லப்போறீங்களா டாக்டர்..? இதுதான் சொல்லவந்த லட்சியமா...? --இப்படி கேட்க நினைத்தேன்... ஆனால்... அவர் எனக்கு பேச கேப் விடாமல் தொடர்ந்தார்...)
"இப்போ... ஏற்கனவே அந்த இடத்தில் உள்ள தோல் ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பதால்... இந்த வகை V- டைப் கட் மாடல் ஜட்டியானது... form ஆகும் புதிய மெல்லிய தோலையும் உருக்குலைத்து ரணப்படுத்தி.... புண்ணை காயவிடாமல்... செய்து கொண்டு இருக்கும்..! இதுவும்... fungus களுக்கு ஏக குஷியாகிடும்.
ஆகவே... இதற்கு ஒரே ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்கு...!"
டெட்டால் சோப்... லைப்பாய் சோப்... கண்டிட் கிரீம்... கண்டிட் பவுடர்.. இட்ச் ஆயில்... இட்ச் கார்ட்... படை மருந்து... ஆண்டி ஃபங்கல் மாத்திரை... anti fungal spray... இப்படி ஏதும் இல்லாம புதுசா வேற என்ன சொல்ல போறார்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும்போது... அவர் பிரிஸ்கிரிப்ஷன் எழுத ஆரம்பித்து விட்டார்..!
"ஆனா.. இந்த ப்ரிஸ்கிப்ஷன்.. மெடிக்கல் ஷாப்பில் கிடைக்காது...! அது.... ஜவுளிக்கடையில் தான் கிடைக்கும்.." என்றார்.
கிழிஞ்சது... ஒண்ணுமே புரியாமல்... அவநம்பிக்கையுடன் அவரை பார்த்தேன். ஆனால், இதை எல்லாம் லட்சியமே செய்யாமல்... என் பெயர், வயது, கேட்டு... அவர் சீரியசாக எழுதிக்கொண்டே சொல்லிக்கொண்டு இருந்தார்...
"ஒரு டஜன் ட்ரங்க் மாடல் ஜட்டி...! அவ்ளோதான் ப்ரிஸ்க்ரிப்ஷன்..! "
"?!?!?!?!?!?!?!"..... நான் கண்ணிமைக்காமல் அவரையே நோக்க... அவர் மேலும் சொன்னார்.
"இந்த வகை ட்ரங்க் மாடல் அண்டர்வேர் தொடையைத்தான் கவ்விப்பிடிக்கும். groin region ஐ அல்ல..! எனவே வழியும் வியர்வை... groin இல் நிற்காமல் தொடைக்கு வழிந்து விடும். தொடையின் தோல் அழுத்தமானது என்பதாலும்... அது சற்று காய்ந்துவிடக்கூடிய இடத்தில் உள்ளதாலும்... அங்கே ஈரமாக இருந்தாலும் கிருமிகள் தொற்றாது. முக்கியமாக groin region இல் உள்ள கிருமிகள் உயிர்வாழ ஏதுவான ஈரம் இனி அவற்றுக்கு கிடைக்காது போக, அதனால் காலப்போக்கில் அவை அழிந்துவிடும்..!
நீங்கள், வேலைக்கு செல்லும்போது ஒரு முறையும்... அது முடிந்து வந்ததும் ஒரு முறையும் வியர்வை போக கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஒருமுறை போட்ட அன்டர்வேரை திரும்ப போடக்கூடாது. துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்... இதுதான் ட்ரீட்மென்ட்..." என்று முடித்தார்..!
இது போன்ற அறிவுரைகள் ஏற்கனவே பலர் சொன்னதுதான் என்றாலும்... ட்ரங்க் மாடல் அண்டர்வேர் முற்றிலும் புதிது..! யாருமே சொல்லாதது..! அவர் சொன்னவை லாஜிக்கலாக சரியாக இருந்தது. எனவே, செயல்படுத்தும் முனைப்பில் இறங்கினேன்.
அன்றே... அந்த 'M -டைப்' (?) ட்ரங்க் மாடல் அன்டர்வேர் அரை டஜன் வாங்கினேன். (ஒரு டஜன் வாங்கலை... நாங்க உஷாருல்ல...) அவர் சொன்னது போன்று செய்துவந்தேன். என்னவொரு ஆச்சரியம்..! அடுத்த வாரமே முன்னேற்றம் தெரிந்தது..! (ஹை... நான் நேரா நடக்க ஆரம்பித்து விட்டேன்..!) நம்பிக்கையுடன், ஓடிப்போய்... இன்னும் ஒரு அரை டஜன் வாங்கினேன்.
இரண்டு வருட பிரச்சினை... ஒரே மாதத்தில் முற்றாக தீர்ந்தது..! இவர் போன்ற ஒரு மருத்துவர் மூலம் அப்பிரச்சினையை பூரணமாக குணப்படுத்திய இறைவனுக்கே புகழனைத்தும்..! இப்படி ஒரு சிறப்பான தீர்வை சொன்ன அந்த டாக்டர்... எதற்கு ஈ ஓட்டுகிறார்..? என்றுதான் எனக்கு இன்னும் புரியவில்லை.
ஒருமாதம் கழித்து அவரிடம் சென்றேன்..! "பேனாவை எடுத்து திறந்து வைத்துக்கொண்டு எங்கே சைன் பண்ணனும்...?" என்றவரிடம்... 'இல்லை டாக்டர், என் பிரச்சினைக்கு சரியான மருந்தை எழுதித்தந்த உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்..' என்றேன்..!
சஹீ புஹ்காரி - 5678. இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
"" அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. " ...என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆனால், நாம் தான் சிலநேரம் நிவாரணியை சரியாக தேடி கண்டுபிடிப்பது இல்லை..!
---சரியாகத்தான் சொல்லி இருக்கார் திருவள்ளுவர்..!
டிஸ்கி -
இந்த கோடை வெயிலில், வியர்வை வழிந்தோட கஷ்டப்பட்டு உழைக்கும் சகோஸ் யாருக்கேனும் இதுபோல பிரச்சினை இருந்தால்... அவர்களுக்கு என்னுடைய இந்த அனுபவம் உதவட்டுமே என்றுதான் இதனை எழுதினேன்..!

நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
---சரியாகத்தான் சொல்லி இருக்கார் திருவள்ளுவர்..!
டிஸ்கி -
இந்த கோடை வெயிலில், வியர்வை வழிந்தோட கஷ்டப்பட்டு உழைக்கும் சகோஸ் யாருக்கேனும் இதுபோல பிரச்சினை இருந்தால்... அவர்களுக்கு என்னுடைய இந்த அனுபவம் உதவட்டுமே என்றுதான் இதனை எழுதினேன்..!
35 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ஆஷிக்!
கோடை சூட்டுக்கு ஏற்ற பதிவு. பலருக்கு உபயோகமாக இருக்கும். நாம் அணியும் உடையில் ஓவர் டைட்டாக போடுவதே பல ஒவ்வாமைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
அஸ்ஸலாமுஅலைக்கும் ... சிறந்த பதிவு நன்றி ..சிரிக்காமல் இருக்க முடியவில்லை... தொடருங்கள் .
//உடலின் எந்த இடத்தில் உடலுடன் ஒட்டியவாறுள்ள உடை அதிகமா ஈரமாக உள்ளதோ... அந்த இடத்தின் தோல் மெல்லிதானது என்றால்... ஏக சந்தோசம் இந்த நுண்ணுயிரிகளுக்கு..! இந்த அடிப்படையில் இவைகள் நம் உடலில் தேர்ந்தெடுக்கும் முதலிடம்...நமது கால்களுக்கு இடையே உள்ள இருபக்க groin region தான்..! அரிப்பு ஆரம்பித்து விடும்..! ஏனெனில்... fungi are decomposers..! இதுதான் Fungal Infection..!
Groin region -இல் தோலில் நீளவாக்கில் வெடிப்பு போல ஏற்படுத்தும் ஒருவகை..! இன்னொன்று... தோலை தீக்காயம் பட்டது போல அரித்து விடும்..! மூன்றாவது வகை.. வியர்க்குரு போல பெரிது பெரிதாக உடையாத வலிக்கும் கட்டி கிளம்பும்..!
சும்மா இருந்தாலும் அரிக்கும் //
FOR ANY PROBLEM AS MENTIONED / SUFFERED ,
AFTER BATHING
DRY THE AREA
APPLY COCONUT OIL
EVEN TATA COCONUT HAIR OIL
THOROUGHLY ON THE AFFECTED AREA
BEFORE WEARING UNDER GARMENMENT
I HAVE SUFFERED THE ABOVE ,
IN 1958 (19 YEARS OLD)
SEEN MANY DOCTORS,
DIAGONISED AS “WASHERMAN ITCH” “ FUNGUS INFECTION”
APPLIED CREAMS AND OINTMENTS OF ALL SORTS
BUT NO WAY OUT.
ONE DAY WHEN I RAN OUT OF THE CREAM
I APPLIED TATA COCONUT HAIR OIL.
ON THE AREA THOROUGHLY
FELT MUCH COMFORT
CONTINUED IT FOR A WEEK.
ALL THE PROBLEM SOLVED FOREVER.
LATER WHEN I WAS 25 YEARS OLD
I FOUND IN BETWEEN THE FINGERS ON MY FEET
SKIN WAS PALE WHITE WET AND ITCHING WITH A VERY BAD SMELL.
SEEN DOCTORS AND BEEN DIAGONISED AS "ATHELETES FOOT"
SAME STORY LOADED WITH "FUNGUS CREAM / OINTMENT "
AFTER A MONTH WITHOUT ANY RECOVERY
AFTER BATHING I RUBBED (ALMOST POURED) TATA COCONUT HAIR OIL
EVERY DAY .
WITHIN A WEEK I RECOVERED FULLY.
FOR ANY SKIN PROBLEM EVEN FOR BURNS, LONG UNHEALING SORES
BEFORE GOING TO DOCTORS
APPLY ‘COCONUT OIL” EVEN “TATA COCONUT HAIR OIL”
FOR A FEW DAYS.
TRUST ME
INSHA ALLAH EVERYTHING WILL BE ALLRIGHT.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஹிமிய்யூடிட்டி காலத்தில தலைக்கு மருதாணி வச்சு அரை மணி நேரம் கழிச்சு குளித்தால் வியர்வையே வராது . எப்போதும் குளுகுளுன்னு இருக்கும் . 1.5 dhs ல் (ஒரு பாக்கெட் )ஒரு மாசம் முழுசா போகும் . 3 நாளைக்கு ஒரு தடவை வைத்து குளித்தால் போதும் :-).
பயனுள்ள பதிவுதான்.. எனக்கும் இந்த பிரச்சினை முன்பு இருந்தது.. தொடர்ந்து டெட்டோல் சோப் பயன்படுத்தி வந்தாலும் பிரச்சினையிலிருந்து ஓரளவுக்கு தப்பலாம்..
ஜட்டி மேட்டர் புதுசு,, நன்றி!!
ஜெய்லானி said... 4
//ஹிமிய்யூடிட்டி காலத்தில தலைக்கு மருதாணி வச்சு அரை மணி நேரம் கழிச்சு குளித்தால் வியர்வையே வராது// பெண்கள் யூஸ் பண்ணும் மருதானியா..? .
//1.5 dhs ல் (ஒரு பாக்கெட் )ஒரு மாசம் முழுசா போகும்//
பெயரையும் சொல்லலாம்ல .
//3 நாளைக்கு ஒரு தடவை வைத்து குளித்தால் போதும் :-).// சளித்தொல்லை இருக்கிறவங்களுக்கு சரிப்பட்டு வருமா..?
அது என்ன ஒரு அதிசயம்னு தெரியல..ஒரு மாதமாக நான் ட்ரன்க் மாடல் உள்ளாடைதான் உபயோகிக்கிறேன்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கொளுத்தும் கோடைக்கு
இதமான பதிவு! சகோ
நல்ல பதிவு சகோ.
இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு அரிய நிவாராணம் தருகிறது உங்கள்
இடுகை
நன்றி பகிர்ந்தமைக்கு!
ஆனால் பிரச்சினை இங்கே தான்
//சஹீ புஹ்காரி - 5678. இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
"" அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. " ...என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.//
ஏன் நோயை இறக்கணும் அப்புறம் நிவாரணியை அருளனும் :-(
நகைசுவையாக எழுதிய பலருக்கு பயனுள்ள பதிவு.
மருந்து கொடுப்பவரெல்லால் மருத்துவர் கிடயாது
நோய்க்கான காரணம் அறிந்து மருந்து கொடுப்பவர்தான் உண்மையான மருத்துவர்.
வாழ்த்துக்கள் சகோ..
ஸலாம் சகோ...
பயனுள்ள பதிவு...
எனக்கு ஊர்ல இருக்கும்போது இந்தப்பிரச்சன லேஸா இருந்தது...உங்க டாக்டர் ஆலோசனைதான் எனக்கும் தோனுச்சு..(நாங்க பெரிய டாக்டர்ல.. :)) முயற்சி பண்ணினேன்.. சரியாகிடுச்சு..ஆனால் M டைப் இல்ல வேர ப்ராண்ட் நார்மல் உள்ளாடைதான்... M டைப்ல கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கிறதாக...விஞ்ஞானப்பூர்வ?? நண்பர் வட்டாரம் அறிவுறை கூறியதால்..அது கிட்ட போகல...:)
அல்லாஹ் உதவி கொண்டு இங்க அந்தப்பிரச்சனை இல்ல..வெயிலில் அதிகம் இருக்காத இலகுவான வேலையை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்...புகழ் அனைத்தும் அவனுக்கே...
அன்புடன்
ரஜின்
நாகரீகம் என்ற பெயரில் கொளுத்தும் வெயிலில் கோட் அணிந்து கொண்டு திரிபவர்களைக் கண்டால் இப்படி எல்லாம் அவஸ்தை படுவார்களோ எனத்தோன்றும் ..பயனுள்ள பதிவு .
இந்த ட்ரங் மாடல் ஜட்டிக்குத்தான் இவ்வளவு பெரிய கச்சேரியா?நமக்கும் போட்டிக்கு ஆட்கள் இருக்கவே செய்றாஙக:)
நானெல்லாம் ட்ரங்குக்கு மாறி பல வருடம் ஆயிடுத்து.
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஸ்) நல்ல உங்க சீரிசான அனுபவத்தை படித்து வரும் போது காமடி, அட்வைஸ் மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு சகோதரே.
//"ஒரு டஜன் ட்ரங்க் மாடல் ஜட்டி...! அவ்ளோதான் ப்ரிஸ்க்ரிப்ஷன்..!// 15 வருடமாக இது போன்ற ஜட்டி போடுகிறேன் இருந்தாலும் வெயில் காலங்களில் எனக்கு வருதுண்டு. எனக்கு தெரிந்தது நானும் கொஞ்சம் சொல்லறேன். இவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். உசணாத்தை எற்படுத்தும் குசான் இருக்கற சேர்ரில் அதிக படியான நேரம் உட்கறகூடாது. ஈரமான ஜட்டி ஒரு போது போடக்கூடாது. அதிக chemical இருக்கற சோப் use பண்ன வேண்டாம். Old Cinthol soap (Red Color) சிறந்தது. (Viking) M டைப்பில் பட்டி இருக்கற மாதிரி ஜட்டி மேலும் சிறந்தது. வெயில் காலங்களில் தூங்கும் போது இறுக்கமான ஆடை அனிவது தவிர்க்கவும்.
எனக்கும் இதே பிரச்சினை முன்னர் இருந்தது அதோடு பட்டபாடு கொஞ்சமல்ல...
பலருக்கு பயனுள்ள பதிவு....
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம்
//நாம் அணியும் உடையில் ஓவர் டைட்டாக போடுவதே பல ஒவ்வாமைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.//---(குளிர் அல்லாத நாட்கள் எனில்)சரியான கருத்து சகோ.சுவனப்பிரியன்..!
@demhaஅலைக்கும் ஸலாம் //தொடருங்கள்.//--இதே டாக்டரிடம் வேறொரு சிகிச்சைக்காகவும் சென்றிருக்கிறேன் சகோ.டெம்ஹா..! இம்முறையும் அவரின் சிகிச்சை முறை சக்சஸ்..! இறைநாடினால் பின்னர் அதனை தொடர்கிறேன்..!
///FOR ANY PROBLEM AS MENTIONED / SUFFERED ,
AFTER BATHING
DRY THE AREA
APPLY COCONUT OIL
EVEN TATA COCONUT HAIR OIL
THOROUGHLY ON THE AFFECTED AREA
BEFORE WEARING UNDER GARMENT///
மிக நல்லதொரு அரும்மருந்து தேங்காய் எண்ணெய் என்பதில் எனக்கும் எள்ளளவும் மாற்றுக்கருத்தே இல்லை சகோ.வாஞ்சூர்.
எனது ப்ராப்ளம்...
டைட்டான V கட் அண்டர்வேர் போட்டதால்... எலாஸ்டிக் அழுத்தி ஆரிய புண்ணும் மீண்டும் உடைந்து விடும்..!
எனவே,
தேங்காய் எண்ணெய் + Trunk மாடல் = பர்ஃபக்ட் காம்பினேஷன்..!
@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் சகோ.ஜெய்லானி... /// ஹிமிய்யூடிட்டி காலத்தில தலைக்கு மருதாணி வச்சு அரை மணி நேரம் கழிச்சு குளித்தால் வியர்வையே வராது. ///----அந்த நாள் முழுதும் வெயிலில் ஓடியாடி வேலை செய்தாலுமா..? அதிசயமான நியூஸ் சகோ..! மிகவும் நன்றி சகோ..!
இன்ஷாஅல்லாஹ், கண்டிப்பா.... ட்ரை பண்றேன் சகோ... சவூதியில்.... நான் இருக்கும் ஜுபைல் ஏரியாவில்... ஜூலையில் 50 degree செல்சியஸ் (122 F) வெப்பம் தாண்டும். அச்ச்சமயம் ... என் அனல் மின் நிலையத்தினுள் சில இடங்களில் வெளி வெப்பத்தை விட 20 டிகிரி கூட இருக்கும்..! (150 F..!) அடுத்து.... ஆகஸ்டில் இதோடு, கூடவே 90% - 95% humidity யும் செர்ந்துக்கும்....... அப்போது..... பாய்லர் ஏரியாவில்.... உங்கள் ஐடியா மட்டும் எனக்கு வொர்க் அவுட் ஆச்சுன்னா... ஆஹா... சகோ... உங்களை என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது...! உங்களை பாராட்டி தனி பதிவே இன்ஷாஅல்லாஹ் அப்போது போடுவேன்..!
ஸலாம் சகோ...
நல்ல தேவையான பதிவு.
நண்பர்களின் அறிவுரை மற்றும் அனுபவப்படி வெயில் காலத்தில் நமக்கு Trunk மாடல் ஜட்டிதான்.
பேட்ஜலர் லைஃபில், நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை, இது அனைவருக்கும் புது அனுபவம், "ரிங் ஸோலின்" -ன்னு ஒரு மருந்து (இதை இரவில்தான் பயன்படுத்த வேண்டுமாம்!), வாங்கி என் நண்பன் தேய்க்க, அவனால் இருப்புக்கொள்ள முடியவில்லை, ஆசிட் ஊத்திய அனுபவமாம், பிறகு அரைமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவனுக்கு சிறு விடுதலை கிடைத்தது.
உங்கள் பதிவை படித்ததும் சிறிப்புடன் அந்த அனுபவமும் நியாபகம் வந்து விட்டது. :))
@Riyasபெண்கள் யூஸ் பண்ணும் மருதாணிதான்.
\\//1.5 dhs ல் (ஒரு பாக்கெட் )ஒரு மாசம் முழுசா போகும்//
பெயரையும் சொல்லலாம்ல .\\
---இங்கே ஒரு ரியாலுக்கு கோன் மருதாணி பார்த்து இருக்கேன். பிராண்ட் பெயர் அறிய எனக்கும் ஆவல்..!
//சளித்தொல்லை இருக்கிறவங்களுக்கு சரிப்பட்டு வருமா..?//
---நன்றாக நிறைய நேரம் ஆழ்ந்து தூங்கினால் சளித்தொல்லை வராது சகோ.ரியாஸ்..! சளிக்கு தூக்கம்தான் சிறந்த மருந்து.
@Riyas
இதோ நீங்கள் அவரிடம் கேட்ட பதில்...
///////////////////////////////////
Jailani ஜெய்லானி (said in facebook)
அதுக்கு பேர் சூடானி மெஹந்தி , உருது , அரபியில பிரிண்டட் ஆகி இருக்கும் . எந்த கலரும் கலக்காத பியூர் மருதானி . சளித்தொல்லை இருபதாக தெரிந்தால் சின்ன அளவு நமம் ஊரில் பெண்கள் உள்ளங்கையில் வைக்கிறமாதிரி உள்ளங்காலில் வைத்து டெஸ்ட் செய்யவும் . மணிக்கணக்கில் ஆரம்பகாலத்தில் வைத்தால் குளிர் காய்ச்சல் வந்துவிடும் . ஸோ இது வெய்யில் காலங்களில் மட்டுமே ....!!!.
இது வரை தலியில் வைத்து பழக்கபடாதவர்கள். லீவு நாளில் காலையில் வைக்கவும் ((வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வெள்ளிக்கிழமை பெஸ்ட் . வைத்த மதியம் கும்பகர்ண தூக்கம் வரும் ))
///////////////////////////////////
@jumma sait//அது என்ன ஒரு அதிசயம்னு தெரியல..//---இப்போ சொல்லிட்டோம்ல... சகோ.ஜும்மா.!
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கொளுத்தும் கோடைக்கு
இதமான பதிவு!//---அணிந்தாலும் இதமே சகோ.குலாம்..!
@வலைஞன்வணக்கம் நம் இறைக்கே..! //உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்//---ஓகே... சகோ.வலைஞன்..!
@kari kalan
//ஏன் நோயை இறக்கணும் அப்புறம் நிவாரணியை அருளனும் :-(//
ஹி..ஹி...ஹி.....
உங்களின் சவூதி நெயில் பாலீஷ் பதிவில் நீங்கள் பெற்ற இன்பம் & பெற்றுக்கொண்டு இருக்கும் மகிழ்ச்சி எல்லாமே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் சகோ..!
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மட்டும் இறைவன் இல்லை..!
என் மீது இரண்டு வருடம் தங்கி இருந்த காளானுக்கும் இறைவன்தான்..!
அவைகளுக்கு உணவும் உறைவிடமுமாக என் உடலை ஏற்படுத்தியதும் இறைச்செயல்தான்..!
ஆனால், அதை என்னளவில் நான் நோயாக பார்க்கிறேன்..! அப்படி பார்க்க உரிமையும் தந்தது இறைவன்தான்..! ஏனெனில், நோய்க்கு மருத்துவம் செய்ய சொன்னதும் இறைவன்தான்..!
முயற்சித்தேன்..! அதற்கு வெற்றி (குணம் அடைதல்) தந்ததும் இறைவன்தான்..! அல்ஹம்துலில்லாஹ்..!
நோய்க்கே நீங்கள் இப்படி சொன்னால்.. அதைவிட இறப்பு என்று ஒன்று உள்ளதே..? அதை தருவதும் இறைவன்தானே..!
கடல் வாழ் உயிரினம் ஏதும் இறக்காது போயிருந்தால்... கடல் தண்ணீர் மிகைத்து நிலத்தில் overflow ஆகி, பூமியே அழிந்திருக்கும்..!
இவ்வுலகில் இதுவரை தோன்றிய எந்த ஒரு தாவரமும் இறக்காது இருந்திருந்தால்... விலங்குகள் பூமியில் வாழ இடமே இருந்திருக்காது..!
விலங்குகள் ஏதும் இறக்காது போயிதிருந்தால்... மனிதர்கள் இருக்க இடமே இருந்திருக்காது..!
இதுவரை இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் எவரும் இறக்காது போயிருந்தால்...??? கேடுகளை நினைக்கவே இயலவில்லை...!
மேலே உள்ளவை எல்லாமே நடந்திருந்தால்... இறுதி விளைவாக... நாம் சுவாசிக்க ஆக்சிஜன் போதாமல் போயி... எல்லாரும் செத்தே போயி இருப்போம்..!
இறைவனின் கருணைதான்... இறப்பு..! --இது நமக்கு..!
அதேபோல... இறைவனின் கருணைதான்... நோய்..! இது நமக்கல்ல, பிறருக்கு..!
இயன்றால் நடுநிலையுடன்... சிந்தியுங்கள் சகோ..!
@வ.அன்சாரி//நோய்க்கான காரணம் அறிந்து மருந்து கொடுப்பவர்தான் உண்மையான மருத்துவர்.//---நோய்நாடி... மிகச்சரியா வழிமொழிஞ்சிங்க சகோ.அன்சாரி..!
@RAZIN ABDUL RAHMANஅலைக்கும் ஸலாம்
//அல்லாஹ் உதவி கொண்டு இங்க அந்தப்பிரச்சனை இல்ல..வெயிலில் அதிகம் இருக்காத இலகுவான வேலையை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்...புகழ் அனைத்தும் அவனுக்கே...//---ஆமீன்..!
@சசிகலா//நாகரீகம் என்ற பெயரில் கொளுத்தும் வெயிலில் கோட் அணிந்து கொண்டு திரிபவர்களைக் கண்டால் இப்படி எல்லாம் அவஸ்தை படுவார்களோ//--- :-)))
@ராஜ நடராஜன்//நானெல்லாம் ட்ரங்குக்கு மாறி பல வருடம் ஆயிடுத்து.//---ஓகே சீனியர்..!
@Nizamஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//உசணாத்தை எற்படுத்தும் குசான் இருக்கற சேர்ரில் அதிக படியான நேரம் உட்கறகூடாது.//---"உஷ்ணத்தை.... குஷன்..."
அப்புறம்... மற்ற டிப்ஸ்களும் நன்றாக உள்ளன சகோ.நிஜாம்..!
@maskமுதலில் யோசித்தேன்... இப்பதிவு போடலாமா வேணாமான்னு... //எனக்கும் இதே பிரச்சினை முன்னர் இருந்தது //---ஆக, நீங்கள் உட்பட... இங்கே பின்னூட்டமிட்ட பலருக்கு இந்த பிரச்சினை இருந்திருக்கே..! சரிதான் பதிவு போட்டது..!
@Syed Ibramshaஅலைக்கும் சலாம்
//"ரிங் ஸோலின்"//---நல்ல வேலை நம்ம டாக்டர்கள் இதை தரவில்லை..!
இங்கே வருகை புரிந்த,
பின்னூட்டமிட்ட,
ஓட்டளித்த மற்றும்
பதிவை பகிர்ந்த அனைவருக்கும் மிகவும் நன்றி சகோஸ்..!
அதிலும்,
பின்னூட்டங்களில்
ஆக்கப்பூர்வமான அரிய தகவல்கள்
மற்றும்
மிகச்சிறந்த மருத்துவ டிப்ஸ் ஆகியவற்றை
பலர் அறிய அளித்த சகோதரர்களுக்கு...
ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
நல்ல பதிவுகளில் மிக முக்கியமான பதிவு.....
புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!