சகோ... இப்படி நீங்களோ நானோ அல்லது எவரா இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே... ஏதோ ஒரு சூழலிலே... யாரோ ஒருத்தரிடமிருந்து... மேற்படி அர்ச்சனையை நாம் எப்படியோ பெற்றிருப்போம்..! இப்போது நம் நினைவை சற்று மெல்ல மீட்டிப்பார்த்தால்... எங்கே, எப்போது, எதற்காக, யார் நம்மை அப்படி கடிந்து கொண்டது என்று நியாபகம் வந்து விடும்..! அதன்படி நியாபகம் வராவிட்டால்... இதோ உங்களுக்காக சில க்ளூஸ்..! இதன்படியும் நியாபகம் வராவிட்டால்... ஸாரி... பதிவுலக சொல்வழக்குப்படி 'இதற்கு கம்பெனி பொறுப்பல்ல'..!
.
.
"நங்" என்று குட்டை நிலைவாசப்படியில் நெட்டையாக வளர்ந்தவர் நெற்றி இடித்துக்கொண்ட போது... அந்த வீட்டுக்காரங்க எப்படி சொல்லி இருப்பாங்க...?
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
தரையை பார்த்து நடக்காமல் அங்கே சைடில் போகும் யாரையோ வேடிக்கை பார்த்துக்கொண்டு... ஏதோ யோசனையில் வேகமாக நடந்து... வீட்டு வாசற்ப்படியில் "நொச்" என்று கால் கட்டை விரலில் இடித்துக்கொண்டு... நகம் பேர்ந்த போது... 'தரையை பார்த்து கவனமாக நட'ன்னு முன்பு அப்படி அறிவுரை சொன்னவர்... சொல்லி இருப்பாரே...
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
தராசையும் எடை நிறுக்க படிக்கற்களையும் கொண்டுவர சொன்ன முதலாளி வெறும் தராசை மட்டும் கொண்டுவந்து கொடுத்த வேலைக்காரரிடம் இப்படி கடிந்து இருப்பாரே...
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
ஆவணங்களுக்கான ஜெராக்ஸ் காபி எனப்படும் படியை இணைக்காமல் வெறும்ம்ம்ம்ம்மனுவை மட்டும் கொண்டு வந்து தந்தவரிடம் அரசு அலுவலர் கத்தி இருப்பாரே இப்படி...
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
எப்போதுமே வேகமாகவும் அவசரமாகவும் மாடிப்படியில் ஏறி இறங்குவதை பார்த்த எவரும் சொல்லி இருப்பார் அப்படி..! என்னைக்கு கேட்டிருக்கோம்..? ஒருநாள் தடுக்கி தட்டுத்தடுமாறி நிலை குலைந்து விழுந்த போது...சொல்லி இருப்பார்களே...
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
இப்படித்தான் ஒருமுறை... அந்த பெரிய ஜவுளிக்கடையில் தள்ளுபடி போட்டிருக்காங்க என்ற விளம்பரத்தை நம்பி... ஏகப்பட்ட துணிகளை எடுத்துக்கொண்டு பில் போட்டால்... எல்லாமே அதே விலைதான்..! அப்படியே அதிர்ச்சியாகி... "என்னாச்சுங்க தள்ளுபடியை காணோமே..?" என்றால்... "அதோ... நீங்க ஏறி வந்தீங்களே... கவனிக்கலையா...?" என்று இடம் விட்டு இடம் நகற்ற வசதியான (விமானத்தில் பயணிகள் ஏற அமைத்து இருப்பார்களே... அது போன்ற) வகையில் தள்ளிக்கொண்டு போகும் ஒரு மாடிப்படியை கைகாட்டி... "அதுதான் எங்கள் ஜவுளிக்கடை தள்ளுபடி" என்று அசால்ட்டாக கூறுகிறார்கள். அடப்பாவிகளா... தள்ளுறபடியை... தள்ளுபடின்னு விளம்பரத்தில் போட்டு ஏமாத்திட்டிங்களே........ன்னு சண்டை போடுகையில், என் நண்பர்... சொல்றார்... "நான்தான் அப்பவே சொன்னேனே... விளம்பரத்தில் எத்தனை % தள்ளுபடி ன்னு போடலைன்றதை சொல்லிக்காட்டி... நீயும் அந்த விளம்பரத்த... இன்னொரு தடவை நல்லா படின்னு...."

அமோக மகசூல் விளைந்ததால் ஏழைகளுக்கு படியளக்கும் ஒரு பணக்கார பண்ணை எஜமான், அது சமயம் தன்பணியாள்... அரிசி அளக்கும் படிக்குவளையை மறந்து... அரிசி மூட்டையை மட்டும் கொண்டு வரும்போது... எப்படி சொல்லி இருப்பார்..?
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
ஒழுங்கா பாடங்களை படிக்காமல் பரிட்சையில் முட்டை மதிப்பெண் வாங்கிய மாணவரிடம்... ஆசிரியர் தவறாமல் சொல்லும் 'சொன்னபடி கேளு' வாக்கியம் இதுதானே...
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
பல வருடங்கள் அகழ்வாராய்ச்சி நடத்தி ஒரு பழங்கால உயிரினத்தின் படிமனை கண்டு பிடித்துவிட்டு, அதை அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாக கொண்டு சென்று அருங்க்காட்சியகத்தில் வைக்க பொறுப்பு தரப்பட்ட.... தம் ஜூனியர்... கவனக்குறைவாக அதை கொண்டு செல்லும் வழியில் மூன்று துண்டாக உடைத்து விட்டால்... இப்படித்தானே கடுப்பாவார்...
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
.
எழுதப்படிக்க தெரியாத ஒரு பெரியவரிடம் போஸ்ட் மேன், அவருக்கு வெளிநாடு ஒன்றில் லேபராக பணிபுரியும் அவரின் படிப்பறிவு அற்ற மகனிடம் இருந்து வந்த ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைந்த கடிதத்தை கஷ்டப்பட்டு எழுத்தை யோசித்து வாக்கியத்தை அமைத்து ஒவ்வொன்றாக படித்து விஷயத்தை சொல்கிறார்... அப்போது அதில் 'தன்னுடைய உழைப்பு காரணமாக தினமும் உடல் முழுக்க வலி ஏற்படுவதாக' மகன் குறிப்பிட்டு இருக்க... அப்போது அந்த பாமர பெரியவர் எப்படி சொல்லி இருப்பார்... ஐந்தாவது கூட பாஸ் ஆகாத தன் மகனை எண்ணி...

இந்த பக்கத்தில் வரும் 'படி' என்ற வார்த்தை எல்லாம் சிகப்பு போல்ட் ஃபாண்டில் வர வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லி ஒரு தட்டச்சரிடம் மெசேஜ் டைப் அடிக்க சொல்லயிருந்த நபர்... டைப் அடித்தவர் அதை சரியாக உள்வாங்காமல்.... 'படி'க்கு பதில் 'கடி' என்ற வார்த்தையை போல்ட் ஃபாண்டில் அடித்து வைத்திருக்க... இந்த கிண்டலைக்கண்டு டைப் அடிக்க தந்த நபர்... கடுப்பில் அப்படி என்னதான் சொல்லி இருப்பார்...?
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
எல்லாம் நம்ம தமிழ்... சகோ... தமிழ்..! அதன்... படி என்ற வார்த்தையின் இடத்துக்கு ஏற்ப மாறும் பல்பொருள் செப்படி வித்தைகள்..!
அட..! என்ன சகோ... இவ்ளோ சீக்கிரம் ஸ்க்ரால் பண்ணி... அதுக்குள்ளே இங்கே வந்துட்டீங்களா...??? எப்படி..? என்ன்ன்ன்ன்னது..? 'பதிவை படிக்கவில்லை'ன்னு பின்னூட்டம் வேற போட போறீங்களா...? உங்கள் கமென்ட் மட்டும் என் பதிவுக்கு இப்படி சம்பந்தமே இல்லாமல் மட்டும் இருந்துச்ச்ச்ச்சு......... அப்புறம்.... நானும் அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கும் சகோ...!
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
25 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
== அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு... ==
தலைப்ப பாத்த ஆர்வத்திலே ஏதோ 'படி'ப்பு சந்தமா நீங்க 'படி'க்கிற மாதிரி எழுதி இருக்கீங்கன்னு இங்கே வந்தா...
உஷ்ஷ்....
'படி'க்கவே முடியாத அளவிற்கு எங்கே பார்த்தாலும் 'படி படி'ன்னு பல 'படி'களை குறித்து ஒரு பிடி பிடிச்சிடிங்க சகோ சிட்டிசன்
தெரியா தனமா 'படி'ச்சிட்டேன் சகோ
ஹா ஹா
:)
அட..! என்ன சகோ... இவ்ளோ சீக்கிரம் ஸ்க்ரால் பண்ணி... அதுக்குள்ளே இங்கே வந்துட்டீங்களா...??? எப்படி..? என்ன்ன்ன்ன்னது..? 'பதிவை படிக்கவில்லை'ன்னு பின்னூட்டம் வேற போட போறீங்களா...? உங்கள் கமென்ட் மட்டும் என் பதிவுக்கு இப்படி சம்பந்தமே இல்லாமல் மட்டும் இருந்துச்ச்ச்ச்சு......... அப்புறம்.... நானும் அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கும் சகோ...!
அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு... //// ஹா ஹா ஹா அதே அதே :) :) ஆமா பின்னாடி ஆள் வச்சு பால்லோ பண்றிங்கலா?
ஸலாம் சகோ.!
'படி'யின் பல்வேறு படிகளைப் படிப்படியா படிச்சாலும் உறுப்படியாய் எழுதியிருக்கிறபடியால் படிக்கிறவங்களுக்கு கடுப்படிக்காம இருக்கு!
உங்கள் சிந்தனை படிப்படியாய் படியேறுவது இந்தப் படிவு... சாரி.. பதிவு மூலம் தெரிகிறது.
என் பொண்டாட்டி அப்பவே படிச்சு படிச்சு சொன்னாங்க..பதிவுலகம் போக வேணாம்.. அதுக்கு பதிலா ஒழுங்கா வேற ஏதாவது படி படி அப்டின்னு....அப்பவே அத கேட்டு இருந்தா இது மாதிரி பதிவெல்லாம் படிக்கும்படி ஆகி இருக்காது... கண் கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி என்ற வரிகள் தான் நினைவிற்க்கு வருகிறது....
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஏதோ 'படி'ப்பு சந்தமா நீங்க 'படி'க்கிற மாதிரி எழுதி இருக்கீங்கன்னு இங்கே வந்தா...
உஷ்ஷ்....//
என்ன சகோ.குலாம், இப்படி சொல்லிட்டீங்க..?
ஆசிரியர்-முட்டை-மாணவன்,
பெரியவர்-போஸ்ட்மேன்-மகன்....
இதெல்லாம் பின்னே என்னவாம்...? இதுக்குத்தான்....
அப்போவே சொன்னேன்......................
@ஷர்மிளா ஹமீத் //ஹா ஹா ஹா அதே அதே :) :) ஆமா பின்னாடி ஆள் வச்சு பால்லோ பண்றிங்கலா?//---பதிவை எழுத்து விடாமல் படிச்சிட்டு... பதிவுக்கு தொடர்புடைய மிகச்சிறந்த கருத்தை அளித்துள்ளீர்கள் சகோ.ஷர்மிளா ஹமீத்..! :-))
அஸ்ஸலாமு அலைக்கும்!
'படி' ப்பை வைத்து இப்படி பதிவு எழுத முடியும் என்பதை இந்த பதிவைப் பார்த்து 'படி'ப்பினை பெற்றுக் கொண்டேன். :-)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்னைக்கு எனக்கு நேரம் சரியிலலை போலிருக்கு தெரியாதனமா உள்ளே வந்துட்டேன் . அவ்வ்வ்வ் :-) முடியல :-)))
உங்கள் கட்டுரையை படி படியாக படித்தேன் இப்படி அப்படி இல்லாமல் ....அய்யய்யோ உங்க வியாதி என்னாகும் ஒட்டிகும்போல ....
எனது புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
@தமிழ் மீரான்அலைக்கும் ஸலாம்
//'படி'யின் பல்வேறு படிகளை...//---'படித்தரம்'... 'படிநிலை'.. போன்ற அர்த்தம் விட்டுவிட்டேன்...! அதை அருமையாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள் சகோ..!
'தமிழ் மீரான்'--என்ற பெயர் ரொம்ப சரியான பொருத்தம்தான்..!
@சிராஜ்அது... உங்க 'டீக்கடை பிளாக்'கை படிச்சிட்டு அப்படி...///பதிவுலகம் போக வேணாம்.. அதுக்கு பதிலா ஒழுங்கா வேற ஏதாவது படி படி அப்டின்னு///---சொல்லி இருப்பாங்க சகோ..! :-)))
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
இதுபோல... இன்னும் நிறைய வார்த்தைகள் உள்ளன சகோ.சுவனப்பிரியன்..! உதாரணமாக....... (என்னது...? வேண்டாமா...?) சரி, விடுங்க சகோ..!
@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இன்னைக்கு எனக்கு நேரம் சரியிலலை போலிருக்கு//---என்னது..? 'நேரம் சரி இல்லை'யா..?! நீங்களா சகோ.ஜெய்லானி சொல்றீங்க...?! அப்போ... சரியான நேரம் எதுன்னு தெரியுமா..? ha..ha..haa... அவ்வ்வ்வ் :-) முடியல :-))
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்//உங்க வியாதி என்னாகும் ஒட்டிகும்போல ....//---என்ன இது...? போன பதிவில்தான் அது அப்பவே கியூர் ஆகிருச்சுன்னு சொல்லிட்டேனே..? :-))
(இறை நாடினால் அன்றி எந்த வியாதியும் ஒட்டாது சகோ.திரு.முஸ்லிம்..!)
ha..ha..haa.....
படி படி என்று மொத்தம் இந்த பதிவில் 83 படி கட்டி இருக்கீங்க சகோ..
சலாம் சகோ ஆஷிக்
படிச்சு படிச்சு சொன்னேனே// இந்த வார்த்தை வீட்டில் அடிக்கடி உபயோகப்படுத்துவாங்க. படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டீயா? படிச்சு படிச்சு போகாதன்னு சொன்னேனே கேட்டீயான்னு சொல்லுவாங்க. ஆனா அப்பலாம் யோசிச்சதில்லை படிச்சு படிச்சுன்னா என்ன அர்த்தம்னு ஹி...ஹி...ஹி...
இப்ப ஓரளவுக்கு புரியுது அவ்வ்வ்வ்
@வ.அன்சாரி//இந்த பதிவில் 83 படி கட்டி இருக்கீங்க சகோ..//---வ்வாவ்... உலகமாக பொறுமைசாலிதான் நீங்க..! ஆனாலும், உங்க படிக்கணக்கில் ரெண்டு படி குறையுதே சகோ.அன்சாரி..! :-))
@ஆமினாஅலைக்கும் ஸலாம்
படிச்சு படிச்சு பெரியவங்க சொல்லுபேச்சு கேளுங்க சகோ.ஆமினா..!
//இப்ப ஓரளவுக்கு புரியுது அவ்வ்வ்வ்//
---அப்பாடா..! இந்த பதிவு பாஸ் பன்னிருச்சு..! :-))
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
இந்த பதிவை மொபைலில் படித்தேன்(???). பிறகு பின்னூட்டம் இடலாம் என நினைத்தேன், மறந்துவிட்டது.
//அட..! என்ன சகோ... இவ்ளோ சீக்கிரம் ஸ்க்ரால் பண்ணி... அதுக்குள்ளே இங்கே வந்துட்டீங்களா...??? //
ஹா..ஹா..ஹா.. உண்மைதான் சகோ, ரெண்டு, மூணு படிச்சிட்டு நேரா கடைசி பாரா வந்துட்டேன். :D :D :D
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ரெண்டு, மூணு படிச்சிட்டு நேரா கடைசி பாரா வந்துட்டேன். :D :D :D//---:Z :Z :Z
படி ,,படி ..என்று படிச்சு படிச்சு சொன்னேன் ..
இந்த தலைப்பை பார்த்ததும் கல்வியின் முக்கியத்துவம்
பற்றிய கட்டுரையாக இருக்குமோ என நினைத்தேன் ..
படித்ததும் ..இன்னும் எவ்வளவோ படி இருப்பதை
அறிந்து கொண்டேன் ..எழுதுவதற்கும் ஞானங்கலோடு
நகைச்சுவை உணர்வும் வேண்டும் ..ஆஷிக் எழுத்தில் அமோக விளைச்சல்
அபாரம் ..,
ஓ..உலகில் இத்தனை படிகள் இருக்கா... ஷு... முடியல...வீட்டில் நீங்க கணினியில் ஏதோ உருப்படியான வேலை பார்க்கறீங்கன்னு நம்பிட்டிருக்காங்க பாருங்க அவங்ககிட்ட சொல்லி வெங்காயம் உரிக்க வைக்கணும்... :)...
@அதிரை சித்திக்//இன்னும் எவ்வளவோ படி இருப்பதை அறிந்து கொண்டேன்//---இதுதான் இப்பதிவின் நோக்கம் சகோ.சித்திக்..! .
@enrenrum16//உருப்படியான வேலை பார்க்கறீங்கன்னு நம்பிட்டிருக்காங்க பாருங்க அவங்ககிட்ட சொல்லி வெங்காயம் உரிக்க வைக்கணும்... :)...//
-----இப்படியாக... வெங்காயம் உரிப்பதை உருப்படியில்லாத வேலை என்பது போல கேவலமாக சித்தரித்த உங்களுக்கு "சமைப்போர் சங்கம் & சாப்பிடுவோர் சங்கம்" சார்பாக மிகக்கடும் கண்டனங்களை என்றென்றும் தெரிவிக்கிறேன்..! :-)
இங்கே
வருகை புரிந்த,
பின்னூட்டமிட்ட,
ஓட்டளித்த மற்றும்
பதிவை பகிர்ந்த அனைவருக்கும் மிகவும் நன்றி சகோஸ்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!