தமிழகத்தின் வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.
இந்நிலையில், அதுவரை இவர்மீது அதீத பக்திகொண்டு கடவுளாக கருதி வணங்கியோரும் எண்ணற்ற ஆத்திகரும் அதிர்ந்துதான் போயினர். இது, நாத்திகர்களுக்கு ஏகக்கொண்டாட்டமானது. வழக்கம் போலவே... முடிந்தவரை ஹிந்துமதத்தையும் அதன் கடவுள் கொள்கையில் உள்ள கோளாரையும் எடுத்துக்காட்டி அவரின் பக்தர்களையும் கிண்டல்-கேவலப்படுத்தி எக்கச்சக்க 'டவுசர் - கோமண பதிவுகள்' எல்லாம் தொடர்ந்து வெளியிட்டனர்.
இப்படியாக அந்த சாமியார் தலைமறைவு...போலிஸ் வலைவீச்சு... கைது... கோர்ட்டு... சிறை... ஜாமீன்... வழக்கு... வாய்தா என்று கேவலப்பட்டு கிடந்தவர், திடீரென இந்துமத ஆன்மிக குருவாக.. இளைய மதுரை ஆதினமாக பதவிப்பிரமாணம் செய்து முடிசூட்டப்பட்டு கெளரவிக்க பட்டபோது... அப்போது அசிங்க அசிங்கமாக பதிவு பின்னூட்டங்கள் போட்டு அவரை திட்டியவர்களை ஏனோ இப்போது காணவில்லை..!
இந்நிலையில், பதிவுலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா மதவாதிகளும் மதஎதிர்வாதிகளும் கேவலப்பட்டு கிடந்த இந்த சாமியாருக்கு ஆதரவாக பதிவு போடுவதா... இல்லை, எதிர்த்து பதிவு போடுவதா...
அல்லது இப்படி ஒரு தலைகுனிவை உண்டாக்கிய இந்துமத குருஸ்தானமான மதுரை ஆதினத்தை கண்டித்து பதிவிடுவதா... இல்லை, ஆதரித்து பதிவிடுவதா...
அல்லது எது செய்தாலும் அது நம் மதத்துக்கு பின்னடைவு என்பதால் ஒன்றுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடுவதா... என்று குழம்பிய நிலையில்தான்...
சகோ.சுவனப்பிரியன் இந்த கண்றாவியை தினமலர் செய்தியிலிருந்து எடுத்துப்போட்டு பதிவாக வெளியிட்டார். உடனே... 'அதெப்படி ஒரு முஸ்லிம் இதைப்பற்றி பதிவு போடலாம்' என்று வெகுண்டு எழுந்தனர் சிலர்.
ஏனுங்க சகோ... கூடாதா..? நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..?
ஏனுங்க சகோ... கூடாதா..? நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..?
ஆனால், இப்படி சினங்கோண்ட பதிவர்கள் மதி இழந்து இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன செய்கிறார்கள தெரியுமா..? அந்த சாமியாரின் செத்துப்போன தனிமனித ஒழுக்கத்தை உயர்த்தவேண்டி எந்த ஒரு கேவலத்துக்கும் தயாரானவர்களாக... இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்வியல் (ஒருதார-பலதார வாழ்க்கை என் அனைத்தையும் வாழ்ந்தே காட்டிய) முன்மாதிரி மனிதரான, இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்களின் பலதாரமணத்தை முன்வைத்து அதை விபச்சாரம் என்று அபாண்டமாக அவதூறு கூறி, 'அது சரின்னா சாமியார் செய்ததும் சரிதான்' என்றும்... எனவே, ஹிந்து மத சாமியாரை பற்றி முஸ்லிம்கள் எழுத என்ன யோக்யதை இருக்கிறது' என்பதாக மூளை இன்றி உளறிக்கொட்டி வைத்துள்ளனர்.
இவர்களிடம், "ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..! நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?
இவர்களிடம், "ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..! நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?
அடுத்து, அன்று சமய அடையாளமாக இந்த சாமியாரை கண்டு திட்டியவர்கள் இப்போது புதிதாக 'சாமியார் சமய அடையாளமா' என்று கேட்கும்போதும், அவர் ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டபோது அதை கிண்டல் செய்த முஸ்லிம்களை நோக்கி உங்கள் நபி மட்டும் ஒழுங்கா என்று எகிரும்போதும், இங்கே ஒரு விஷயத்தை இவர்களும் மறந்து விடுகிறார்கள்.
அன்று, சாமியார் செய்த விபச்சாரத்தை வைத்து எனக்கு தெரிந்து எந்த முஸ்லிம் பதிவரும் ஹிந்து மதத்தை தாக்கவில்லை. அதை சாடியோ அது அழிய வேண்டும் என்றோ அதை அழிப்பேன் என்றோ மேற்படி அரைவேக்காட்டு பயங்கரவாத பதிவர்கள் போல எந்த முஸ்லிம் பதிவரும் பதிவிடவும் இல்லை.
விபச்சாரம் செய்து டீவி வரை ஆதாரப்பூர்வ வீடியோ நியுஸ் வந்த ஒருவர் 'தன்னை குற்றமற்றவர்' என்று நீதி+மக்கள் மன்றத்தில் நிரூபிக்காத நிலையில், இன்னும் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில்... தான் சார்ந்த சமயத்தின் மூலமாக இன்னும் தண்டனை ஏதும் பெறாத நிலையில், சமய சார்பில் மற்ற சாமியார்கள் மூலம் ஒரு புறக்கணிப்பு கூட இல்லாத நிலையில், இன்னும் ஒரு படி எகிறி அதே சமயத்தின் மடாதிபதியாக அதே சமய குருவாக மற்றவர்களை வழிநடத்தும் ஆன்மீக தலைவராக, ஆதினமாக மகுடம் சூடியவுடன் 'அம்மன் சாமியான மதுரை மீனாட்சியை மீட்பேன்' என்பதும் நிச்சயமாக இது அந்த சமயத்துக்கும் அதை பின்பற்றுவோருக்கும் பெருத்த தலை குனிவுதான் என்று பல தினசரிகளின் ஹிந்து மக்களின் கமெண்ட்ஸ் கூட கூறுகின்றன.
இதனால்தான் சில இந்து அமைப்புகள் மதுரையில் சண்டைக்கு சென்றும் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் தன்மானம் நமக்கு புரிகிறது.
இதையெல்லாம் பார்த்து முஸ்லிம்களாக முன்னர் ஒருகாலத்தில் மதம் மாறிய நாங்கள் 'நல்லவேளை நான் தப்பித்துக்கொண்டேன்' என்று ஆசுவாசப்படுகிறோம்.
இதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..!
இதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..!
நான் உட்பட பல முஸ்லிம் பதிவர்கள், 'பின் லேடன் குற்றவாளி என்பதற்கு சாட்சி இல்லை, ஆதாரம் இல்லை அதற்கு எதிராகத்தான் சாட்சிகளும் ஆதாரங்களும் உள்ளன' என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், பின்லேடன் பயங்கரவாதம் செய்திருந்தால் அதனை ஆதரிக்க மாட்டார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். தண்டனை கோருவார்கள்.
இதற்கு சரியான உதாரணம், அஜ்மல் கசாப்.
இவனை ஆதரித்து ஒரு முஸ்லிம் கூட எழுதியது கிடையாது.
இன்னொரு உதாரணம் முஹம்மத் அபுபக்கர் தெள்ஜி என்ற பங்கு பத்திர ஊழல்வாதி. இவனையும் எவரும் ஆதரித்தது இல்லை.
சுப்ரீம் கோர்ட்டே ஆதாரம் இல்லை என்று தூக்கில் போடாமல் கிடப்பில் வைத்திருக்கும் காஷ்மீர் போராளி அப்சல் குருவை புரட்சிகர இயக்கத்தினர் வெளிப்படையாக ஆதரித்து பதிவு போட்டாலும் கூட பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்டதால் ஆதரிக்க தயங்கவே செய்கின்றனர்.
இவை அனைத்துக்கும் என்ன காரணம்..? இஸ்லாம்..!
அது... இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமின்றி.... ஒருவன், தான் நாடு சார்ந்த சட்டத்துக்கும் நீதிக்கும் அரசுக்கும் அது இஸ்லாத்துக்கு எதிரானது இல்லை எனில் கட்டுப்பட சொல்கிறது.
ஹிந்தியில் முஸ்லிம் நடிகர்கள் சிலர் முன்னணியில் கொடிகட்டி பறந்தாலும் சினிமாவை வெறுத்த காரணத்தால் அவர்களின் புகைப்படம் கூட எம் வலைப்பூவில் வர அருகதை இழக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் என்னதான் உலகப்புகழ் பெற்றாலும் சினிமா இசை என்ற ஒரே காரணத்தால் முஸ்லிம் பதிவர்களால் ஓரம் கட்டப்படுகிறார். இன்னும் தர்ஹா வணக்கம் எனும் ஷிர்க் மூடநம்பிக்கையின் காரணமாக அவர் வெறுக்கவும் படுகிறார்.
இதற்கெல்லாமும் காரணம் இஸ்லாம்தான். அது மேற்கூறிய ஆபாச அசிங்க சமூக சீர்கேடுகளை அங்கீகரிக்க வில்லை.
சாட்சி ஆதாரங்கள் படி நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீதும் வெறுப்புதான் எமக்கு உள்ளது. காரணம் இஸ்லாம் அப்பாவி மக்களை கொலை செய்வதை கடுமையாக எதிர்க்கிறது.
தன் சமயத்தை காக்க நினைத்து சாமியாரை ஆதரிக்க வேண்டி இஸ்லாத்தை தாக்கும் - அழிக்கத்துடிக்கும் (!?! :-)) அரைவேக்காட்டு பதிவர்களே...!
உங்களுக்கு திருமணத்துக்கும் விபச்சாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையே..?
பலதார மணத்தை விபச்சாரம் என்று திரிக்கும் உங்களுக்கு ராமாயணத்தில் கடவுளான ராமனின் தந்தைக்கு அறுபதினாயிரம் மனைவி பற்றி சிந்திக்க மூளை முயலாது. அது விபச்சாரம் என்றால், ராமன் பிறப்பு என்ன என்றெல்லாம் கேள்வி வரும்..!
ஒருத்தனுக்கு ஒருத்தியே சிறப்பு என்றும், போர் போன்ற இழப்பால் ஆண்கள் குறைந்து பெண்கள் & அனாதைகள் மிகும் நிலையில் பொருள்வசதியும் உடல் தகுதியும் உள்ள ஒருவன் அதிக பட்சம் நான்கு பெண்கள் வரை மணந்து அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் காப்பாற்றலாம் என்றிருக்க.... இந்த உயரிய நோக்கம் புரியாமல்... 'ஒருத்தனுக்கு நாலு மனைவியா அய்யகோ... இது விபச்சாரம் அது அபச்சாரம்' என்று கதறும் உங்கள் அறிவுக்கு மகாபாரதத்தில் ஐந்துஆணுக்கு ஒரு பெண் மனைவி என்பது பற்றி எல்லாம் சிந்திக்க முடியாது.
ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா..? அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா..? ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே..! கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே..! பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்..? அறிவுள்ளவர்கள் சிந்திக்கவும்..!
ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா..? அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா..? ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே..! கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே..! பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்..? அறிவுள்ளவர்கள் சிந்திக்கவும்..!
ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? ஒரு முஸ்லிம் குற்றம் செய்தால் 'இஸ்லாம் ஒழிய வேண்டும்' என்கிறீர்கள். அந்த குற்றத்தை இஸ்லாம் செய்ய சொல்லி இருந்தால்தான் அபப்டி சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.
அஜ்மல் கசாப் அப்பாவி மக்களை கொலை செய்தபோது உள்ள மக்களின் மனநிலைக்கும்...
அப்படி கொலை செய்தவனின் வழக்கு நிலுவையில் இருக்க அவன் ஜாமீனில் வெளியே வந்து டெல்லியில் ஜும்மா மசூதியில் தலைமை இமாமாக மகுடம் சூட்டப்படும்போது உள்ள மக்களின் மனநிலைக்கும்...
----வித்தியாசம் இருக்குமா... இருக்காதா..?
சரி.... இப்போது நான் இப்படி சொன்னால்..?
" விபச்சார குற்றச்சாட்டுள்ள சாமியார் மதுரை ஆதினமாக ஆக்கப்படவில்லையா... அதனால், இது சரிதான்... எனவே இதனை எதிர்த்து எந்த மாற்று மதத்தினருக்கும் பதிவு போட உரிமை இல்லை"
.....என்று நான் ஒரு பதிவு போட்டால்.... நானும் அவர்களைப்போன்றே அறைவேக்காடுதானே..?
----வித்தியாசம் இருக்குமா... இருக்காதா..?
சரி.... இப்போது நான் இப்படி சொன்னால்..?
" விபச்சார குற்றச்சாட்டுள்ள சாமியார் மதுரை ஆதினமாக ஆக்கப்படவில்லையா... அதனால், இது சரிதான்... எனவே இதனை எதிர்த்து எந்த மாற்று மதத்தினருக்கும் பதிவு போட உரிமை இல்லை"
.....என்று நான் ஒரு பதிவு போட்டால்.... நானும் அவர்களைப்போன்றே அறைவேக்காடுதானே..?
குடும்ப வாழ்வில் தனி மனித கலவி ஒழுக்கத்தில் 'பரந்த மனப்பான்மையுடன்' சமரசம் காணும் அமெரிக்க கலாச்சாரத்தில் கூட, கிளிண்டன் - மோனிகா கள்ள உறவு...முன்னர், அமெரிக்க அரசியலில் அதிபரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு காரணியாயிற்று..! ஆனால், இந்திய குடும்ப வாழ்வில் கலவி ஒழுக்கம் முக்கியமாக பேணப்படும் இங்கே அப்படிக்கூட ஒரு விழிப்புணர்வு இல்லை எனில் நிலைமை மோசம் அல்லவா..?
விபச்சாரம் அது அவர்கள் இஷ்டம் என்போர்... அதில் ஈடுபட்டோரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ தாம் இருந்தால் மட்டும் இப்படி சொல்வதில்லையே..?! அரிவாளை தூக்குவார்கள்... அல்லது அறிவாள்மனையை தூக்குவார்கள். இல்லேயேல் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு ஓடுகிறார்கள்..! மேஜரானவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமல் மனம் ஒத்து இணைதல் விபச்சாரம் இல்லை ; அது அவர்களின் தனிமனித உரிமை என்னும் விபச்சார ஆதரவு நீதி கூட இங்கே விபச்சாரத்துக்கு எதிராக தீர்ப்பளிக்கிறதே..!?
விபச்சாரம் அது அவர்கள் இஷ்டம் என்போர்... அதில் ஈடுபட்டோரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ தாம் இருந்தால் மட்டும் இப்படி சொல்வதில்லையே..?! அரிவாளை தூக்குவார்கள்... அல்லது அறிவாள்மனையை தூக்குவார்கள். இல்லேயேல் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு ஓடுகிறார்கள்..! மேஜரானவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமல் மனம் ஒத்து இணைதல் விபச்சாரம் இல்லை ; அது அவர்களின் தனிமனித உரிமை என்னும் விபச்சார ஆதரவு நீதி கூட இங்கே விபச்சாரத்துக்கு எதிராக தீர்ப்பளிக்கிறதே..!?
ஒரு மதத்தில் உள்ள ஒருவர் தம்முடைய தனிமனித ஒழுக்கத்தை இழக்கும் போதும்... சமய சட்டம் மீறி குற்றம் புரியும்போதும்... அவருக்கு உரிய தண்டனை அந்த சமயத்தில் சொல்லப்பட்டு இருந்தால் அது மிக நாணயமான சமயம்தான். அப்படியானதொரு தண்டனை இருந்து அச்சமயத்தினரால் அது குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டால் மிக்க நன்று. இல்லையேல், குற்றவாளியை அச்சமயத்தினர் வெறுத்தாவது ஒதுக்க வேண்டும். இதுதானே குறைந்த பட்ச நேர்மை..?
மாறாக சமய தலைவராக மகுடம் சூட்டி அழகு பார்ப்பது கேவலம் இல்லையா..? அப்படி நடந்தால் அது தலைகுனிவுதானே..? இதை கண்டும் காணாது செல்ல வேண்டும் என்ற நிலை மக்களுக்கு இருந்தால் அது இன்னும் மோசம் அல்லவா..? அந்த
குற்றம் அதே சமயத்தால் 'கடவுள்கள் செயல்' என அங்கீகரிக்கப்படும்போது... அந்த
சமயத்தில் அது 'தவறில்லை' என்று கூறப்படும்போது... அதற்காக... மற்ற சமயத்தினரிடம் உள்ள நல்ல விஷயத்தை அவர்கள் சார்ந்த சமயத்தை கொச்சைபடுத்தி தம்மை உயர்வாக கற்பனை செய்து பதிவிட்டுக்கொள்வது மூடத்தனம் அல்லவா..? இதுதானே மதவெறி..? இதுதானே ஒழிய வேண்டும்..?
இந்த மாதிரியான பதிவர்களில் நான் இல்லை என்றால் அது எனக்கு மன நிறைவுதானே..? இந்த மனநிறைவையும் மனத்தெளிவையும் தந்தது நான் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் அல்லவா..? அதுதானே இப்போது என்னை தலை நிமிர வைத்துள்ளது..!
"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா..." ---இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது..? என்ன மதவெறி இருக்கிறது..? ஒருவேளை நான் அந்த சாமியார் மதத்தில் இருந்திருந்தால்... நேற்று முஸ்லிமாக மாறி இன்று இதை சொல்லித்தான் பதிவு போட்டு இருந்திருப்பேன்..!
டிஸ்கி:-
தொடர்ந்து கள்ளப்பெயரில் மைனஸ் ஓட்டு குத்தி ஓய்ந்து போனவர்கள்... அப்புறம் பிளஸ் ஓட்டு குத்தி குழப்பம் செய்தவர்கள்... ஹி..ஹி..ஹி... இப்போது என்ன செய்வார்களோ..!?!?!
தொடர்புடைய பதிவுகள்:
டிஸ்கி:-
தொடர்ந்து கள்ளப்பெயரில் மைனஸ் ஓட்டு குத்தி ஓய்ந்து போனவர்கள்... அப்புறம் பிளஸ் ஓட்டு குத்தி குழப்பம் செய்தவர்கள்... ஹி..ஹி..ஹி... இப்போது என்ன செய்வார்களோ..!?!?!
51 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ இவனல்லாம் ஒரு ஆளுன்னு மதித்து விடுங்க சகோ கமொடி பிஸுகளை
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி..!
நம்மளையும் மதிக்கிராங்களேன்னு நினைச்சாவது மனம் திருந்தட்டுமே இந்த கன்றாவி பீஸ்கள் :-))
அஸ்ஸலாமு அலைக்கும்,
//நம்மளையும் மதிக்கிராங்களேன்னு நினைச்சாவது மனம் திருந்தட்டுமே//
இன்ஷா அல்லாஹ். இறைவன் தான் நாடுபவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இன்ஷா அல்லாஹ். இறைவன் தான் நாடுபவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.///
---இவர்களின் நேர்வழிக்காகவும் நமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும் சகோ.ஆஷிக் அஹமத்.
@Umar Muktharதங்கள் பின்னூட்டத்தில் உள்ள கிண்டல் சிந்திக்க வேண்டியவர்களை அந்நியப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தால் டெலிட் பண்ணி விட்டேன் சகோ.உமர் முக்தார்.
மன்னிக்கவும். அதே கருத்தை அழகிய முறையில் சொல்லுங்கள் சகோ.வெளியிட தயார்.
பாலியல் குற்ற சாட்டிற்கு ஆளான பாக்கர் ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு தலைவராகவும் , அவரால் அதே போன்று பாலியல் குற்றம் சுமத்தப்படும் பிஜே இன்னொரு அமைப்பின் தலைவராக இருப்பதும அவர்களுக்கு பின்னால் பெரிய கூட்டம் இருப்பதும் உங்களுக்கு தெரியாதா?மதுரை ஆதினமோ அல்லது அதன் தலைவர்களோ ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல. பெரும்பான்மையான இந்து மக்கள் அவர்களை நிராகரிக்கவே செய்கிறார்கள் . இந்து மக்கள் வன்முறையாளர்கள் இல்லை என்பதால் இது மாதிரியான ஆட்கள் கொஞ்சம் நாளைக்கு ஆட்டம்போடுவது தவிர்க்க முடியாது.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்!
தவறு செய்த ஆதீனததுக்கு எதிராகவும் அவரை பதவியில் அமர்த்திய முன்னால் ஆதீனத்துக்கு எதிராகவும் வெகுண்டெழாமல் பதிலுக்கு நபிகளின் வாழ்க்கையை விமரிசித்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் நித்தியானந்தா புகப் போகிறாராம். இன்னும் என்னென்ன தமாஸ்களெல்லாம அரங்கேறப் போகிறதே! பொறுத்திருந்து பார்ப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அழகிய விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோ.நாம் எவ்வளவுதான் பதில்களையும்,தீர்வுகளையும் கொடுத்தாலும் அவர்கள் எதையும் காதுகொடுத்து கேட்பதாக இல்லை.திருமணம் என்பது சமூக நன்மைக்கான அழகிய கட்டமைப்பு ஆனால் இவர்களோ திருமணத்தையும் ஒரு விதமான விபச்சாரமாகத்தான் கருதிகொண்டிருக்கின்றார்கள்.
/* ஏனுங்க சகோ... கூடாதா..? நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..? */
ஹா..ஹா..ஹா... குட் கேள்வி..... பதில் சொல்வோர் உண்டா??????
Salam bro
arumaiyaga koori erukirergal
@கொ. வை.அரங்கநாதன்
1-இரவுப்பெருந்தில் அந்நிய பெண் அகருகே அமர்ந்து ஒரு தலைவர் ரேஞ்சில் உள்ளவர் நீண்ட தூரம் பிரயாணித்தார் என்ற குற்றச்சாட்டும்...
2-ஒரு தலைவரின் inbox இல் ஆபாச ஈ மெயில் இருந்தது என்ற குற்றச்சாட்டும்...
ரஞ்சிதாவுடன் சாமியாரின் சன் நியுஸ் வீடியோவும் ஒன்றில்லை என உங்களுக்கு தெரியாதா சகோ..?
நீங்கள் குறிப்பிட்ட அந்த இருவரும்...
இஸ்லாமிய சிலதாரமணத்தையும் நபிகளாரின் பலதாரமணத்தையும் விபச்சாரம் என்று கூறி அவற்றை தமது குற்றச்சாட்டுக்கு சப்போர்ட் கேடயாமாக கொண்டு "தாங்கள் செய்தது சரிதான்" என்று வாதிக்கவும் இல்லை... அவர்களின் ஆதரவாளர்களும் அப்படி கூறவும் இல்லையே.. சகோ..?
ஆனால், நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் அரைவேக்காடுகள்... இஸ்லாமிய சிலதார திருமணத்தை விபச்சாரம் என்கின்றனவே..?
எனது சவாலுக்கும் இதுவரை பதில் சொல்லவிலல்லையே..?
பதிவின் தலைப்பே இதுதானே சகோ...?
திருமணமும் விபச்சாரமும் ஒன்றா..?
முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்களேன் சகோ.அரங்கநாதன்..!
துறவரம் என்பது மனித குலத்திற்கு எதிரானது ..,
ஹிந்து மதத்தில் துறவரம் கொண்ட சாமியார்கள்
உண்மையிலே வாழ்வை துறந்தே வாழ்ந்தார்கள்
கையில் ஒரு திருஓடு பசித்தால் போகும் வழியில்
தானம் கேட்பார்கள் ..அதிகம் பேச மாட்டார்கள் ..
அயர்வு வந்தால் தூக்கம் ...மீண்டும் எதோ ஒரு திசை நோக்கி
நடை ..எந்த தொல்லையும் இல்லை ..நித்யானந்தா போன்றவர்கள் .
ஹிந்து மதத்திற்கே இழுக்கு என்பதை ஒத்து கொண்டு
இதிலாவது ஒற்றுமையாக இருப்போமே ..,உடலுக்கும்
உள்ளத்திற்கும் சவுக்கடி கொடுக்கும் ஞானிகள் ..இருந்தது
அந்த காலம் காவி நிறத்திற்கு மரியாதை இருந்தது அந்த காலம்
இப்போது பய உணர்வும் .நகைசுவை உணர்வும் ஏற்படுத்தும் நிலை
இந்த காலம் ...மெலிந்த தேகத்திற்கு காவி உடை அந்தக்காலம்
பருத்த தேகதிற்குள் காவி இந்தக்காலம் ..உள்ளதை சொல்கிறேன்
மன்னிக்கவும்
தெளிவான வாதங்களை - எளிமையான மொழிநடையில் பதிந்த ஆஷிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! திசை திருப்பும் தில்லுமுல்லு - திருகுதாள பின்னூட்டங்களுக்கு - எள்ளலுடனுன் - கருத்து துள்ளலுடனும் பதிலளிக்கும் உங்கள் எழுத்துப்பணி இன்னும் சிறக்க பிரார்த்திகிறேன்..
ஸலாம் சகோ ஆஷிக்..
மாஷா அல்லாஹ்..வழக்கம்போல் உங்களது சவுக்கை சுழற்ற ஆரம்பித்துவிட்டீர்கள்:...
ஒவ்வொரு கேள்வியும் சாட்டை அடியாகத்தான் விழுகிறது...உறைத்தால் நல்லது....
தொடர்ந்து எழுதுங்கள்..
அன்புடன்
ரஜின்
"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா..."
அஸ்ஸலாம் அலைக்கும்...சகோஸ்,
"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா..." ---இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது..? என்ன மதவெறி இருக்கிறது..? ஒருவேளை நான் அந்த சாமியார் மதத்தில் இருந்திருந்தால்... நேற்று முஸ்லிமாக மாறி இன்று இதை சொல்லித்தான் பதிவு போட்டு இருந்திருப்பேன்..!
இந்த பதிவின் கடைசி பாராவிற்கு முற்றிலும் தகுதியானவன் நான்....
அவர்களின் வண்டவாளங்களை சொல்வதற்கு என் வாழ்வியல் மார்க்கமாகிய
இஸ்லாமில் தடை உள்ளதால், அவர்களைப்போல் உண்மைக்கு மாறாக தரம் தாழ்ந்து சொல்வதைவிட கண்ணியம் காப்பதே நன்று என்று எண்ணியுள்ளேன்....
"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா..."
பல மேலை நாடுகளில் பல தனி நபர்களின் சமூக வாழ்வியல் மோசமாக இருந்தாலும், ஒரு இயக்கத்தின் தலைவனோ அல்லது பொது வாழ்கையில்
உள்ள பிரபலங்களின் குடும்ப சமூக வாழ்வியல் நேர்மையானதாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்கிறார்கள் அதைப் போலவே குறைந்தபட்சம் நாமும் எதிர்பார்கவேண்டாமா..!!!??
சுத்த BARBARIANS கூட்டம் .......
A.R.ரஹமான் , அஜ்மல் கசாப் etc..போன்றவர்கள் இஸ்லாமிய பார்வையில்
முஸ்லிம்கள் அல்ல ... They are namely muslims.
அருமையான ஆக்கம் ...மிக்க நன்றி...
மாஷா அல்லாஹ் பாய்.... வாழ்த்த வார்த்தைகளே இல்லை. சூடான அதே நேரம் சரியான கேள்விகளுடன் இருக்கும் பதிவு. உங்கள் எண்ணங்களை அப்படியே வழி மொழிகிறேன். சரியான கேள்விகள் .... பதில் வருமா பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்... வஸ் சலாம் பாய்.
CLICK
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1. TO READ
.
சலாம் சகோ
அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க...
அவர்களுக்கு நித்தியானந்தா பற்றி சொன்னது தவறில்லையாம். முஸ்லீம் சொன்னது தான் தவறாம்...
சரி போகட்டும்! நபி (ஸல்) அவர்களை பற்றி பதிவெழுதும் முன் சிறிதளவேனும் விசாரிக்க வேண்டாமா? :(
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 6
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.. இனியேனும் தீர விசாரித்து ஒரு விஷயத்தை பொதுவில் வைக்கட்டும்!
நேர்வழி பெற பிரார்த்திப்பதை தவிர சொல்ல ஒன்னும் இல்ல....
இஸ்லாமிய பதிவர்களுக்கு . ஒரு வேண்டுகோள் .இந்து மதத்தையோ நித்யானந்தா பற்றியோ பதிவுகள் இட வேண்டாம். நாம் அழகிய முறையில் இஸ்லாத்தை சொல்வதுதான் நம் கடமையே தவிர வீண் விவாதம் செய்வது, குறை சொல்வது நம் அழகல்ல.
மிக அருமையான விளக்கங்களும் கேள்விகளும்....இதற்கான பதிலை சகோதர மதத்தவர்கள் சொல்ல மாட்டார்கள் ...இந்த பதிவில் எதையாவது பிடித்து..அதனை ஒரு பதிவாக இவர்கள் இடுவார்கள் இதுதான் உண்மை.
யாருக்கு இறைவன் நலவை நாடுகிறானோ அவர்களுக்கு முதலில் அறிவு வழங்குகிறான்..மதவாதிகளாக இல்லாமல் பொதுப்படையாக இருந்து சிந்திப்போருக்கு இதில் தெளிவு இருக்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
மிக அருமையான ஆணித்தரமான கேள்விகள் சகோ. அல்ஹம்துலில்லாஹ்!.
@??? //பாலியல் வேட்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆனால் திருமணம் இல்லாமல் தீர்த்துக் கொள்ளப்படுவதில் பாதிக்கப்படுவது எப்போதும் பெண் தான். ஆசைக்காட்டி மோசம் என்பார்கள் பெண்களுக்கு அப்படியான பாதிப்புகள் உண்டு. தான் சுவைத்தது போதாது என்பதுடன் மட்டுமில்லாமல் தொடர் இச்சைக்கு ஆளாகாத பெண்களை ஊருக்கும் காட்டிக் கொடுப்பது தவறான ஆண்களின் தவறான நடைமுறையாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது//
இப்படிக் கூறியது யார் என்று தெரியுமா? திருமணமும் விபச்சாரமும் (இஸ்லாம் என்று வந்துவிட்டால் மட்டும்) ஒன்று என்று மொழிந்திருக்கும் அதே பதிவர்தான்!!. முன்பு ஒரு முறை அவருடைய பதிவில் மேலுள்ளவாறு குறிப்பிட்டிக்கிறார்.
காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள நினைக்கும் ஒருவனுக்கு எளிய வழி திருமணமா? அல்லது விபச்சாரமா?
காமத்தை மாத்திரம் தீர்த்துக்கொள்ள பயன்படும் விபச்சாரத்தால் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று கூறிவிட்டு எப்படி, திருமணமும் விபச்சாரமும் என்று எழுத முடிகிறது?.
காமத்தை தீர்த்துக்கொள்வதற்க்கு எளிய வழியான விபச்சாரம், அதுவும் விபச்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கு சமூக சூழலில் இருக்கும் ஒருவர் அதை விடுத்து, திருமணத்தைத் தேர்ந்தெடுப்பதை எப்படி குற்றவாளியாக அடையாளப்படுத்த முடிகிறது?.
இவை, நபியவர்கள் புரிந்த திருமணத்திற்கு காமம் தாண்டி வேறு பல காரணங்கள் இருப்பதைத் தெளிவாகவில்லையா?.
மற்றும்,
கீழே சகோ. முஹம்மது அஷிக் அவர்கள் கேட்டிருக்கும் நியாமான கேள்வி விபச்சாரத்திற்கும் திருமணத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வில்லையா?
//ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா..? அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா..? ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே..! கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே..! பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்..? அறிவுள்ளவர்கள் சிந்திக்கவும்..!//
இவையனைத்தும் ஒரு மனைவியோ, இரு மனைவியோ அல்லது நான்கு மனைவியோ அனைவருக்குமே பொதுவன்றோ?, திருமணம் ஊர் அறிய இவர் என்னுடன் இருக்கும் காலம்வரை எனக்குச் சொந்தம் என்று அறிவிப்பதன்றோ? ஆனால், சின்ன வீடு என்பது ஊர் அறிய ஒரு பெண்ணை ஏற்காமல் திருட்டுத்தனமாக அவளுடன் குடும்பம் நடத்துவது அல்லவா? அப்புறம் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்?
அன்பு சகோ. கோவியாரே!, பிரச்சினை சுவனப்ரியன் எப்படி நித்தியானந்தாவை விமர்சிக்கலாம் என்பதா?.
நித்தியானந்தாவை சுவனப்ரியனைத்தவிர வேறு யாரும் விமர்சிக்கவில்லையா? ஏன் இந்துக்களே விமர்சிக்கவில்லையா?.
இந்துக்கள் விமர்சிக்கலாம். ஆனால், இஸ்லாமிய பதிவன் விமர்சிக்க தகுதி கிடையாது என்னும் மனப்போக்கைத்தானே உங்களின் பதிவும் பின்னூட்டமும் தெளிவு படுத்துகிறது!.
அப்படியானால் நீங்கள் உங்கள் பதிவுகளில் இந்து மதத்தைத்தைக் குறித்து விமர்சித்து எழுதியிருக்கும் பதிவு(களில்), ஒன்றில் “சிவன் - பார்வதிக்கு என்ன வயது ?” என்று கேள்வி எழுப்பியுள்ளியுள்ளீர்கள், தற்பொழுது இவர்களின் வயதை அறிந்துவிட்ட காரணத்தினாலும். இன்னும், இந்து மதத்தைக் குறித்துக் கேட்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடையறிந்து விட்ட காரணத்தினாலும், நீங்கள் சுவனப்ரியனை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது விமர்சனங்களை அள்ளித்த் தெளிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?.
நீங்கள் விமர்சிக்கலாம்? ஆனால் சுவனப்ரியன் விமர்சிக்கக் கூடாது? என்னும் அகங்காரப் போக்கையல்லவா இது காட்டுகிறது?.
"தான் ஆடவில்லையென்றாலும் தன் சதை ஆடும்" என்பார்கள், இங்கு நல்லாவே குலுங்கி குலுங்கி ஆடுகிறதே சகோ.
//மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"//
உண்மைதான், விமர்சனம் என்ற பெயரில் மனித மனங்களை மிதிக்கும் நாத்திகம்????????????
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ் வழக்கப்போல் "உரைக்கும்" படி சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இறுதிவரை அவர்கள் இதற்கான தீர்வாக எதையும் சொல்ல மாட்டார்கள். முடிந்தால் இந்த பதிவிற்கும் எதிர்ப்பதிவு போட தான் முன்வருவார்கள்.
இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எப்படி எப்படியெல்லம் காரணத்தை எடுக்கிறார்கள் என்பதை இந்த பதிவு தெளிவாய் உரைக்கிறது.
அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி வழங்கவேண்டும்.
பகிர்ந்த பதிவுக்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோ பின்னூட்டவாதி முஹம்மத் ஆஷிக்,
வழக்கம் போல நறுக்கு தெறித்தாற்போன்று அதிரடி கேள்விகள். அறிவை இழப்பதற்கா ஆன்மிகம் என்று தானே சுவனப்பிரியன் கேட்டார்? . இதற்கு ஏன் இவர்கள் கோபம் கொள்ள வேண்டும்? அறிவை மெருகூட்ட தான் ஆன்மிகம் பயன்பட வேண்டும். ஆனால் ஆன்மிகம் என்ற போர்வையில் பெண்களை போகப்பொருளாக்கியவர் நித்தியானந்தா. இந்த நித்தியானந்தாவை வசை பாட வேண்டிய வாய்கள் (பார்க்க: நாய்கள் என்று நான் குறிப்பிடவில்லை) உலகத்தின் ஒப்பற்ற தலைவரை இழிவுபடுத்த வேண்டுமென்று எண்ணி விமர்சனம் செய்ய கிளம்பியிருக்கின்றன. இவர்களை விட எத்தர்கள் எல்லாம் இதை விட நன்றாக முயற்சி செய்தும் ஒன்றும் கைகூடவில்லை என்பதை இவர்களுக்கு உரைக்கும் வகையில் சொல்ல வேண்டியது நம் கடமை. அதை தாங்கள் இந்த பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனாலும் ஒரு வருத்தம் இருக்கிறது சகோ. இந்த நித்தியானந்தாவை பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. நேற்று கூடிய சைவ மடாதிபதிகளும் நித்தியானந்தாவை பதவியிலருந்து நீக்க மதுரை ஆதீனத்திற்கு 10 நாட்கள் கெடு வைத்திருக்கின்றனர். அதற்கு காரணமாக குற்றப் பின்னணியுடையவர் நித்தியானந்தா என்று சொல்லுகின்றனர். ஆனால் இதை விட மோசமாக குற்றம் புரிந்தார் என குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் அவ்வப்போது ஆஜராகி வரும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஏன் யாரும் பதவி விலக சொல்லவில்லை? அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இதிலிருந்து விதிவிலக்கா?
//ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா..? அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா..? // நிங்கள் வாழ்கை முழுவதும் உள்ள திர்வை சொன்னாலும், அவர்களுடைய திர்வு ஒரு நாளுக்குதான், அடுத்தது நாளைக்கு ..... ????
//இதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..!//
நிங்கள் என்னதான் அறிவுப்புறுமான கேள்விகள் கேட்டளும் அல்லது அறிவுப்புருமான திர்வை சொன்னாலும் அவர்களிடத்தில் பதில் இருக்கத்தான் செய்கிறாது. (அவர்களின் பதில் : இதை முசால்மான் எப்படி சொல்லாம்.) இப்படி அறிவுப்புறுமான பதில் சொல்லாக்கூடியாவர் "சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்!" என்ற சகோ. சுவனப்பிரியன் பதிவில் சொல்லயிருக்க வேன்டியாது தானே இது எங்களுடைய மதம் சார்ந்தது என்று இதில் சூரிய நமஸ்காரமும் முசால்மான் என்ன வேலை என்று.
இவர்களிடம், "ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்"////////////
நீங்கள் ஏன் கணவனை இழந்த பெண்களின் மருமணத்தைப் வலியுறுத்தவில்லை.
..
CLICK
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.
கற்பழிக்க வழிகாட்டுகின்றார் கடவுள்.
.
.
திருமணம் செய்துகொண்டால் ஒரு மனைவிதான்,
பிரம்மாச்சாரியானால் வேண்டியது என்று நினைக்கின்றார்கள் போலும் இந்த சாமிகள்..........
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///தவறு செய்த ஆதீனததுக்கு எதிராகவும் அவரை பதவியில் அமர்த்திய முன்னால் ஆதீனத்துக்கு எதிராகவும் வெகுண்டெழாமல் பதிலுக்கு நபிகளின் வாழ்க்கையை விமரிசித்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.///---மிகச்சரியான கருத்து.
@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நாம் எவ்வளவுதான் பதில்களையும்,தீர்வுகளையும் கொடுத்தாலும் அவர்கள் எதையும் காதுகொடுத்து கேட்பதாக இல்லை.//----மிகவும் மோசமான நிலைதான் இது. இறைநாடினால் அவர்கள் தெளிவு பெறக்கூடும். நமது முயற்சியையும் இரைஞ்சலையும் நன்மையை நாடி தொடருவோம் சகோ.
@சிராஜ்///பதில் சொல்வோர் உண்டா??????///----ஹி..ஹி... இப்படியே போனால்.... "மாற்று மத குற்றவாளிகளை முஸ்லிம் நீதிபதி (அப்படி ஒருவர் அவ்வழக்கில் இயல்பாக அமையும் பட்சத்தில்) தீர்பளிக்க கூடாது" என்று போக்கொடி தூக்குவார்கள போலும்..! இதெல்லாம் எங்கே போய் முடியுமோ..!
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் சகோ.
//arumaiyaga koori erukirergal//---எல்லா புகழும் இறைவனுக்கே.
(அல்ஹம்துலில்லாஹ் என்று அரபியில் கூறினால் மதவெறியாம்..! :-))
@அதிரை சித்திக்//உள்ளதை சொல்கிறேன்
மன்னிக்கவும்//----இதை நீங்கள் அதிரை சித்திக் என்ற பெயரில் சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் சகோ. சோ... நோ... ப்ராப்ளம். அவங்க கிட்டேருந்து தப்பிச்சிட்டீங்க.
@மவுலாசா// திசை திருப்பும் தில்லுமுல்லு - திருகுதாள பின்னூட்டங்களுக்கு - //---பதிவின் மையக்கருத்தை விட்டுவிட்டு எல்லாரையும் வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும் வித்தகர்கள் உள்ளனர். இதில்தான் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது சகோ.வுசாலா. நல்ல அவதானிப்பு. :-))
@RAZIN ABDUL RAHMANஅலைக்கும் ஸலாம் வரஹ்....
//சவுக்கை சுழற்ற ஆரம்பித்துவிட்டீர்கள்:...//---அட.. நீங்க வேற... :-)) சகோ.ரஜின், அவை மயிலிறகுகள்.... நல்லா பாருங்க சகோ..!
@jabeer t.l.mஅல்ஹம்துலில்லாஹ். ஆனாலும்... வம்பை விலைகொடுத்து வாங்க முன்வருகின்றீர்களே சகோ.ஜபீர்.
@Nasarஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.நாசர்,
//பல மேலை நாடுகளில் பல தனி நபர்களின் சமூக வாழ்வியல் மோசமாக இருந்தாலும், ஒரு இயக்கத்தின் தலைவனோ அல்லது பொது வாழ்கையில்
உள்ள பிரபலங்களின் குடும்ப சமூக வாழ்வியல் நேர்மையானதாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்கிறார்கள் அதைப் போலவே குறைந்தபட்சம் நாமும் எதிர்பார்கவேண்டாமா..!!!??//
-----மிகச்சரியான பாயின்ட்..!
"மன்னன்(வழிநடத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்) எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்று கூட பழமொழி படித்த நியாபகம்.
@அன்னு//பதில் வருமா பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்//---மீ ஆல்சோ வெயிட்டிங்... சகோ.அன்னு.
மா சலாம்.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 6//---சத்திய வார்த்தைகள் சகோ.ஆமினா...!
//நேர்வழி பெற பிரார்த்திப்பதை தவிர சொல்ல ஒன்னும் இல்ல....//---அவதூறுக்கு விளக்கம் சொல்லிவிட்டோம்..! கேட்காமல் தொடர்ந்து அவதூறு செய்தால்... என்ன செய்ய.... நீங்கள் சொன்னதைத்தான் இனி செய்ய வேண்டும்..!
@fairozekhanதங்களுடையது நல்ல கருத்துதான் சகோ.பைரோஸ்கான். பிறரின் இஸ்லாமிய அவதூறுக்கு விளக்கம் அளிக்கவே இப்பதிவு போடப்பட்டுள்ளது சகோ..!
@சிட்டுக்குருவிமிக அருமையான கேள்விகளும் கருத்துக்களும் வாதங்களும் வைத்துள்ளீர்கள் சகோ.சிட்டுக்குருவி. அனைத்தும் அருமை. மாஷாஅல்லாஹ்.
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் நெடிய பின்னூட்டத்தில்... மிக அருமையான கேள்விகளும், தக்க பதில்களும், தகுந்த விளக்கங்களும், நல்ல கருத்துக்களும் சரியான வாதங்களும் வைத்துள்ளீர்கள் சகோ.இப்ராஹீம் ஷா. அனைத்தும் அருமை. மாஷாஅல்லாஹ்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எப்படி எப்படியெல்லம் காரணத்தை எடுக்கிறார்கள் என்பதை இந்த பதிவு தெளிவாய் உரைக்கிறது.
அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி வழங்கவேண்டும்.//----இப்படித்தான் நாம் பிரார்த்தனை புரிகிறோம் சகோ.குலாம், அவர்களுக்காக.... இறைவன் நாடட்டுமாக.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அறிவை மெருகூட்ட தான் ஆன்மிகம் பயன்பட வேண்டும். //--சரியான கருத்து சகோ.சேக்தாவூத்.
//அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இதிலிருந்து விதிவிலக்கா?//--பார்ப்பனர்களுடன் சேர்ந்து நம்மை எதிர்க்கும் அந்த நாத்திக முகமூடி பதிவரும் (இவர் பிராமின் என்று சொல்லவே மாட்டாராம்)ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்..! செம கூட்டணிதான்... :-)) சகோ.ஷேக்தாவூத் அதை கவனித்தீர்களா..?
@Nizam// "சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்!" என்ற சகோ. சுவனப்பிரியன் பதிவில் சொல்லயிருக்க வேன்டியாது தானே இது எங்களுடைய மதம் சார்ந்தது என்று இதில் சூரிய நமஸ்காரமும் முசால்மான் என்ன வேலை என்று.//-----ம்ம்ம் சரியான கேள்வி... நன்றாக நியாபகம் வைத்து கேட்கிறீர்கள் சகோ.நிஜாம். இதற்கெல்லாம் ஹி,,ஹி.. பதில்....? மெளனம்..!
@அரைகிறுக்கன்//நீங்கள் ஏன் கணவனை இழந்த பெண்களின் மருமணத்தைப் வலியுறுத்தவில்லை.//---கிழிஞ்சது.... பெயருக்கேற்ற கேள்வியோ..?
"போர் விதவை" என்ற பதத்திற்கு அர்த்தம் தெயர்யாதா சகோ..? கணவனை போரில் இழந்த பெண்... போர் விதவை...! அவரின் மறுமணத்தை பற்றித்தான் பதிவு..! அதில்...ஈழத்தில் சிலதாரமணம் தீர்வு என்கிறேன்..!
இப்படியும் கேட்பார்கள் என்று நினைத்துப்பார்க்கவே இல்லை..! ஹூம்..!
@Issadeen Rilwan - Changes Do Clubஹி..ஹி... அவர்கள் என்ன நினைக்கிறார்களோ... இறைவனே அறிவான்.
ஆனால்,
சகோ.ரில்வான்,
பிரம்மச்சர்யம் இயற்கைக்கு மாறானது...
நடைமுறைக்கு ஒவ்வாதது...
பின்பற்ற இயலாதது...
என்ற இஸ்லாமிய கருத்து மட்டும் நிதர்சனம்..! இதை நிருபித்து விட்டார்கள்..!
அன்புள்ள சகோஸ்...
இங்கே வருகை புரிந்து பதிவை வாசித்து பின்னூட்டம் இட்டு கேள்விகள் கேட்டு பாராட்டி வாழ்த்தி பிரார்த்தித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பற்பல..!
ஏக இறைவனை நிந்தித்து, முஸ்லிம்கள் மதிக்கும் இறைத்தூதரை ஒருமையில் திட்டி, அவர்களையும் அன்னாரது குடும்பத்தினரையும் கிண்டல் கேலி அவதூறு போன்று அல்லாமல்.... இஸ்லாம் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், அவை எப்போதும் வரவேற்கப்பட்டு பதில் அளிக்கவே நாம் விரும்புகிறோம்..!
சத்தியம் வரும் அசத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும்-அல் குர்ஆன்
பாராட்டுதலுக்குரிய கட்டுரை வாழ்த்துகள் சகோ.......
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 to 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள் . அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!