நான் கடந்த ஆறு வருடங்களாக சவூதியில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது. :-( மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்..! உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது..! :-( இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன். :-(
ரமலானில் வளைகுடா நாடுகளில் உள்ள உணவு வீணாக்கல் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த அரப் நியுஸும் அதற்கு முன்தினம் வந்த யாஹூ நியுஸும் இதையேதான் உறுதிப்படுத்தியது. துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..! இதுவே அபுதாபியில் 500 டன் என்ற அளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..! பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறது அந்த செய்தி. இந்த அளவுக்கு இல்லை எனினும் சவூதி அரேபியாவிலும் ஓரளவு இப்படித்தான், எனது கண் முன்னே நடக்கிறது.
.
.
UAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார்.
.
.
The General Authority of Islamic Affairs and Endowment (Awqaf) என்ற அமைப்பு தங்கள் "Think before you waste" என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர புறப்பட்டுள்ளனாராம்.
.
உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இவர்கள் உணரவேண்டும்..!
வீம்புக்காக விண்ணை முட்டும் அதிஉயர ஆடம்பர சொகுசு மாளிகைகளை கட்டிக்கொண்டு வீண்விரையம் செய்வோரை மிகக்கடுமையாக சாடுகிறது இஸ்லாம்.
இவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்...
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது...
''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)
இப்படி சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டே இந்த அளவுக்கு இவர்கள் உணவுபொருட்களை வீணடிக்கின்றனர் எனில் அதற்கு காரணம் இவர்களிடம் தலையில் ஏறி அமர்ந்திருக்கும் செல்வச்செருக்கு அன்றி வேறென்ன..? இதைக்கூட நபி(ஸல்...) அப்போதே சொல்லிக்காட்டியும் விட்டார்கள்.
வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
'அவர்கள் வாங்குகிறார்கள்... அவர்கள் வீணடிக்கிறார்கள்... நமக்கென்ன' என்று நாம் சும்மா இருக்க முடியாது சகோ..!
.
.
உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.
.
உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும் சகோ..!
உணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும் அல்லவா சகோ..!
யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. ஆனால்... சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (எம்மதமாக இருப்பினும்) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம்.
.
.
''அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..!" என்று கருணை நபி (ஸல்...)அவர்கள் தான் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)
தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது, "இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா..?" என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார் என்று நபி (ஸல்...) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ)
.
.
ஆக... இந்த வளைகுடா பணக்கார நாட்டு அண்டைவீட்டாரும் செல்வம் படைத்தோராகவே இருந்தால் என்ன செய்வது..?
இந்த பணக்கார வளைகுடா நாடுகளின் அண்டை நாடுகள் ஏழை ஆப்ரிக்க ஆசியநாடுகள் அல்லவா..? அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டாமா..?
.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-.
"தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.''
(நூல்-முஸ்னத் அபூ யஃலா)Thanks :- For photos and News - Arabs wasting food
Farhanaization, Arabnews, Yahoo news, http://www.alriyadh.com/
37 ...பின்னூட்டங்கள்..:
மிகவும் உபயோகமான பதிவு நண்பரே , நீங்க சொல்வது சரி , மிக்க நன்றி
@karurkirukkanதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.கரூர்காரரே..!
அவசியம் மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம்தான். அரபிகள் எல்லாருமே இப்படித்தாணா? அரபிகள் வீணடிக்கும் உணவுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். இதில் ஐநா சபை மூக்கை நுழைத்தால் நலம். சோத்துப்பஞ்சம் வாறதுக்கு இந்தியாகாரங்க நிறைய சாப்பிடுவதே காரணம்னு முன்னாடி ஜார்ஜ் புஷ் சொன்னாரே. எங்கேயா அந்த ஆள்? அவர் இதெல்லாம் கண்டுக்கற மாட்டாரா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
இமையோரத்தில் நீர் கசிய செய்த
இதயத்தை பிழியும் பதிவு.
UAE Red Crescentஅமைப்புக்கு எமது பாராட்டுக்கள், திருக்குர்ரானில் தெளிவாகக் கூறியிருந்துமா? இப்படிச் செய்கிறார்கள்.
மதக் கருத்துக்களுக்கு மாறாக நடப்பதில் எந்த மதமும் விதிவிலக்கல்லப் போலும்.
என் பணத்தில் வாங்கியதை நான் எதுவும் செய்வேன், எனும் மனநிலை செல்வந்தர் பலருக்கு
உண்டு.
மசூதிகளில் தொழுகையின் பின், மொலவிகள் மூலம் இதை தினமும் அறிவுறுத்தலாம்.
நான் அறிந்து இந்தியாவில் முஸ்லீம்கள் ரம்ஜான் நோன்பை மிகச்சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.ரயில் பயணத்தில் ஒருவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியும் கூட மறுத்து விட்டார்.பின் மாலை நேர உணவு அருந்தும் போது தான் விரதமிருப்பதாக தான் கொண்டு வந்திருந்த எளிதான உணவை அருந்தினார்.
இந்தியாவில் ரம்ஜான் கஞ்சி மற்றும் பிரியாணி,கொஞ்சம் இனிப்பு என்ற அளவில் உணவை முடித்துக்கொள்கிறார்கள் பொதுவாகவே.
வளைகுடா நாடுகளில் ஏனைய மாதங்களை விட நோன்பு மாதத்தில் உணவு தயாரிப்புக்கள் அளவுக்கு அதிகமே.நான் கூட பகலில் உண்ணாமல் மாலையிலிருந்து அதிக உணவை உண்கிறேன்.நண்பர்கள் சுற்றத்தில் ஏதாவது புது தயாரிப்புக்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.குவைத் பத்திரிகையொன்று கூட Fasting or Feasting? என்று தலையங்கம் போட்டிருந்தது.இது தவிர வருடம் பெங்களாதேசிகள் போன்ற துப்புரவு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மசூதிகளில் கிடைக்கும் ரம்ஜான் கால பிரியாணி ஏனைய பதார்த்தங்கள் இவர்களுக்கு வருடத்தில் ஒருமுறையிலான வரபிரசாதமே.அந்த விதத்தில் உண்டி குடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணங்க இஸ்லாத்தின் ஈகை குணம் வரவேற்கபட வேண்டியதே.
மதம் என்ற ஒரே கோணத்தில் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் சிந்திக்காமல் மதம் உட்பட பொதுவான பகிர்வுகள் என்ற இஸ்லாமிய சகோதரர்களின் கருத்துக்களை ஆதரிக்கிறேன்.நன்றி.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
உங்கள் பதிவு வீன்விரயத்தின் அபாயங்களை அழக்காக எடுத்து காட்டியுள்ளது.படங்கள் எல்லாம் மனதை கணக்க செய்தது. இனி நானும் வீட்டுக்கு உணவு வாங்கும் பொது கூட கவனமாக இருக்க அல்லா உதவி செய்வானாக ஆமீன்.
தவிர இங்க நம்ம நாட்டுல நடக்குற ஆடம்பர திருமணங்களில் வீணாகும் உணவுகளை பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.புள்ளி விபரங்கள் அதிர்ச்சி அளித்தன சகோ ..அரபியர்கள் மட்டும் அல்ல நாம் அனைவருக்குமே உபயோகமான பதிவு ...
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்
உரிய நேரத்தில் வந்த உயரிய அவசியம் பின்பற்ற வேண்டிய கருத்துகள் சகோ
@neethimaan//அரபிகள் எல்லாருமே இப்படித்தாணா?//---எல்லாரும் அப்படியல்ல சகோ..!
முக்கால்வாசிப்பேர் இப்படித்தான்..! :(
//ஐநா//
//ஜார்ஜ் புஷ்//
---இதெல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
மக்கள் தாங்களாகவே இறையச்சம் கொண்டு மனம் திருந்தி வீண்விரையத்தை குறைத்து தர்மத்தை அதிகப்படுத்தி வாழ்தலே இதற்கு உள்ள ஒரே நீதி... ஒரே தீர்வு... சகோ.நீதிமான்..!
ASSALAMU ALAIKKUM BROTHER.
ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில்...
அரபு தேசத்து ராஜாக்கள் மரபு மீறி நடக்கையில் வேதனையாக இருக்கின்றது சகோ.
ஒரு பக்கம் பசியின் கொடுமைக்கு பல்லாயிரம் மக்கள்கள் மாண்டு கொண்டு இருக்கின்றர்கள் மறு பக்கமோ ஆனவ கூத்தாடி அதில் பலர் ஒன்று கூடி வீண் விரயம் செய்வதை பார்க்கும் போது நெஞ்சு பொருக்கவில்லை.
ஆதி பிதா ஆதம் முதல் நியதி சதா இன்றைய மனிதன் வரை பசியை பொறுக்க முடியாது,ஏழையின் வறுமையும் அவர்களின் பொறுமையையும் காணும்போது,அரபு சேக்குகள் மீது கோபம் கோபமாக வருகின்றது.
மணல் ரொட்டியை உண்டு மாண்டு போன சோமாலிய குழந்தைகளின் ஃபோட்டோவை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது.
அபுதாபி மன்னர் வாரி வழங்கும் வள்ளல் என்பது எல்லா ராஜியத்தினருக்கும் தெரிந்த விசயம்,துபாய் பொருளாதர வீழ்ச்சியில் சரிந்த பொழுது,துபாயை விற்றால் கூட அந்நாட்டின் கடனை அடைக்கமுடியாத சூழ்நிலையிலேயும் தமது மச்சானின் மானத்தை காப்பாற்றினார் கலீஃபா.
இப்பொழுது புனித ரமழான் மாதத்தில் உணவு பொருள்கள் வீண் விரயம் ஆகுவதை பார்க்கும் போது இறைவனிடமிருந்து இஸ்லாமிய நாடுகள் எதோ ஒரு பெரிய சோதனையை எதிர் நோக்கி போகப்போகிறது என்பதே உண்மை.
நல்லதொரு பதிவு சகோ வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சகோ.முஹம்மத் ஆஷிக்,
நானும் குவைத் வந்த ஆரம்பகாலங்களில் இப்படி வீணாகும் உணவு பொருள்களை கண்டு அதிர்ச்சி அடைந்ததுண்டு.அதே நேரம் இந்திய சாலையோர மக்களின் உணவையும் ஒப்பிட்டு வேதனைஅடைவேன்!அதன் பிறகு மிச்சமிருக்கும் உணவுகளை சில நண்பர்களிடம் கொடுப்பேன். என்றாலும் பசியோடு இருப்பவரிடம் கொடுத்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பதுண்டு.
இந்த ரமலான் காலகட்டதில் ஆப்ப்ரிக்காவில் பசியோடு அல்லறும் எமது சகோதர ச்கோதரிகளுக்கு அனைத்து நாடுகளும் உதவியும் கூட அவர்களுக்கு 20 சதவீதம் தான் கிடைத்துள்ளது. இன்னும் அவர்களது தேவை 80சதவீதம்.
ஆக அரபுநாடுகள் அண்டை வீட்டாரை பற்றி இன்னும் அதிகம் அறிய வேண்டியுள்ளதோ ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ கலக்கல் பதிவு கைகுடுங்க சகோ
“இறைவழியில் எவற்றை செலவு செய்ய வேண்டும் என அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளச் செலவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுவீராக” குர்ஆன் 2:219
அல்லாஹ் இந்த வசனத்தில் தேவைக்கு போக மீதமுள்ள அனைத்தையும் எழைகளுக்கு பிறருக்கும் கொடுக்க சொல்லுகிறான்.
ஆனால் இவர்கள் அநியாயமாக விரயம் செய்து புதைக்கிறார்கள்.
நல்ல பதிவு நன்றி சகோ
மிக நியாயமான கோரிக்கை. இதை நானும் பலமுறை கண் கூடாக கண்டிருக்கிறேன்.
பொதுவாக சவுதிகளுக்குள்ளேயே இது பற்றி கருத்துவேறுபாடுகள் அதிகம் இருக்கிறது. வசதி படைத்த சவுதிகளுக்கு மத்தியில் குடும்பத்துக்கு உணவு மற்றும் உடைகள் வாங்க வசதியில்லாத சவுதிகள் முழி பிதுங்கி திரிவதையும் பார்த்திருக்கிறேன்.
அருமையான பகிர்வு சகோ.
சலாம் சகோ
ரொம்ப கொடுமையான விஷயம் தான்... புகைபடங்களை ஒப்பிடும் போது கண்ணில் நீரே வந்துவிட்டது :(
ஸலாம் உண்டாகட்டும் சகோ..
நீங்கள் சொன்னது யாவும் உண்மையே,, "உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்" என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள் ஆனாலும் அவர்கள் வழிவந்த இந்த அரபிகள் இதை பினபற்றுவதாய் தெரியவில்லை
எல்லாத்துக்கும் காரனம் பணம்தான்.. நல்ல கட்டுரை
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்நிலை இருந்தது உண்மை தான் சமீப காலமாக அரபுநாடுகளிலும் விலைவாசி உயர்வால் பெரும் மாற்றம் வந்துவிட்டது முழுக்க முழுக்க இல்லாவிட்டாலும் இப்போது கொஞ்சம் நிதானம் வந்து விட்டது.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
{சுபுஹானல்லாஹ்}உண்ணுங்கள்,பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் இறைவன் கூறியதை சவூதி மக்கள் அறியாததா.எல்லாம் பணம் தான் காரணம். அருமையான பதிவு சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் ரியாத்தில் இருந்த ( 1999 to 2002 ) போது கண்டதில் சவுதிகள் அரிசி உணவை ( கப்ஸ,மந்தி,பிரியாணி) வீணடிப்பது போல் ரொட்டியை வீணடிப்பது கிடையாது மேலும் பெரும்பாலான சவுதிகள் ரொட்டியை வீணடிப்பதை கண்டால் கண்டிப்பார்கள் பண்டைய கால சவுதிகளின் பிரதான உணவு ரொட்டி என்பதினால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உணவு பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையே அவர்கள் அரிசி உணவை வீண் செய்கிறார்கள்
உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இவர்கள் உணரவேண்டும்..!
uae red crescent செய்வது போல தேவையான வர்களுக்கு வழங்கலாமே.
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இமையோரத்தில் நீர் கசிய செய்த//---இன்னும் கதறி அழ வைக்கும் போட்டோக்களும் பார்த்தேன் சகோ,வாஞ்சூர்... அதனை பகிர ரொம்ப கஷ்டமாக இருக்கிறது..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.
@யோகன் பாரிஸ்(Johan-Paris)
ஒவ்வொரு தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கத்தை கட்டமைக்கிறது.
அதற்காக... நினைவூட்டும்பொருட்டு திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.யோகன்.
@ராஜ நடராஜன்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ராஜ நடராஜன்.
@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நம்ம நாட்டுல நடக்குற ஆடம்பர திருமணங்களில் வீணாகும் உணவுகளை பற்றி//---ஆமாம் சகோ.ரியாஸ்
நம்மூரில்... திருமண விழாக்களின் போது சரியான திட்டமிடல் இல்லாமல் இப்படி ஆவது உண்டுதான். ஆனால், அரபுலகில் தினம் தினம் சாதாரணமாக வீட்டில் கூட இப்படி ஆகிறதே என்பதே மன வேதனை.
//அரபியர்கள் மட்டும் அல்ல நாம் அனைவருக்குமே உபயோகமான பதிவு//---நிச்சயமாக..!
(இந்த பதிவு அரபியருக்கு மட்டும்தான் என்றால்... இதை நான் அரபியில் அல்லவா எழுதி இருக்க வேண்டும்..?)
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி சகோ.
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...
//மாண்டு போன சோமாலிய குழந்தைகளின் ஃபோட்டோவை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது.//---உயிரற்ற எலும்புக்கூடா உயிருள்ள மனிதனா என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு புகைப்படங்களை பார்த்தபோதும்...
அதை எல்லாம் பகிர மனம் கனக்கிறது சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோ.அய்யூப்.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இன்னும் அவர்களது தேவை 80சதவீதம்//
//பசியோடு இருப்பவரிடம் கொடுத்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பதுண்டு.//
---ஆமா.. ஆமா.. மிகச்சரி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோ.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அரபியில் பொருளுணர்ந்து இறைவார்த்தைகளை படித்திருந்தும்...
பல அரபிகள் அவற்றில் இப்படி பாராமுகமாக இருப்பது கவலை தருகிறது சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோ.
@சிநேகிதன் அக்பர்
//வசதி படைத்த சவுதிகளுக்கு மத்தியில் குடும்பத்துக்கு உணவு மற்றும் உடைகள் வாங்க வசதியில்லாத சவுதிகள்...//
---இதற்காக மில்லியன் கணக்கில் லோன் வேற வாங்கிவிட்டு...
//முழி பிதுங்கி திரிவதையும் பார்த்திருக்கிறேன்.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோ.சிநேகிதன் அக்பர்.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
இதுக்கே இப்படியென்றால்... சாப்பிட உணவே இன்றி எலும்பும் தோலுமாக வாடும் அந்த ஆப்ரிக்க மக்களின் -பார்ப்போரை அழவைக்கக்கூடிய- புகைப்படங்களை எல்லாம் பொதுவில் பகிர ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சகோ..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோ.ஆமினா.
@Riyasதங்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும் சகோ.ரியாஸ்,
//இந்த அரபிகள் இதை பினபற்றுவதாய் தெரியவில்லை. எல்லாத்துக்கும் காரனம் பணம்தான்..//---தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.ரியாஸ்.
@மஸ்தூக்கா //சமீப காலமாக அரபுநாடுகளிலும் விலைவாசி உயர்வால் பெரும் மாற்றம் வந்துவிட்டது//
---விலைவாசி உயர்வுதான் ஒரு மனிதனிடம் இந்த விஷயத்தில் நல்லொழுக்கத்தை கொண்டுவருமேயானால் அந்நிலை மிகவும் துயரமானது சகோ.மஸ்தூக்கா..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இறைவன் கூறியதை சவூதி மக்கள் அறியாததா.எல்லாம் பணம் தான் காரணம்.//---தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.ஆயிஷா அபுல்.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ரொட்டியை வீணடிப்பது கிடையாது மேலும் பெரும்பாலான சவுதிகள் ரொட்டியை வீணடிப்பதை கண்டால் கண்டிப்பார்கள்//
---ஆமாம்..! ஒரு ரியாலுக்கு 10 என்று விற்கப்படும் "குப்புஸ்" எனும் அந்த ரொட்டியை கால்வாசியோ பாதியையோ யாரும் வீணாக்கினால்கூட அரபிகளுக்கு கடும் கோபம் வரும். :)
ஆனால், அதைவிட கிலோ பத்து ரியாலுக்கு வாங்கப்பட்ட பாசுமதி அரிசி சோறை கால் சஹான் அரை சஹான் என்று இறைச்சியுடன் அல்லது ஒரு முழு கோழியுடன் யாரேனும் கொட்டினால்கூட எவருமே கண்டுகொள்வதில்லைதான்... :(
//உணவு பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையே//
---சரியாக சொன்னீர்கள் சகோ.ரப்பானி..!
@Rabbani//உணவு பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையே//
---சரியாக சொன்னீர்கள் சகோ.ரப்பானி..!
முன்னெல்லாம் நானும் உடன் பணியாற்றும் அரபிகளுடன்தான் சேர்ந்துதான் சஹானில் உணவருந்துவேன். விரையமாவதற்கு எதிராக எவ்வளோவோ சொல்லிப்பார்த்தும் கேட்காத காரணத்தால்...
"நாம் ஏன் அந்த பாவத்தில் உடந்தையாக இருக்க வேண்டும்" என்று இப்போதெல்லாம் நானும், ஒரு பீஹாரியும் இன்னும் ஒரு பாகிஸ்தானியும் சஹர்.. இஃப்தார்... என ஷிப்டில் தனித்துதான் உண்ணுகிறோம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.Rabbaani.
என்ன சொல்ல, மிகவும் மனம் வருந்தச் செய்யும் விஷயம் பாய். வீண் விரயத்திற்கு எதிராகவும், கஞ்சத்தனமும் இல்லாமல், ஊதாரித்தனமாகவும் இல்லாமல் மிதமாக செலவை வைத்துக்கொள்ளச்சொல்லும் மார்க்கத்தில் வாழ்ந்து, உலகிற்கே முன்னுதாரணமாய் வாழ வேண்டிய நம் உம்மத்தே இப்படியான பழக்கத்திற்கு ஆளானதை காணும்போது, உண்மையில் வெட்கி தலை குனிய வேண்டியதாகிறது. இங்கேயும் மஸ்ஜித்களில் இஃப்தாரில் இப்பொழுதுதான் சிக்கன நிலையை கொண்டு வருகிறார்கள். செல்வமுள்ள மேனேஜ்மெண்ட் என்றால் இரண்டு மூன்று ஃப்ரிட்ஜாவது உள்ளது. அதைக் கொண்டு வீணாக்காமல் அதில் வைத்து விடுகிறார்கள். பின் செஹ்ரில் அந்த உணவுகளை யாரேனும் தமக்கென தேவையான அளவு எடுத்துக் கொள்கின்றனர். அப்படியே தீர்ந்து விடுவதும் உண்டு. அப்படி தீராவிட்டால் அடுத்த இஃப்தாரில் அதை, முதலில் காலியாக வேண்டும் என்று முந்திய வரிசையில் வைத்து விடுவார்கள். இங்குள்ள அரபுகள் இந்த விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பதையே காண்கிறேன். இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு ரமதானும் ஒரு மாற்றத்தை கொண்டு வரட்டும் என்றே து’ஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
@அன்னு//இங்குள்ள அரபுகள் இந்த விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பதையே காண்கிறேன்.//---மிகவும் நல்ல செய்தி.
//இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு ரமதானும் ஒரு மாற்றத்தை கொண்டு வரட்டும் என்றே து’ஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.//---ஆமீன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.அன்னு.
நல்ல தகவல், இன்ஷா அல்லா இது மாறும் விரைவில்
//இன்ஷா அல்லா இது மாறும் விரைவில்// தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.சக்தி
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!