நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில் குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும். நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார் என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும். அந்த நேரம் வந்தவுடன் மேலே படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது கடினம்..!)
கயிற்றை கையில் பிடித்திருப்பவருக்கும் முத்து கிடைத்தால் பங்கு உண்டு என்பதால், "நம்ம பங்காளி உள்ளே இருக்க இருக்க நமக்கு லாபம்தானே" என்று கயிற்றை இழுக்காமல் விட்டு வைத்திருப்பவராக இருக்ககூடாது அல்லவா..? இது ஒரு ரிஸ்க்கான வேலை. உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்..! 'தன் சகோதரி விதவை ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம் மச்சினன் என்பதால்..! வேறு யாரையும் நம்பி முத்துக்குளிப்பவர்கள் கடலினுள்ளே குதிப்பது கிடையாதாம்..!
பிற்காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டினால்... இன்னும் அதிக நேரம் சிப்பிகளை சேகரிக்கலாம். இதனால், இன்னும் வெயிட் ஏறும். இதனாலும், கட்டி தூக்க கயிறும் அவசியம். எனவே, மச்சினனும் அவசியம்.
இப்போது... சேகரித்த சிப்பிகளை உடைத்துப்பார்த்தால்... 400 கிலோ சிப்பிகளில் ஒன்றோ அல்லது இரண்டோதான் முத்துக்கள் கிடைக்குமாம்.
ஆக, இந்த அனைத்து சிப்பிகளிலும் முத்துக்கள் இருந்தால்...? முத்துக்கள் இருந்தால்...? இருந்தால்...? எப்பூ....................டி இருக்கும்........?
இதற்குத்தான் வந்தது நவீன தொழில்நுட்பம்..! அது பற்றி அறியும் முன், சிப்பிகளில் முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்து விடுவோம்...?
.
தங்கம், வைரம் போன்று மண்ணிற்குள்ளிருந்து கிடைக்கும் உயிரற்றவை போல அல்ல முத்து. உயிருள்ள OYSTER என்ற சிப்பிகளின் வயிற்றில் பிறக்கின்ற இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து..! கடலில் உள்ள சில உயிருள்ள ஒட்டுண்ணிகள் (parasites) சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச்சென்று விடுகின்றன. அப்போது, சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, அதனிலிருந்து சிப்பி நிவாரணம் பெற, தற்காப்புக்காக நாக்கர் (nacre) திரவத்தை அந்த வேண்டா விருந்தாளியின் மீது பொழியும். அவ்வாறு பொழியும் போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக பின்னர் மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாக மாறி விடுகிறது. இந்த நாக்கர் திரவம் என்பது கால்சியம் கார்போனேட் என்ற ஒருவகை உப்பு.! இந்த நாக்கர் திரவம் சிப்பியின் ஒவ்வோர் வகைக்கும் ஒவ்வோர் வண்ணமாக இருப்பதால், வெள்ளை, கருப்பு, நீலம், சிகப்பு என பல வண்ணங்களில் இருந்தாலும் தங்கநிற முத்து மட்டுமே விலை மதிப்பு வாய்ந்ததாம். இதுபோல உருவானால் அவை (நேச்சுரல்) 'இயற்கை முத்துக்கள்' எனப்படுகின்றன.
இனி... முத்துக்குளிப்பில் அதிநவீன(?) தொழில்நுட்பம்:- இதில், உருத்தல்தரும் புல்லுருவிகள் தானாக நுழையாமல், செயற்கையாக சிப்பிக்குள் நுழைக்கப்படுகின்றன. பின்னர், முத்துக்கள் முழுமையாக சிப்பியினுள் உருவாகும் காலம் அறிந்து, அதுவரை பொறுமையாக காத்திருந்து, 'அறுவடை' செய்யப்படுகின்றன..! இவை (கல்ச்சர்ட்) 'வளர்க்கப்படும் முத்துக்கள்' எனப்படும்.
'ஜ்வெல்மர்' என்ற உலகின் ஒரே ஒரு நிறுவனம்தான் முத்துக்களிலேயே மிக விலையுயர்ந்த வகையான "தங்க நிற முத்துக்களை" வளர்த்து உருவாக்குகின்றது. இந்நிறுவனம் தன் பலவருட உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பலனாக இதை சாதித்து இருக்கின்றது. இதற்கென ஒரு உயர்ந்த வகை சிப்பி (பிங்க்டேட்டா மேக்ஸிமா) ஒன்றை தேடிக்கண்டுபிடித்து...
(அது சுமார் அரையடி அலத்திற்கு உள்ள!) அவ்வகை சிப்பி, உலகில் அதிகம் வாழும் இடத்தையும் ஃபிலிப்பைன் கடலில் கண்டுபிடித்து... அங்கே சொந்தமாய் ஒரு தீவையும் வளைத்துப்போட்டு...
தன் 'முத்து தொழிற்சாலை'யை (அதாவது... முத்துச்சிப்பி வளர்க்கும் கடல் பண்ணையை) அங்கே... இப்படி ஜம்பமாய் அமர்த்திக்கொண்டு....
(இதுதான் 'முத்துப்பண்ணை')
(இதுதான் 'முத்துப்பண்ணை')
(இவர்தான் ஜாக்..!)
முதலில் கடலடியிலிருந்து அந்த குறிப்பிட்ட வகை சிப்பிகளை சேமிக்கின்றனர்.
அதனை கயிறுகட்டி இழுத்து தூக்கி படகில் அள்ளிப்போட்டுக்கொள்கின்றனர்.
பின்னர் சேகரித்த சிப்பிகளை சோதனைச்சாலையில், இந்த அறிவியல் தொழில் நுட்பவாதி ஏதோ ஒரு சரியான புல்லுருவியை சரியான அளவில் சரியான இடத்தில் உள்ளே செலுத்துகிறார். அதை மேற்பார்வை இடுகிறார் ஜாக்.
பின்னர் அனைத்து சிப்பிகளும் எண்ணப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டு பாதுக்காப்பாக ஸ்டீல் வலைத்தட்டிகளில் பிணைக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் வளரவிட... வாழவிடப்படுகின்றன..!
இந்த முத்துப்பண்ணைக்கு கடும் பாதுகாப்புகள் உண்டு.
கடலினுள்ளும் அவ்வப்போது பாதுகாப்பு..! முத்துக்கள்.., என்றால் சும்மாவா..?
குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் மீண்டும் அவை கடலில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்புடன் சோதனைச்சாலைக்கு கொண்டுவரப்படுகின்றன.
முதலில் மிக பாதுக்காப்பாக உடைந்துவிடாமல் முத்துச்சிப்பிகளை ஸ்டீல் வலையிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள்.
பின்னர் சோதனைச்சாலையில், சிப்பிகளிலிருந்து, முத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி முத்தை நயமாக வெளியே எடுக்கிறார்கள்.
அப்பப்பா..! எவ்வளவு முத்துக்கள்..! மாஷாஅல்லாஹ்..! என்ன அழகு..!
இனி... முத்துக்களின் கண்(கொள்ளா)காட்சிகள் தான்..!
இனி... முத்துக்களின் கண்(கொள்ளா)காட்சிகள் தான்..!
.
பெரும் களிப்புடன் வார்த்தையில்லா உவகையில் ஜாக்.
அவை அனைத்தும் உறையிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன..!
சரி, இந்த முத்துக்கள் எப்படி, எதற்கு, உபயோகப்படுகின்றன..? ம்ம்ம்.... எல்லாமே பெரும்பாலும் பெண்களுக்காகத்தான்...
அவர்கள் விதவிதமாக... நகைகளாக இப்படி... அழகு ஆபரணங்களாக செய்து அணிந்துகொண்டு...
அவர்கள் விதவிதமாக... நகைகளாக இப்படி... அழகு ஆபரணங்களாக செய்து அணிந்துகொண்டு...
பெருமையாக தங்களை மேலும் அழகு காட்டிக்கொள்ளத்தான், இந்த முத்துப்பண்ணையில் இவர்களின் இந்த படாதபாடுபட்டு உழைப்பதெல்லாம்..!
.
.
சரி..., முத்துக்கள் எடுக்கப்பட்ட அந்த சிப்பிகளெல்லாம் என்னவாகும்..? அதையும்கூட காசாக்காமல் விட்டுவைப்பதில்லை ஜாக்..! அவையனைத்தும், உடைக்கப்பட்டு உள்ளே உள்ள 'உணவாகும் மேட்டர்' மட்டும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, அவை நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டு,
குளிர்படுத்தப்பட்ட ஐஸ் பெட்டிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு பிபிப்பைனி-சைனீஸ் ஹோட்டல்களுக்கு மிக நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.
இதற்கு சுவைப்பிரியர்களிடம் படு டிமாண்டாம்..!
"சிப்பி 66..?"
இதற்கு சுவைப்பிரியர்களிடம் படு டிமாண்டாம்..!
"சிப்பி 66..?"
முத்துக்களுடனும் சிப்பிகளுடனும் முத்துப்பண்ணை தீவிலிருந்து இப்போது விடை பெறுகிறார் ஜாக்..! இனி அடுத்த 'முத்து மகசூலுக்கு' திரும்பிவருவார்..!
ஹலோ..! சகோ..! என்ன..? நீங்க எங்கே கிளம்பிட்டீங்க..?
முத்துக்குளிக்கப்போறீஈஈகளா..?
.
முத்துக்குளிக்கப்போறீஈஈகளா..?
.
30 ...பின்னூட்டங்கள்..:
மிக சிறந்த தகவல் .....எனக்கு நீச்சல் கூட தெரியாது இந்த பதிவை படித்ததும் முத்து குளிச்ச எப்பெக்ட் . நன்றி சகோ . வாஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாஷா அல்லாஹ். முத்துக்குளிப்பது பற்றி விரிவான தேவையான விஷயங்களை பகிர்ந்தததற்கும், அதற்கான முயற்சிக்கும் நன்றியும், பாராட்டுக்களும்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக
தங்க நிற முத்துக்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள். படங்களுடன் அருமையான விவரிப்பு. பகிர்வுக்கு நன்றிங்க.
படிக்கச் படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...பல தகவல்களை அறிந்துகொண்டேன்...நன்றி...
இதுவரை அறிந்திராத பல அரிய தகவல்களை கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ.
@ரியாஸ் அஹமதுவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ் அஹமது. //எனக்கு நீச்சல் கூட தெரியாது//--தவறு. இது நாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் சகோ..! அவசியம் கற்றுக்கொள்ளுங்கள்.
சலாம் சகோ. அருமையான தகவல்கள்! அழகான முத்துக்கள்! அப்படியே எங்கே இவற்றை (சீப் ரேட்டில்) வாங்கலாம் என்ற தகவலும் கிடைத்தால் சொல்லிடுங்க :)))
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.
@Chitraதங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.சித்ரா.
@NKS.ஹாஜா மைதீன்தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜா.
@சிநேகிதன் அக்பர்தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.அக்பர்.
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி, சகோ.அஸ்மா.
உங்கள் கேள்விக்கு பதில்:
இப்பதிவில் உள்ள 'ஜ்வெல்மர்' சுட்டியை அழுத்தி... அங்கே where to find us சென்று...அதில், international சென்று... அதில், search by location-ல் France தேர்வு செய்து... அங்கே விசாரிக்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான தகவல்களுடன், மிக அழகான படங்களுடன் கூடிய நல்லதொரு பதிவு. அல்ஹம்துலில்லாஹ். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
பல கிடைக்க முடியாத தகவல்களை எல்லாம் இப்போ தான் அறிந்து கொண்டேன். நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ.முஹம்மத் ஆஷிக்.
முத்துகுளித்தல் மிகவும் ஆபத்தான தொழில். இதில் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்களே என்று நினைப்பதுண்டு. ஆனால் பதிவையும் படங்களையும் பார்க்கும்போது நானும் கடலில் குதிக்கவேண்டும்போல் ஹி....ஹி....
இதுவரை கேள்விப்படாத புதிய செய்தி. வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்!
அருமையான படங்கள். முத்துக்களைப் பற்றி முத்து முத்தான முத்தாய்ப்பான முதல் தர பதிவு. இது வரை நான் கேள்விப்படாத பல செய்திகள். பகிர்வுக்கு நன்றி தோழரே!
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சகோ.ஆஷிக்.
@balenoதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சகோ.பாலெனோ.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...தங்கள் வருகைக்கும் எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி, சகோ.மு.ஜபருல்லாஹ்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//
முத்துக்களைப்பற்றி
முத்து
முத்தான
முத்தாய்ப்பான
முதல் தர பதிவு. //---மாஷாஅல்லாஹ்...
தங்கள் வருகைக்கும் எதுகை-மோனை நய கருத்துக்கும் மிக்க நன்றி, சகோ.சுவனப்பிரியன்
really superungo!
@SADHAதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் Thanksungo!
அடேங்கப்பா.. என்ன ஒரு டீட்டெயில்டு போஸ்ட்?
@ சி.பி.செந்தில்குமார்
தங்கள் வருகைக்கும் எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி, சகோ.சி.பி.செ.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
உண்மையை சொல்லனும்னா, நான் பதிவை முழுவதுமாக படிக்கவில்லை. முதல் இரண்டு பத்திகளை படித்தபின் நேராக படத்துக்கு தாவிட்டேன். படங்களே அருமையாக விளக்குகின்றன. வாழ்த்துக்கள் சகோ.!
@Abdul Basithஅலைக்கும் சலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்.
You write non-islamic blogs also? I am surprised.
I wish you write more of these sorts, instead of spitting venom on non-islamic humans. (Ithukkum ethaavathu kutharkkama pathil vechirupeenga. But you know what you are.) Let me tell you, people like you make more enemies to Islam.
@Anonymous
சகோ.அனானி (உங்கள் ஊர் மேட்டர் என்பதால் வதுந்துட்டீங்களாக்கும்..! வருக.)
//non-islamic blogs //---?!?!?! எதை சொல்கிறீர்கள்..? முத்துக்குளித்தலா..? இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது ஒன்றும் அல்லவே..?
மேலும் இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறி. மனிதன் எங்கெல்லாம் செல்கிறானோ... அங்கெல்லாம் கூடவே வரும், 'இதை செய்...', 'இதை செய்யாதே...' என்று அறிவுறுத்திக்கொண்டு..!
ஒன்றில், எதுவும் சொல்லப்படவில்லை என்றால்... அது இஸ்லாத்தில் தடுக்கப்படாத விஷயம் என்று பொருள். அப்படி ஒன்றுதான் முத்துக்குளித்தல். அதை பகிர்வதும் அறிவதும்கூட... ஹி..ஹி..ஹி..
...இஸ்லாம்தான்...சகோ..!
இது... குதர்க்கமா சகோ..?
//Let me tell you, people like you make more enemies to Islam//--->முற்றிலும் தவறான கருத்து.
மாறாக, இக்கருத்தின் எதிர்மறையே சரி என்பதை என் வாழ்வில்-அனுபவத்தில் பலமுறை நான் உணர்ந்ததுண்டு.
salaam, excelent article lot of information about pearls
@bat
Wa Alaikkum Salaam Warah...
Thanks for visit and comment, சகோ.bat..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!